Advertisment

கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கும் கொள்கையில் மாற்றம்; அரசு பரிசீலனை

உண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்க தேவைப்படுபவர்களை மட்டும் சேர்க்க வேண்டும் என்று கொரோனா வைரஸ் நோயாளிகளைப் பராமரிப்பது தொடர்பான கொள்கையில் அரசு மாற்றத்தை மேற்கொண்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus covid 19, coronavirus treament india, கொரோனா வைரஸ், மருத்துவமனையில் அனுமதிப்பது கொள்கையில் மாற்றம், india government, coronavirus testing centres, india news,tamil indian express

coronavirus covid 19, coronavirus treament india, கொரோனா வைரஸ், மருத்துவமனையில் அனுமதிப்பது கொள்கையில் மாற்றம், india government, coronavirus testing centres, india news,tamil indian express

அபந்திகா கோஷ், கௌனைன் ஷெரிஃப் எம்

Advertisment

உண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்க தேவைப்படுபவர்களை மட்டும் சேர்க்க வேண்டும் என்று கொரோனா வைரஸ் நோயாளிகளைப் பராமரிப்பது தொடர்பான கொள்கையில் அரசு மாற்றத்தை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் நோயாளிகள் அனைவரும் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்போது லேசான கொரோனா தாக்குதல் உள்ள நோயாளிகளை வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி போன் மூலம் கண்காணிப்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களின் திரட்சியைக் குறைப்பதற்காக மருத்துவமனை படுக்கைகளை தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுவதாக அரசு உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறி உள்ள ஒரு நோயாளியை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான திட்டவட்டமான நெறிமுறைகள் எதுவும் இல்லை என்றாலும், 2 அம்சங்களில் வழிகாட்டுநெறிமுறைகள் தெளிவாக உள்ளன. ஒரு நோயாளியை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான இறுதி முடிவு சிகிச்சையளிக்கும் மருத்துவரின் விருப்பம் சார்ந்தது; மேலும், ஆய்வக முடிவுகள் வரும் வரை, நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளியை ஒரு சுகாதார நிலையத்தில் தனிமையில் வைத்து அறிகுறிக்கான சிகிச்சை அளிக்க வேண்டும்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் மருத்துவ மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்களின்படி, லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள், மூச்சுத் திணறல் இல்லாமல் குறைவான காய்ச்சல், இருமல், தொண்டைப்புண் அறிகுறி உள்ளவர்ளுக்கு விரைவான பாதிப்பு இல்லாவிட்டால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் கூடாது. ஆனாலும், இந்த வழிகாட்டுதல்கள் "மருத்துவ நடைமுறையை அல்லது நிபுணர்களின் ஆலோசனையை மாற்றுவதற்காக அல்ல" என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் நெறிமுறையில் மாற்றம் குறித்து கேட்டதற்கு, சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வா திங்கள்கிழமை கூறியதாவது: “அனைத்து கோவிட்-19 பாசிட்டிவ் நோயாளிகளும் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களில் யாருமே வீட்டு தனிமைப்படுத்தலில் இல்லை. மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்ட பிறகும் 14 நாட்கள் கண்காணிக்கப்படுகின்றனர்” என்று கூறினார்.

இந்த யோசனை, வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள லேசான அறிகுறிகள் கொண்ட நோயாளிகள், மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்ட நோயாளிகள் ஆகியோரை 14 நாட்கள் போன் மூலம் கண்காணிப்பது தொடர்பான மாதிரியை விரிவாக்குகிறது.

அரசு வட்டாரங்கள் கூறுகையில், “கோவிட்-19 நோயாளிகளில் நான்கு பிரிவுகள் உள்ளன. அவர்களில் முதல் பிரிவினர், தனிமைப்படுத்தலில் வைத்து கண்காணிக்கப்பட வேண்டும். அவர்கள் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுத்தமாட்டார்கள். அதிக பாதுகாப்பு தேவைப்படும் இரண்டாவது பிரிவினர் உயர் பாதுகாப்பு பிரிவில் வைத்து ஆக்ஸிஜன் அளிக்க வேண்டும். மூன்றாவது பிரிவினர் ஐ.சி.யூ-வில் வைத்து நிலையான கண்காணிப்பு தேவைப்படுபவர்கள். நான்காவது வென்டிலேட்டர்களில் இருக்க வேண்டியவர்கள். 80-85% பேருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அறிகுறிகளுக்கு மருத்துவம் தேவை என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அத்தகைய நோயாளிகளை வீட்டிலேயே வைக்க திட்டமிட்டுள்ளோம். அவர்கள் தினமும் போனில் கண்காணிக்கப்படுவார்கள். தேவை ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். ” என்று கூறினார்.

ஒரு படுக்கையை வழங்கும் முயற்சியைவிட, இந்த மாற்றம் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்களின் தொடர்பைக் குறைப்பதை பரிசீலிக்கிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "தற்போது ஒற்றை பரிந்துரை வருவதை தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே நன்றாக கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு நபருக்காக என்னுடைய மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை நான் ஏன் அணுப்ப வேண்டும்? உண்மையில், நான்காவது வகை நோயாளிகளுக்கு வெவ்வேறு வகையான மருத்துவமனைகள் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம்” என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இந்தியாவில் 1.26 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசு நிறுவனங்களில் 17,631 படுக்கைகளும், மாநிலங்களில் 1.09 லட்சம் படுக்கைகளு உள்ளன. ரயில் பெட்டிகள் உட்பட 3.2 லட்சம் தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளை உருவாக்கும் பணியை ரயில்வே மேற்கொண்டுள்ளது.

இதுவரை மருத்துவமனையில் சேர்க்க்கும் கொள்கை, எழுதப்படவில்லை என்றாலும், இந்தியாவுக்கு வருவதை நேர்மறையாக பரிசோதித்த ஒரு வெளிநாட்டினருக்கு வரையறுக்கப்பட்ட விசா வழங்கப்பட்டு மருத்துவமனை பராமரிப்பு வழங்கப்பட்டது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு கொரோனா பாசிட்டிவ் என்றால் அவர்கள் விசா வழங்கப்பட்டு மருத்துவமனையில் பராமரிப்பு வழங்கப்படுகிறது.

சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ மேலாண்மை வழிகாட்டுதல்கள் “கடுமையான அறிகுறிகளைக் கொண்டவர்களை முன்கூட்டியே அடையாளம் காணவேண்டும். அவர்களை உடனடியாக உகந்த சிகிச்சை முறைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு பாதுகாப்பாகவும் விரைவாவும் சேர்க்க பரிந்துரை செய்வதை அனுமதிக்கிறது” என்று கூறுகின்றன.

கொரோனா வைரஸ் நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படும்போது பின்பற்ற வேண்டிய ​​வழிகாட்டுதல்கள் கூறுவதாவது: “மார்பு ரேடியோகிராஃபிற்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டதும் இரண்டு மாதிரி பரிசோதனைகள் 24 மணி நேரத்திற்குள் எதிர்மறையாக இருக்கும்” ஆனாலும், சிகிச்சையளிக்கும் மருத்துவர் இன்னும் அந்த நோயாளியை சிகிச்சைக்கு அழைக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார். இந்த மாதிரி சோதனை முடிவுகள் எதிர்மறையான அறிகுறி உள்ள நோயாளிகளை அனுப்புவதை சிகிச்சை அளிக்கும் மருத்துவரால் தற்காலிகமாக அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோயறிதல் மூலம் நிர்வகிக்கப்படும். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியின் கடைசி தொடர்பிலிருந்து 14 நாட்களுக்கு கண்காணிக்கப்பட வேண்டும்.

தற்போது கோவிட்-19 காப்புரிமைகளை நிர்வகிக்கும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள், நோயாளியின் சுவாச அளவு, இரத்த அழுத்தம், இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு, வயது, உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் / கல்லீரல் / சிறுநீரக நோய், நீரிழிவு நோய் மற்றும் பிற நோயெதிர்ப்பு-சமரச நிலைகளை அடிப்படையாகக் கொண்டு யாரை மருத்துவமனையில் அனுமதிப்பது என்பது குறித்து பொது வழிகாட்டுதல்களைக் கூருகின்றன. ஒரு நோயாளியின் மனநிலை மோசமடைந்து வருகிறதென்றாலோ, ஒரு நோயாளியின் பல உறுப்புகள் செயலிழக்கும் நோய்க்குறியை எதிர்கொண்டாலோ, வேண்டிலேட்டர் தேவையின் அடிப்படையில் ஐ.சி.யூ-வில் சேர்ப்பது குறித்த முடிவு எடுக்கப்படுகிறது.

தற்போது உலகில் கொரோனா வைஸுக்கு மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள அமெரிக்காவில், பிப்ரவரி 12 முதல் மார்ச் 16 வரை 21% -31% கோவிட் -19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 5% -12% கோவிட்-19 நோயாளிகள் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நோய் கட்டுப்பாட்டு மையங்களின் அறிக்கை கூறுகிறது . சில அமெரிக்க மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ‘புத்துயிர் அளிக்காதீர்கள்’ என்ற கொள்கைகளைத் தொடங்கியுள்ளன.

இத்தாலியில், மோசமாக பாதிக்கப்பட்ட பெர்கமோ போன்ற இடங்களில் வரைஸ் பரவலின் உச்சத்தில், மிகவும் மோசமான நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment