Advertisment

Corona Updates: 144 சரிவர கடைபிடிப்பதில்லை; இனி கடுமையான நடவடிக்கை - தமிழக காவல்துறை

Coronavirus Latest Updates: சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கையகப்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona Updates: 144 சரிவர கடைபிடிப்பதில்லை; இனி கடுமையான நடவடிக்கை - தமிழக காவல்துறை

Covid-19 Cases Update: தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 161 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி தமிழகத்தில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த 6 நாட்களில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டை தொடர்ந்து, கரூர் மாவட்டமும் கொரோனா இல்லாத மாவட்டமானது.  சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும், நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

Advertisment

கொரோனாவுக்குப் பிறகு வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை ஈர்க்க,  தமிழ்நாடு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில், சிறப்பு குழு ஒன்றை நியமித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் அமலில் இருக்கும் பொது முடக்கத்தை படிப்படியாகத்தான் தளர்த்த முடியுமென, மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மே 3-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில்,  மக்களிடையே குழப்பம் இருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி இருக்கிறார்.  சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கையகப்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை அனைத்து பள்ளிகளையும், தங்களிடம் ஒப்படைக்குமாறு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Coronavirus Latest Updates: இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    23:03 (IST)01 May 2020

    1,008 பேருக்கு கொரோனா பாதிப்பு

    மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று மட்டும் 1,008 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; 26 பேர் உயிரிழப்பு..

    மொத்த பாதிப்பு 11,506 ஆக அதிகரித்தது!

    22:19 (IST)01 May 2020

    ஊட்டியில் மலர் தொட்டிகளில் கொரோனா விழிப்புணர்வு...

    ஊட்டியில் 15,000 மலர் தொட்டிகளில் கொரோனா விழிப்புணர்வு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.. கோடை ஸீஸனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவர 3 லட்சம் மலர் செடிகள் மலர் பாத்தியில் நடவு செய்யப்பட்டது. தற்போது இந்த 3 லட்சம் மலர் செடிகளில் பல வண்ணத்தில் 150 ரகம் மலர் பூத்து குலுங்குகிறது. மேலும் 5000 பூந்தோட்டிகளில் கொரோணா விழிப்புணர்வு மலர் அலங்காரமாக கொரோனா வைரஸின் உருவத்தையும் STAY HOME STAY SAFE என்ற வாசகத்தையும் மலர்களால் சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும் 124 - வது மலர் கண்காட்சி மே 15 முதல் 19 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணத்தால் இந்த ஆண்டு மலர் கண்காட்சி இணையதளம் வாயிலாக வெளியிட தோட்டகலை துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    22:01 (IST)01 May 2020

    இனி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை

    144 தடை உத்தரவை பொதுமக்களில் பலர் சரிவர கடைபிடிப்பதில்லை"

    * இனி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

    * தமிழக காவல்துறை எச்சரிக்கை

    * "எக்காரணம் கொண்டும், எந்த இடத்திலும் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது"

    21:07 (IST)01 May 2020

    33% பணியாளர்களுடன் மட்டும்...

    சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். ஏனைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி செய்ய வேண்டும்.

    ரெட் ஸோன் அல்லாத ஆரஞ்ச், கிரீன் மண்டலங்களில் மாநில அரசுகள் நிலைமைக்கு ஏற்ப சில முடிவுகளை எடுக்க மத்திய அரசின் உள்துறை அறிவிக்கை வழிகாட்டுகிறது.

    21:06 (IST)01 May 2020

    அடைப்பட்டதா ஓசோன் துளை?

    கடந்த மார்ச் மாதம் முதல் உலகின் மாசுபாடு குறைந்ததால் ஓசோனின் துளை அடைபட்டுவிட்டதாக ஐநா வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

    20:27 (IST)01 May 2020

    கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

    கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    20:20 (IST)01 May 2020

    ராஜினாமா செய்வதாக பதிவாளர் கடிதம்

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் நடேசன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

    துறைசார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதால் ராஜினாமா செய்வதாக பதிவாளர் கடிதம்

    - துணை வேந்தர்

    19:54 (IST)01 May 2020

    மதுக்கடைகள், பீடா கடைகளை திறக்க அனுமதி

    கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள், பீடா கடைகளை திறக்க அனுமதி

    - மத்திய அரசு

    19:47 (IST)01 May 2020

    பச்சை மண்டலத்தில் 50 சதவீத பேருந்துகளுக்கு அனுமதி

    நாடு முழுவதும் பொது முடக்கம் மே 17 வரை நீடிப்பு: பச்சை மண்டலத்தில் 50 சதவீத பேருந்துகளுக்கு அனுமதி

    publive-image

    19:36 (IST)01 May 2020

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை

    கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களை கவுரவப்படுத்த, மே 3ஆம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய விமானப்படை விமானங்கள் பறக்கும்

    - முப்படை தலைமை தளபதி பிபின்ராவ

    19:18 (IST)01 May 2020

    ஒரு பயணியுடன் காரை இயக்கலாம்

    கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம்

    மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்

    - மத்திய அரசு

    19:17 (IST)01 May 2020

    எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது

    சிவப்பு மண்டலங்களுக்கு விதிக்கப்படும் தடைகள்:

    விமானம், ரயில், மெட்ரோ மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்த 21 நாட்களுக்கு இயங்காது

    மக்கள் அதிகமாகக்கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது

    - மத்திய அரசு

    19:17 (IST)01 May 2020

    ஆட்டோ, கார் இயக்க தடை

    கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிப்பு

    பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும்

    சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை

    - மத்திய அரசு

    18:57 (IST)01 May 2020

    கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்

    இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது

    * சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்

    * முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது

    18:56 (IST)01 May 2020

    பச்சை மண்டலங்களுக்கு சில தளர்வுகள்

    ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும்.

    மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை

    * பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்

    * அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது

    18:30 (IST)01 May 2020

    2 வாரங்களுக்கு நீட்டிப்பு

    நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

    - மத்திய உள்துறை அமைச்சகம்

    18:16 (IST)01 May 2020

    1,000 கடந்த கொரோனா.....

    சென்னையில் 1,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.

    தமிழகத்திலேயே அதிக அளவாக சென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 1,082 ஆக அதிகரித்துள்ளது.

    18:11 (IST)01 May 2020

    176 பேருக்கு வைரஸ் தொற்று

    சென்னையில் இன்று மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    18:07 (IST)01 May 2020

    203 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்வு.

    18:02 (IST)01 May 2020

    எண்ணிக்கை 35,365 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 35,365 ஆக உயர்வு; 9065 பேர் குணமடைந்த நிலையில் 1,152 பேர் உயிரிழந்துள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

    17:59 (IST)01 May 2020

    28 நாட்களாக புதிதாக பாதிப்பு இல்லை

    சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 7 பகுதிகளில் கடந்த 28 நாட்களாக புதிதாக பாதிப்பு இல்லை

    * 5வது மண்டலம் - மதுரவாசல் தெரு, டேவிட்சன் தெரு, ரதராஜன்பேட்டை(சூளைமேடு)

    * வேணுகோபால் தெரு (சைதாப்பேட்டை) எல்லையம்மன் கோயில் தெரு(கோட்டூர்புரம்)

    17:37 (IST)01 May 2020

    85 வயது மூதாட்டிக்கு கொரோனா

    சென்னை போரூர் அருகே உள்ள முதியோர் இல்லத்தில் 85 வயது மூதாட்டிக்கு கொரோனா

    ஒரு மூதாட்டிக்கு தொற்று ஏற்பட்டதால் இல்லத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்

    17:37 (IST)01 May 2020

    14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு

    வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு

    - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம்

    17:35 (IST)01 May 2020

    ஸ்டிக்கரை வீடுகளில் ஒட்ட வேண்டும்

    ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தனிமைப்படுத்தப்படுவதற்கான ஸ்டிக்கரை வீடுகளில் ஒட்ட வேண்டும்.

    17:33 (IST)01 May 2020

    எந்தெந்த பகுதிகளில் தொழிற்சாலைகளை தொடக்கம்?

    மத்திய அரசு அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

    சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிபேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன

    தேனி, தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், உள்ளிட்ட 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன

    இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது மற்றும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிதி செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 21 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.

    அதன் படிப்படையில், தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாகவும், தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனுமதிப்பது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    16:55 (IST)01 May 2020

    சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு நிம்மதி

    "சொந்த ஊர் திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்"

    * மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

    16:33 (IST)01 May 2020

    14 நாட்கள் தனிமை

    கொரோனா தடுப்புப்பணி: விதிகளை மீறினால் தனிமைப்படுத்தப்படுவர்

    சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறினால் 100 ரூபாய் அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்

    விதிகளை மீறி செயல்படும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்

    - சென்னை மாநகராட்சி ஆணையர்

    16:23 (IST)01 May 2020

    ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்

    புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்

    - முதல்வர் நாராயணசாமி

    16:11 (IST)01 May 2020

    செய்தியாளர்களை சந்திக்கும் முப்படைத் தளபதிகள்...

    டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு முப்படை தலைமை தளபதி, தளபதிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்

    * கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முப்படைகளின் பணிகள் குறித்து விவரிக்க உள்ளதாக தகவல்

    16:08 (IST)01 May 2020

    ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு அழைப்பு

    வேலூர் மாவட்டத்தில் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு அழைப்பு

    விருப்பம் உள்ளோர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் விண்ணப்பம் அளிக்கலாம்

    - வேலூர் எஸ்.பி

    15:49 (IST)01 May 2020

    சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமனம்

    சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    15:22 (IST)01 May 2020

    2ஆம் கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

    மே 3ம் தேதிக்கு எந்தெந்த பகுதிகளில் தொழில் தொடங்கலாம் என்பது பற்றி தமிழக வல்லுநர் குழு 2வது அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பித்துள்ளது.  மே 3க்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வல்லுநர் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது

    14:55 (IST)01 May 2020

    மானியம் இல்லா கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு

    மானியம் இல்லா சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையை அதிரடியாக குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

    இந்தியன் ஆயில் கார்ப்பேரசன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதிய விலையை குறிப்பிட்டுள்ளது. அதன்படி

    டெல்லி - ரூ.581.50 - குறைவு ரூ.162.50 

    கோல்கட்டா ரூ..524.50 குறைவு ரூ.190

    மும்பை ரூ..579 குறைவு ரூ.135.50

    சென்னை - ரூ..569.50 குறைவு ரூ.192

    14:30 (IST)01 May 2020

    ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் உதவித்தொகை - டிடிவி தினகரன் கோரிக்கை

    ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் உதவித்தொகை  வழங்கப்பட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இததொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டால் புதிய இயல்பு வாழ்க்கை வாழ மக்கள் தயாராக வேண்டும். கொரோனா ஆபத்து நீங்கும் வரை மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    13:45 (IST)01 May 2020

    முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    மே 3ம் தேதிக்கு பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக, தொழில்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார், இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் , தொழில்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

    13:13 (IST)01 May 2020

    306.42 கோடி ரூபாய் நிதி - முதல்வர் நன்றி

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306.42 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.145.48 கோடி பெறப்பட்டுள்ளது .அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.110 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

    13:00 (IST)01 May 2020

    தமிழக அரசின் நிவாரண நிதி

    கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள் ரூ.110 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளனர். அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    12:47 (IST)01 May 2020

    ரோபோ மூலம் கண்காணிப்பு

    சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ரோபோ மூலம் கண்காணிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    12:33 (IST)01 May 2020

    3.64 கோடி அபராதம் வசூல்

    தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,75,596 பேர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர். 3,17,027 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3.64 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

    12:03 (IST)01 May 2020

    சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்படும்

    சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ள 3 மண்டலங்களில், 10 நாட்களில் கொரோனா பரவல் குறைய வாய்ப்புள்ளது. நோய் தொற்றை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் நிச்சயம் பலன் இருக்கும். கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிலவற்றில் 28 நாட்களாக தொற்று கண்டறியப்படவில்லை. கூடுதலாக 500 சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னீசியன்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால், கொரோனா பரவலும் அதிகமாக இருக்கிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

    11:11 (IST)01 May 2020

    கொரோனா இல்லாத மாவட்டமானது தூத்துக்குடி

    கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி தற்போது மாறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 25 பேர் குணமடைந்தனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசி பெண்ணும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். 

    10:44 (IST)01 May 2020

    சென்னையில் கொரோனா

    கொரோனா பாதிப்பு: ராயபுரத்தை மிஞ்சியது திரு.வி.க.நகர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

    10:07 (IST)01 May 2020

    தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம்

    மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக, தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தலைமைச் செயலாளர், தொழில்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 

    09:55 (IST)01 May 2020

    மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த 14 பேர் மீது குண்டாஸ்

    சென்னையில் மருத்துவரின் உடல் அடக்கத்தை தடுத்த 14 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த பெண் உள்பட 14 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. 

    09:35 (IST)01 May 2020

    மகாராஷ்டிராவில் கொரோனா

    மகாராஷ்டிராவில் 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 1,773 பேர் குணமடைந்த நிலையில் 459 பேர் உயிரிழந்துள்ளனர். 

    09:10 (IST)01 May 2020

    இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை

    இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,610 லிருந்து 35,403ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,075லிருந்து 1,147 ஆகவும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,373 லிருந்து 8,889 ஆகவும் உயர்ந்துள்ளது. 

    08:48 (IST)01 May 2020

    அமெரிக்காவில் கொரோனா

    அமெரிக்காவில் 10.95 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் மேலும் 30,825 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,95,019 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 2,201 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63,856 ஆக உயர்ந்துள்ளது. 

    08:31 (IST)01 May 2020

    உலகளவில் கொரோனா

    உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,04,381ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,33,839-ஆகவும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை10,39,144ஆகவும் உயர்ந்துள்ளது. 

    Corona Updates: அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருங்கள் என, கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு. பள்ளிகளில் முகாம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் பார்வையிட உத்தரவு. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை
    Chennai Coronavirus Corona
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment