Advertisment

Todays News: தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; பொது முடக்கத்தில் தளர்வு கிடைக்குமா?

Coronavirus Latest Updates: கொரோனா தொற்று தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Todays News: தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; பொது முடக்கத்தில் தளர்வு கிடைக்குமா?

Covid-19 Cases Update: இந்தியாவில் உள்ள உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா  பாதிப்புகள் நேற்றிலிருந்து 6,387 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. தற்போதய மொத்த பாதிப்புகளின் எண்னிக்கை ஒன்றரை லட்சத்தை  நெருங்குகிறது. தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 80722 ஆகும்.

Advertisment

இந்தியாவில் குணமடையும் விகிதம் (41.61%) தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. மொத்தம் 60,490 நோயாளிகள் இதுவரை கொரோனா நோய் தொற்றில் இருந்து  குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4167 ஆக அதிகரித்தாலும், இறப்பு விகிதமும் குறைந்து வருகிறது.  ஏப்ரல் 15-ஆம் தேதி 3.30 சதவீதமாக இருந்த விகிதம் தற்போது  2.87 சதவீதமாக  குறைந்து உள்ளது. உலக இறப்பு விகித சராசரி தற்போது 6.45 சதவீதமாக உள்ளது. உலகிலேயே இந்தியாவின் இறப்பு விகிதம்  மிகவும் குறைவானது என்று மத்திய அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Coronavirus Updates : கொரோனா தொற்று தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:15 (IST)27 May 2020

    32 பேர் உயிரிழப்பு

    மும்பையில் இன்று 32 பேர் உயிரிழப்பு!

    மும்பையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 32 பேர் உயிரிழப்பு; மேலும் 1,044 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி.

    * மொத்த பாதிப்பு - 33,835

    * குணமடைந்தவர்கள் - 9,054

    * உயிரிழப்பு - 1,097

    21:45 (IST)27 May 2020

    கன்னியாகுமரி காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

    நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி. திருமணம் ஆகாத இவர், ஏராளமான பெண்களிடம் பழகி அவர்களுடன் பாலியல் ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை டாக்டர், நாகர்கோவிலில் உள்ள பெண் என்ஜினீயர், கன்னியாகுமரி சிறுமி உள்ளிட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கிடையே 2 முறை காவலில் எடுக்கப்பட்டு காசியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் காசி மீது வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற மாதர் சங்கம் மற்றும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில் காசி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

    நாகர்கோவில் காசி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற எஸ்.பி. ஸ்ரீநாத் பரிந்துரை செய்த நிலையில் டிஜிபி திரிபாதி ஆணை பிறப்பித்துள்ளார்.

    21:43 (IST)27 May 2020

    சிறார் ஆபாச படங்களை பதிவிட்டவர் கைது

    'சிறார் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது'

    தஞ்சை: கும்பகோணம் அருகே பாபநாசத்தில் சிறார் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக ஒருவர் கைது

    சிறார் ஆபாச படங்களை வெளியிட்டதாக ரியாஸ் அகமது என்பவரை மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்

    21:15 (IST)27 May 2020

    கேரளாவில் நாளை முதல் மதுபானங்கள் விற்பனை தொடக்கம்

    கேரளாவில் நாளை முதல் மதுபானங்கள் விற்பனை தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    கேரள மாநிலத்தில் நாளை காலை 9 மணி முதல் மதுபானங்கள் விற்பனை தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    ஒரு முறை மதுபானம் வாங்கினால் 5 நாட்களுக்கு பிறகே மறுபதிவு செய்ய முடியும் என்றும் VQM என்ற செயலியில் பதிவு செய்து இ-டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பொது முடக்கத்தால் கேரளாவில் 67 நாட்களுக்கு பின் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

    20:42 (IST)27 May 2020

    புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் - 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைப்பு

    தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் அவர் கூறியுள்ளார். தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கல்வி கட்டணத்தை தற்போது வசூலிக்க கூடாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    20:27 (IST)27 May 2020

    அனுமதி இல்லாமல் சென்னை டூ புதுச்சேரி பயணம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்கு

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஓட்டுநராக பணிபுரிபவர் தியாகராஜன். இவரது கர்ப்பிணி மனைவி சிவசங்கரிக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இதற்காக சென்னையிலிருந்து சிவசங்கரியின் தாய் சாந்தாதேவி, சகோதரர் கணேஷ்குமார் ஆகியோர் எந்த அனுமதியும் பெறாமல் வந்துள்ளனர். வளைகாப்பு முடித்துவிட்டு சிவசங்கரியையும் அவர்கள் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    இந்நிலையில், சென்னையிலிருந்த சிவசங்கரியின் தந்தை கலியபெருமாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனா பீதியால் சென்னைக்கு பதில் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெறலாம் என அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக சென்னையிலிருந்து மறுநாள் 24ம் தேதி காரில் கலியபெருமாள், சாந்தாதேவி, சிவசங்கரி, கணேஷ்குமார் ஆகியோர் புதுச்சேரிக்கு அனுமதி பெறாமல் வந்துள்ளனர்.

    இதையடுத்து, தியாகராஜன் உள்ளிட்ட 5 பேர் மீதும் விஏஓ ஆறுமுகம் புகாரின் பேரில் தன்வந்தரி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    20:00 (IST)27 May 2020

    ஸ்டாலின் அறிக்கை

    அரசியல் சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பாதுகாத்திட கோரி பிரதமரை வலியுறுத்துகிறேன். அரசியல் சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பாதுகாத்திட கோரி பிரதமரை வலியுறுத்துகிறேன் - மு..ஸ்டாலின்

    19:48 (IST)27 May 2020

    500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது மதுரை ஸ்மார்ட் சிட்டி பணி

    மதுரை மாநகராட்சியில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி, 500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது. மாநகராட்சி ஆணையர் விசாகன் பணிகளை துவக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார், பின்பு அறுபது நாட்களாக நிறுத்தப்பட்ட பணிகள் துவங்கின.ரூ.159.7 கோடியில் பெரியார் பஸ் ஸ்டாண்ட்டை புதிதாக கட்டமைக்கும் பணியில் 150 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.ரூ.47.72 கோடியில் தமுக்கம் மைதானத்தில் கூட்டரங்கு அமைத்தல் பணியில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்,

    19:47 (IST)27 May 2020

    கொரோனா நிவாரண பணிக்காக ரூ.15,000 கோடி நிதி

    தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உடல்நலக் குறைவால் வீட்டில் சிகிச்சை பெற்று வரும் பாஜகவின் மூத்த தலைவர் லட்சுமணனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர், இதனை தெரிவித்தார்.

    19:27 (IST)27 May 2020

    தமிழகத்தில் கொரோனா தொற்று - மாவட்டம் வாரியாக

    மாவட்டம் வாரியாக கொரோனா லிஸ்ட் இங்கே,

    19:00 (IST)27 May 2020

    ஜெயலலிதாவின் சொத்துகள், நம்பிக்கையை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது - ஜெ.தீபா

    ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக எங்களை உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. அவசர சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தினால் மேல்முறையீடு செய்வோம். வேதா இல்லம் மட்டுமல்லாது, ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நாங்களே வாரிசுதாரர்கள். எனக்கும், எனது சகோதரருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஜெயலலிதாவின் சொத்துகள், நம்பிக்கையை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது - ஜெ.தீபா

    18:57 (IST)27 May 2020

    தமிழக கொரோனா நிலவரம்

    மொத்த பாதிப்பு - 18,545

    குணமடைந்தவர்கள் - 9,909

    சிகிச்சையில் உள்ளவர்கள் - 8,500

    உயிரிழப்பு - 133

    மொத்த பரிசோதனைகள் - 4,42,970

    இன்றைய பரிசோதனை - 11,231

    பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் - 11,725 | பெண்கள் - 6,815 | திருநங்கை - 5

    18:52 (IST)27 May 2020

    முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு - தீபா

    'மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு - ஜெ.தீபா'

    ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது நீதிமன்றம்

    - ஜெ.தீபா

    18:43 (IST)27 May 2020

    567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது.

    18:26 (IST)27 May 2020

    6 பேர் பலி

    தமிழகம் - இன்று 6 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;

    இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்தது

    18:25 (IST)27 May 2020

    817 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்

    * தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 18,545ஆக உயர்வு

    * சென்னையில் புதிதாக 558 பேருக்கு கொரோனா தொற்று

    17:59 (IST)27 May 2020

    பீகார் ரயில் நிலையத்தில் பசியால் உயிரிழந்த தாய் - சடலத்தை மூடிய போர்வையை எடுத்து விளையாடிய குழந்தை

    சொந்த ஊருக்கு சென்றால் எப்படியாவது பிழைத்து கொள்ளலாம் என குஜராத்தில் இருந்து ரயில் பிடித்து பீகார் மாநிலம் முசாபர்பூருக்கு 2 வயது குழந்தையுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண் புறப்பட்டு உள்ளார். ரயில் திங்கள் இரவு மூசாபர்பூர் ரயில் நிலையத்தை அடையும் முன் அந்த பெண் உயிர் பிரிந்துள்ளது. பசி, வெப்பம் தாங்காமல் உயிரிழந்தஅந்த பெண்ணின் சடலம், முசாபர்பூர் ரயில் நிலையத்தில் போர்வையால் மூடப்பட்டு இருந்த நிலையில், தாய் இறந்தது அறியாத குழந்தை அந்த போர்வையை எடுத்து விளையாடிய காட்சி, அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேபோன்று டெல்லியில் இருந்து பீகார் திரும்பிய மற்றொரு புலம் பெயர் தொழிலாளியின் 2 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளது.

    17:41 (IST)27 May 2020

    தமிழக அரசு அரசாணை

    டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு நிதியில் கடலூர் மாவட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

    * பாசன வசதிக்காக குடிமராமத்து உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

    17:26 (IST)27 May 2020

    10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே எழுதலாம் - மனிதவளத்துறை

    10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தற்போது இருக்கும் அந்தந்த ஊரிலேயே எழுதிக்கொள்ளலாம் என்று மத்திய மனிதவளத்துறை தெரிவித்துள்ளது.

    சொந்த மாநிலத்தை விட்டு பிற மாநிலத்தில் இருக்கும் மாணவர்கள் அவர்கள் இருக்கும் ஊரிலேயே 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிக்கொள்ளலாம் என்று மத்திய மனிதவளத்துறை அறிவித்துள்ளது.

    17:08 (IST)27 May 2020

    இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னையில் இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் சமரசம் செய்து வைக்கத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

    16:46 (IST)27 May 2020

    கொரோனா தடுப்பு; முதல்வர் பழனிசாமி மே 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை

    கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி மே 29-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்பார்கள் என தகவல்.

    16:12 (IST)27 May 2020

    ஜாமீனை ரத்து சேய்யக் கோரி மனு; ஆர்.எஸ்.பாரதி பதில் அளிக்க அவகாசம் - ஐகோர்ட்

    பட்டியல் இனத்தவரை இழிவுபடுத்தி பேசியதாக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட tதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இடைக்கால ஜாமின் எதிர்ப்பு மனுவுக்கு ஆர்.எஸ்.பாரதி தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரியதை அடுத்து, நீதிபதிகள் அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை மே 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    15:29 (IST)27 May 2020

    விழுப்புரம் மாவட்டத்தில் 2 கர்ப்பிணிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    விழுப்புரம் மாவட்டத்தில் 2 கர்ப்பிணிகள் உட்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது.

    14:25 (IST)27 May 2020

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா? ஐகோர்ட் கேள்வி

    டாஸ்மாக்கில் மது விலை தொடர்பான வழக்கில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அரசு நிர்ணயித்த விலையில் தான் மதுபானங்கள் விற்கப்படுகின்றனவா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த வழக்கில், மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா? ஜூன் 26ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    14:21 (IST)27 May 2020

    அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏதுவாக, ஜூன் 5ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும்

    அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏதுவாக, ஜூன் 5ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என்றும் இதற்கு பதிலாக ஜூன் 19-ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    14:19 (IST)27 May 2020

    புகார் தெரிவிக்க செயலி உருவாக்க டிஎன்பிஎஸ்சி முடிவு; டெண்டர் அறிவிப்பு

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமானதால், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வரிசையில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக தெரிவிக்கும் வகையில், செல்போன் செயலியை உருவாக்குவதற்கான டெண்ட அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த செயலி அனைத்து வகையான செல்போன்களிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்க தகுதியுடைய நிறுவனங்கள் ஜூன் 22-ம் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒப்பந்தம் குறித்து டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    13:55 (IST)27 May 2020

    பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு செய்த 199 பேருக்கு வாழ்நாள் தேர்வெழுத தடை

    2017-ம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத ஆசிரியர் தேர்வு வாரியம் தடை விதித்துள்ளது.

    13:52 (IST)27 May 2020

    ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு; ஐகோர்ட்டில் இன்று விசாரணை

    வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, வரும் 31ஆம் தேதி வரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதே போல, சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலிக்க கோரி, கைதுக்கு முன்பாக ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    13:47 (IST)27 May 2020

    பதிவு செய்யப்படாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி

    தமிழகத்தில் பதிவு செய்யப்படாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? என்று தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்காக பயன்படுத்தி விட்டு இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    13:41 (IST)27 May 2020

    வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு - வேளாண்துறை தகவல்

    ராஜாஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம் வந்துள்ளது. இந்த நிலையில், வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் வெட்டுக்கிளி படை நகர்வு குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது.

    13:37 (IST)27 May 2020

    தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்க கூடாது - அமைச்சர் செங்கோட்டையன்

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்: தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க கூடாது என தெரிவித்தார். அறிவித்த சிறிது நேரத்திலேயே, அடுத்த அறிவிப்பில், ஆன்லைனில் வகுப்பு எடுப்பதை தடுக்க முடியாது. பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்துவது கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    13:03 (IST)27 May 2020

    ஆறுமுகன் தொண்டைமான் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.

    இலங்கை அமைச்சரும், தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டைமான் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.

    இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர், இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவர் என இரங்கல் செய்தி.

    12:45 (IST)27 May 2020

    ஜெயலலிதா சொத்துக்கள் நிர்வகிக்க நிர்வாகி தேவை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க புகழேந்தி என்பவர் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார். 

    இந்த வழக்கினை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் நிர்வாகி தேர்வையில்லை என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.     

    12:37 (IST)27 May 2020

    போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம் – உயர்நீதிமன்றம்

    போயஸ் தோட்டத்து இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பான வழக்கு விசாரனையில், போயஸ் தோட்ட இல்லத்தில் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும், மீதமுள்ள பகுதியை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் என பரிந்துரை செய்தது. மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக தீபா, தீபக் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது . 

    இது குறித்து, அடுத்த 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவு

    12:18 (IST)27 May 2020

    நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டாம் - WHO எச்சரிக்கை

    கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்,

    நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டால், இரண்டாம் கட்ட பாதிப்பை விரைவில் சந்திக்க நேரிடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    12:16 (IST)27 May 2020

    3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்கள் நியமனம்

    கொரோனா மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்கள் மூலம் 675 புதிய மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சுகாதார துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும், 3 மாத காலத்திற்கு பின் தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:11 (IST)27 May 2020

    மற்ற மாவட்டங்களோடு சென்னை பெருநகரை ஒப்பிடுவது சரியாகாது - ராதாகிருஷ்ணன்

    கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது  கொரோனா பாதிப்பில், மற்ற மாவட்டங்களோடு சென்னை பெருநகரை ஒப்பிடுவது சரியாகாது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

    11:05 (IST)27 May 2020

    சேலத்தில் 63 நாட்களுக்கு பிறகு மீண்டும் விமான சேவை துவங்கியது

    சேலத்தில் 63 நாட்களுக்கு பிறகு மீண்டும் விமான சேவை துவங்கியது. சென்னையில் இருந்து சேலம் வந்த பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ஒருநாள் தனிமைப்படுத்த சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவு.

    11:01 (IST)27 May 2020

    ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    ஜெர்மன், ஜப்பான் ,பிரான்ஸ் ,சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவதற்கு உரிய 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தானது. ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டது.   

    10:30 (IST)27 May 2020

    ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை

    ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 50 வயது நபர் தற்கொலை செய்து கொண்டார்.

    கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரும் முன்னதாக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.       

    10:25 (IST)27 May 2020

    பேருந்துகளை பழுதுநீக்கும் வாகனத்தில் ஆசிரியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    தமிழகத்தில் இன்று முதல், 200 மையங்களில் 12ம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. 48,000 ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் இந்த பணியில், 48 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. தேர்வுத்தாள் திருத்தும் பணிகளில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பேருந்து,முகக்கவசம், கிருமிநீக்கம் செய்யப்பட்ட அறைகள் என போதிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டிருப்பதாக கல்வித்துறை தெரிவித்தது.

    இந்நிலையில், கோவை மாவட்ட வால்பாறையில் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த 15 ஆசிரியர்கள் பேருந்துகளை பழுதுநீக்கும் வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. 

    10:05 (IST)27 May 2020

    சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.

    சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.

    09:55 (IST)27 May 2020

    ஜூன் மாத ரேஷன் டோக்கன் மே 29 முதல் 31ம் தேதி வரை வழங்கப்படும் - தமிழக அரசு

    தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாத ரேஷன் பொருட்களான ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி ஆகியவை விலையின்றி வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் மே 29 முதல் 31ம் தேதி வரை அவரவர் வீடுகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

    09:54 (IST)27 May 2020

    கொரோனா தொற்று அல்லாத இதர அத்தியாவசிய சுகாதார சேவைகளை தொடங்க வேண்டும்

    கொரோனா தொற்று அல்லாத இதர அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளான அதாவது காசநோய், தொழுநோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, விபத்தினால் ஏற்படுகின்ற காயங்கள் மற்றும் அதிர்ச்சிக்கு சிகிச்சை அளித்தல் போன்ற நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும். மாநிலங்கள் இதற்கான உடனடி நடவடிக்கைகைளத் தொடங்கவேண்டும் என்று  மத்திய சுகாதாரச் செயலாளர் உத்திரப்பிரதேசம். பீகார், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களிடம் கேட்டுக் கொண்டார். 

    09:50 (IST)27 May 2020

    கொரோனா பரிசோதனையில் தனியார் ஆய்வகங்களின் பங்களிப்பு என்ன?

    இந்தியா தற்போது நாளொன்றுக்கு சுமார் 1.1 லட்சம் மாதிரிகளை சோதனை செய்து வருகிறது. சோதனைக்கூடங்களின் எண்ணிக்கை, ஷிப்டுகள், ஆர்டி-பிசிஆர் எந்திரங்கள், பணியாளர்களை அதிகரித்து வருவதன் மூலமாக செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இன்று வரை, இந்தியாவில், மொத்தம் 612 சோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் 430 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் - ஐசிஎம்ஆர் நடத்துவதாகும். 182 தனியார் ஆய்வகங்கள் கொரோனா மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. 

    மேலும், விவரங்களுக்கு:  கொரோனா பரிசோதனையில் தனியார் ஆய்வகங்களின் பங்களிப்பு என்ன? 

    கொரோனா பரிசோதனைக் கட்டணம் எவ்வளவு? மாற்றியமைக்க ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை

    09:41 (IST)27 May 2020

    இந்தியாவில் குணமடையும் விகிதம் (41.61%) தொடர்ந்து முன்னேற்றம்

    இந்தியாவில் உள்ள உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா  பாதிப்புகள் நேற்றிலிருந்து 6,387 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. தற்போதய மொத்த பாதிப்புகளின் எண்னிக்கை ஒன்றரை லட்சத்தை  நெருங்குகிறது. தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 80722 ஆகும்.

    இந்தியாவில் குணமடையும் விகிதம் (41.61%) தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. மொத்தம் 60,490 நோயாளிகள் இதுவரை கொரோனா நோய் தொற்றில் இருந்து  குணமடைந்துள்ளனர்.

    Coronavirus Updates : தமிழகத்தில் நேற்று மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17,728-ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 611 பேர் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதன்மூலம், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,731 லிருந்து 9,342 ஆக அதிகரித்துள்ளது.

    நேற்று,ஒரே நாளில் 9 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 127ஆக அதிகரித்தது.

    Coronavirus Corona
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment