Advertisment

மத்திய அரசிடம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்கள்! முன்பே சொன்ன ஐஇ தமிழ்

சுமார் ரூ 52,000 கோடி செஸ் நிதியாக உள்ள நிலையில், சுமார் 3.5 கோடி கட்டுமான தொழிலாளர்கள், கட்டுமான நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus live news, corona latest numbers

கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக அடுத்த 21 நாட்கள் இந்தியா முடக்கப்படுவதாக இந்திய பிரதமர் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

Advertisment

இந்த 21 நாட்கள் கடுமையான துயரங்களை சுமக்கவிருக்கும் இந்தியாவில் கோடிக்கணக்கான வரன்முறைபடுத்தப்படாத தொழிலாளர்கள் வாழ்க்கைக்கு தேவையான உதவித் தொகை (பொருளாதார பேக்கேஜ்) எந்த வகையில் இருக்கும் என்பதை இந்த செய்தியில் காண்போம்.

கொரோனா வைரஸ் உதவித் தொகை (பொருளாதார பேக்கேஜ்) தற்போது எந்த நிலையில் உள்ளது? 

கொரோனா வைரஸ் உதவித்தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக வில்லை என்றாலும், அதன் அடிப்டை எவ்வாறு இருக்கும் என்பதை பலராலும் கணிக்க முடிகிறது.

உதரணமாக, தொழிலாளர் நல வாரியத்தால் வசூலிக்கப்பட்ட பணத்தை அரசாங்கம் பயன்படுத்தக்கூடும் என்றாலும், ஒரு முழுமையான நிவாரணத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ஒரு தடையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

"அறிவிக்கப்படும் பொருளாதார பேக்கேஜ் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக இருந்தால் கூட , அதற்கு 2 லட்சம் கோடி வரை செலவாகும். இந்தாண்டின்  வரி மற்றும் வரி அல்லாத வருவாயை திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கும் குறைவாகவே மத்திய அரசு வசூலித்துள்ளது.

எனவே,நிதிப் பற்றாக்குறை தவிர்க்க முடியாத ஒன்று  என்று பொருளாதார ஆலோசகர்கள் கருதுகின்றனர்.

மத்திய அரசாங்கம் தனது கடன் வரம்பை எவ்வளவு தூரம் தளர்த்துவது? எந்த வகையில் கடன் வாங்குவது?  போன்ற முக்கிய முடிவுகள் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கான   நடவடிக்கைகள், தினசரி கூலித் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் நேரடி பணப் பரிமாற்ற செயல்பாடுகள், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்தல், ஆகியவை பொருளாதார பேக்கேஜின் முக்கிய அம்சங்களாக இருக்கும்" என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து இந்த பேக்கேஜ் இறுதி செய்யப்படும் என்பதால், செயற்படாச் சொத்து வகைப்பாடுகளுக்கான விதிமுறைகளில் (Non- performing assets) தளர்வு கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, செயற்படாச் சொத்துக்கான 90 நாட்களை  மேலும் 30-60 நாட்கள் நீட்டிக்கப்படலாம்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) சந்தோஷ் குமார் கங்க்வார், கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் " கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் சட்டம், 1996ன் 60வது பிரிவின் படி, அனைத்து மாநிலங்களும்/யூனியன் பிரேதசங்களும், BOCW செஸ் சட்டத்தின் கீழ் தொழிலாளர் நல வாரியங்களால் வசூல் செய்யப்பட்ட செஸ் நிதியை, கட்டுமான தொழிலாளர்களின் கணக்குகளுக்கு நேரடி பணப் பரிமாற்றம் செய்யப் பட வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .

சுமார் ரூ 52,000 கோடி செஸ் நிதியாக உள்ள நிலையில், சுமார் 3.5 கோடி கட்டுமான தொழிலாளர்கள், கட்டுமான நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுசெய்யாமல் இருக்கும்  தொழிலாளர்கள் பதிவு செய்யும்படி கேட்கப்படலாம் (மேலும்) பதிவு செய்யும்வரை அந்தந்த மாநிலங்கள் அவர்களின் அடிப்படை ஆதாரங்களை  வழங்கும்" என்று ஒரு அதிகாரி கூறினார்.

நிதியமைச்சக செயலாளரைத் தொடர்பு கொண்டபோது, நிவாரணம் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என்று தெரிவித்து விட்டார்.

புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “மத்திய அரசின் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும், தங்களின் ஊதியத்தைப் பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.

"வரன்முறைப்படுத்த துறையைப் பொறுத்தவரை, விடுப்பு ஊதியம் கொடுக்க வேண்டும், பணி நீக்கம் செய்யக் கூடாது போன்ற அறிவுரைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

அமைப்புசாரா சிறு குறு வணிகங்களைப் பொறுத்த வரையில்; ஊதியம் மற்றும் பணிநீக்க மானியங்கள் வழங்க அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஊதிய செலவை ஈடுசெய்ய குறைந்த விகிதத்தில் கடன்கள் அத்தகைய வணிகங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை இன்னும் திறம்பட செயல்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும்.  21 நாட்கள் மட்டுமல்லாமல், தொழில்களுக்கு புத்துயிர் தேவைப்படும் வரை சமூகப் பாதுகாப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்று தொழிலாளர் பொருளாதார வல்லுநரும், எக்ஸ்.எல்.ஆர்.ஐ.யில் மனித வள மேலாண்மை பேராசிரியருமான கே ஆர் ஷியாம் சுந்தர்

என்றார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பல நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல், திவாலாகும் நிலையில் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு  திவால் சட்ட வரையறையை (Insolvency and bankruptcy code 2016) ஆறு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கவும்  திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பெரும் பாதிப்பை சந்தித்த விமானத்துறை, வரி உள்ளிட்ட சட்டரீதியான நிலுவைத் தொகையை செலுத்துவதில் தளர்வு பெற வாய்ப்புள்ளது. எந்தவொரு அபராதம், வட்டி இன்றி விமான நிறுவனங்கள் தங்கள் பணத்தை செலுத்த  அனுமதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைக்கும் என்று பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்தார்.  "ஒப்பந்தத் தொழிலாளர்கள் அல்லது ஏழை தினசரி கூலி தொழிலாளர்களுக்கு, மலிவான மற்றும் இலவச உணவு தானியங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் வாழும் 80 கோடி மக்களுக்கு ஒரு நபருக்கு 7 கிலோ ரேஷன் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவாயான நிதியை தற்போதே மத்திய அரசு வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மத்திய வேதியியல் மற்றும் ரசயானத் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தனது ட்விட்டரில், “மொத்தம் ரூ .1 லட்சம் 80 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது… அடுத்த 3 மாதங்களுக்கு முன்கூட்டியே இந்த தொகைமாநிலங்களுக்கு வழங்கப்படும்” என்று பதிவு செய்துள்ளார்.

மாநில அரசுகள், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த 21 நாட்கள் முழுமையான எல்லை மூடலுக்கு முதன்மையான தாக மாநில அரசுகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெல்ப்லைன்களைத் தொடங்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன, மேலும் மத்திய உள்துறை அமைச்சகமும் ஒரு ஹெல்ப்லைன் திட்டத்தை  தொடங்கயிருக்கின்றது .

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment