Advertisment

Corona Updates: சலூன்கள், பியூட்டி பார்லர்கள், ஸ்பாக்கள் திறக்க தடை நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona Updates: சலூன்கள், பியூட்டி பார்லர்கள், ஸ்பாக்கள் திறக்க தடை நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

Covid-19 Cases Update : தேசிய அளவில் பிறப்பிக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு, இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாளை முதல் என்னென்ன தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன என்பது குறித்து, மத்திய அரசு இன்று அறிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும், 30 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், அதிரடியாக பல மாற்றங்களை செய்ய, அரசு தயாராகி வருவதாகவும், அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும், 30 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், அதிரடியாக பல மாற்றங்களை செய்ய, அரசு தயாராகி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

வெளி மாநிலத் தொழிலாளர்கள், தன்னிச் சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்கள் வழியாகவோ செல்ல வேண்டாம்' என, முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.கடந்த, 6 முதல், நேற்று முன்தினம் வரை, 55 ஆயிரத்து, 473 வெளி மாநிலத் தொழிலாளர்கள், 43 ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தினமும், 10 ஆயிரம் பேரை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.அவர்களுக்கான ரயில்வே கட்டணம் உட்பட, அனைத்து பயணச் செலவுகளையும், தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது. எனவே, வெளி மாநிலத் தொழிலாளர்கள்,தன்னிச்சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்கள் வழியாகவோ செல்ல வேண்டாம்.தமிழக அரசு அனுப்பும் வரை, வெளி மாநிலத் தொழிலாளர்கள், தற்போது தங்கியிருக்கும் முகாம்களில் தொடர்ந்து இருக்க வேண்டும். இவ்வாறு, அவர்கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Corona latest news updates : இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    21:49 (IST)17 May 2020

    சலூன்கள், பியூட்டி பார்லர்கள், ஸ்பாக்கள் திறக்க தடை நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

    தமிழகத்தில் பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், முடித்திருத்தம் செய்யும் நிலையங்கள், சலூன்கள், பியூட்டி பார்லர்கள், ஸ்பாக்கள் திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    21:01 (IST)17 May 2020

    முடிதிருத்தும் கடைகள் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் - மத்திய அரசு

    மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு விதிமுறைகளில், முடிதிருத்தும் கடைகள் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். சிவப்பு மண்டலங்களிலும் சலூன்களை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

    18:58 (IST)17 May 2020

    மே 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

    மே 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 31 வரை விமானம், மெட்ரோ ரயில் சேவைகள் இல்லை. பள்ளிகள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இரு மாநிலங்களுக்கு இடையேபேருந்து போக்குவரத்தை தொடங்கலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர, இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை யாரும் வெளியே வரக் கூடாது. இறுதிச் சடங்கில் 20 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பொது இடங்களிலும் பணியிடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வெண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    18:32 (IST)17 May 2020

    சென்னையில் மட்டும் இன்று 482 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 482 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது.

    18:15 (IST)17 May 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 11,000ஐ தாண்டியது

    தமிழகத்தில் இன்று புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:10 (IST)17 May 2020

    நாடு முழுவதும் பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு

    கொரோனா பரவலைத் தடுக்க மூன்றாவது முறையாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், பொது முடக்க்கத்தை நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

    18:03 (IST)17 May 2020

    அனைத்து ஏர் இந்தியா விமானங்களில் தற்போது டிக்கெட் முன்பதிவு இல்லை

    அனைத்து ஏர் இந்தியா விமானங்களிலும் தற்போதைக்கு டிக்கெட் முன்பதிவு இல்லை. மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிறகே விமான சேவை தொடங்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    17:34 (IST)17 May 2020

    பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் - மோடி

    புதிய அறிவிப்புகள் சுகாதாரம், கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தும்; தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தவும், கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் - பிரதமர் மோடி

    17:22 (IST)17 May 2020

    நாடு முழுவதும் 3-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவு: 4ஆம் கட்ட ஊரடங்கின் நெறிமுறைகள் இன்று அறிவிப்பு?

    மத்திய அரசு அறிவித்த 3ஆம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இருப்பினும், நான்காம் கட்ட ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்துள்ளதால், அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மேலும் எத்தனை நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும், என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.

    16:55 (IST)17 May 2020

    தடை தொடரும் மாவட்டங்கள் எவை?

    ஊரடங்கு 4.0 - தடை தொடரும் மாவட்டங்கள் எவை? தளர்வு அளிக்கப்படும் மாவட்டங்கள் எவை?

    16:00 (IST)17 May 2020

    25 மாவட்டங்களுக்கான தளர்வுகள் என்னென்ன? - பகுதி 4

    12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது.

    தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்களிக்கப் படுகிறது. இதற்காக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், சென்னை மாநகர ஆணையரிடமும் அனுமதி பெற வேண்டும்.

    மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் TN e-pass உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர பயன்படுத்தப்படும் டாக்ஸி, ஆட்டோவுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது.

    15:59 (IST)17 May 2020

    25 மாவட்டங்களுக்கான தளர்வுகள் என்னென்ன? - பகுதி 3

    சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்களும், 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில், 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி.

    15:57 (IST)17 May 2020

    25 மாவட்டங்களுக்கான தளர்வுகள் என்னென்ன? - பகுதி 2

    மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் TN E-Pass இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

    தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் - தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    15:56 (IST)17 May 2020

    25 மாவட்டங்களுக்கான தளர்வுகள் என்னென்ன? - பகுதி 1

    அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் E-Pass இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது.

    மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர TN E-Pass பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.

    அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், Innova போன்ற பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் (வாகன ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    15:51 (IST)17 May 2020

    25 மாவட்டங்கள் எவை எவை?

    கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன

    15:49 (IST)17 May 2020

    தனிப்பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறலாம்

    தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனிப்பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறலாம்

    பயிற்சி பெறும் விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் ஆட்சியர் அல்லது ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும்

    - முதல்வர் பழனிசாமி

    15:48 (IST)17 May 2020

    தமிழர்களை அழைத்து வர விரைவான நடவடிக்கை

    வெளி மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர விரைவான நடவடிக்கை

    * டெல்லியில் இருந்து வாரம் 2 விரைவு ரயில் இயக்க மத்திய அரசிடம் கோரிக்கை

    * மருத்துவ பயன்பாட்டுக்கு இ-பாஸ் மூலம் டாக்சி, ஆட்டோ சென்று வர அனுமதி

    15:48 (IST)17 May 2020

    5 பேருக்கு மேல் கூட கூடாது

    முக கவசம் அணிய வேண்டும் - சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் - அடிக்கடி கை கழுவ வேண்டும்

    * பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட கூடாது

    * நோய்த் தொற்று குறைய குறைய தளர்வுகள் அதிகரிக்கப்படும்

    15:47 (IST)17 May 2020

    ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

    நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை - சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர பிற இடங்களில் அனுமதிக்கப்பட்ட பணி தொடரும்

    * சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எந்த தளர்வும் இல்லை

    * நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

    15:46 (IST)17 May 2020

    20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது

    தங்கும் விடுதி, ஓட்டல், சொகுசு விடுதி இயங்காது திருமண நிகழ்ச்சிக்கு தற்போது உள்ள நடைமுறை தொடரும்

    * இறுதி ஊர்வலத்தில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது

    15:46 (IST)17 May 2020

    மின்சார ரயில் போக்குவரத்து இல்லை

    ஆட்டோ, டாக்சி, மெட்ரோ- மின்சார ரயில் போக்குவரத்து இல்லை

    *அனுமதிக்கப்பட்ட, அத்தியாவசிய பணிகளுக்கும் மட்டுமே போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள்

    15:46 (IST)17 May 2020

    கல்வி, கலாச்சார விழாக்கள் நடைபெறாது

    சமய சமுதாய அரசியல், கல்வி, கலாச்சார விழாக்கள் நடைபெறாது

    * விமானம், ரயில், பேருந்து இயங்காது - மாநிலங்கள் இடையே மற்றும் சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து இல்லை

    15:46 (IST)17 May 2020

    இ பாஸ் இல்லாமல் போக்குவரத்திற்கு அனுமதி

    கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகையிலும் புதிய தளர்வுகள்

    * தருமபுரி, வேலூர், நீலகிரி மாவட்டங்களிலும் புதிய தளர்வுகள் அமலாகும்

    * மாவட்டங்களுக்குள் இ பாஸ் இல்லாமல் போக்குவரத்திற்கு அனுமதி

    15:45 (IST)17 May 2020

    பூங்காக்கள், விளையாட்டு அரங்கத்திற்கு தடை

    திரையரங்கு, மதுக்கூடம், உடற்பயிற்சி கூடம், கடற்கரை, பூங்காக்கள், விளையாட்டு அரங்கத்திற்கு தடை

    * கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரையில் புதிய தளர்வுகள்

    15:15 (IST)17 May 2020

    மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் 

    ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் 

    தமிழகம் முழுவதும் திரையரங்குகள், பார்கள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள் போன்றவை இயங்குவதற்கான தடை தொடரும் 

    - தமிழக அரசு

    15:14 (IST)17 May 2020

    பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படும்

    மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று விமானம், ரயில், பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படும்

    கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட குறிப்பிட்ட 25 மாவட்டங்களுக்கு மட்டும், புதிய தளர்வுகள் அறிவிப்பு

    15:12 (IST)17 May 2020

    ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் - தமிழக அரசு

    15:12 (IST)17 May 2020

    100 சதவீத பணியாளர்கள் பணியாற்ற அனுமதி

    தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 சதவீத பணியாளர்கள் பணியாற்ற அனுமதி!

    12 ஆம் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு அனுமதி

    சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 50% தொழிலாளர்களுடன் ஆலைகள் இயங்கலாம்

    - முதல்வர் அறிவிப்பு

    15:11 (IST)17 May 2020

    சிறப்பு அனுமதி பெற்றுள்ள பேருந்துகளை இயக்கலாம்

    25 மாவட்டங்களில் அத்தியாவசிய பணி, அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு போக்குவரத்து அனுமதி; இ-பாஸ் இல்லாமல் போக்குவரத்து இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது!

    25 மாவட்டங்களில் சிறப்பு அனுமதி பெற்றுள்ள பேருந்துகளை இயக்கலாம்.

    அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும்.

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கீடு

    15:02 (IST)17 May 2020

    தமிழகத்தி​ல் மே 31 வரை ஊரடங்கு

    தமிழகத்தில் மே 31-ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தளர்வு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    14:40 (IST)17 May 2020

    குணமடைந்து வீடு திரும்பினர்

    தஞ்சை மருத்துவக்கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

    14:36 (IST)17 May 2020

    நாளை முடிவு

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு வைப்பது குறித்து நாளை முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்

    14:36 (IST)17 May 2020

    விபரீத முடிவு - ஸ்டாலின்

    “கொரோனா பரிசோதனையை குறைப்பது விபரீத முடிவு“ - திமுக தலைவர் ஸ்டாலின்

    கொரோனாவிலும் பொய் கணக்கு எழுதி பொது மக்களை ஏமாற்றாதீர்கள் - அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

    13:59 (IST)17 May 2020

    மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

    மகாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

    கொரோனா நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பு என மாநில அரசு தகவல்

    மகாராஷ்டிராவில் இதுவரை 30,706 பேர் கொரோனாவால் பாதிப்பு

    13:34 (IST)17 May 2020

    எதிர்க்கட்சிகளுக்கு நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

    புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்; இவ்விவகாரத்தில் நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென சோனியா காந்தியிடம் வணங்கி கேட்டுக்கொள்கிறேன் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    13:02 (IST)17 May 2020

    டெல்லியில் 150யை நெருங்குகிறது கொரோனா மரணம்

    தலைநகர் டெல்லியில், கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட மரணங்கள் 149 ஆக அதிகரி்த்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 19 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9755 ஆக அதிகரி்ததுள்ளது.

    12:36 (IST)17 May 2020

    பொது சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

    இந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்றுநோய் தடுப்பு பிரிவுகள். சோதனை ஆய்வகம் உள்ளிட்டவைகள் துவக்கப்படும். நாட்டின் பொதுசுகாதாரத்தில் அதிக செலவீனங்களை செய்யும்நோக்கில் அதிகளவிலான நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    12:28 (IST)17 May 2020

    சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு

    சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.

    publive-image

    11:48 (IST)17 May 2020

    அரசு என்ன செய்யப் போகிறது? – சிதம்பரம் கேள்வி

    கொரோனா பரவலை தடுப்பதற்காக தேசிய அளவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது. அரசு என்ன செய்யப் போகிறது? என்று முன்னாள் நிதியமைச்சர்  சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    11:23 (IST)17 May 2020

    தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல்கள்

    வெளி மாவட்ட, வெளிமாநில, மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு தமிழக அரசு, புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

    publive-image

    publive-image

    11:05 (IST)17 May 2020

    கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு

    100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த மாணவர்கள் பொதுத்தேர்வு மையங்களில் தேர்வு எழுதக் கூடாது என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    10:41 (IST)17 May 2020

    ஊரடங்கை விலக்கிக்கொள்ள மாநில அரசுகள் விரும்பவில்லை : உள்துறை

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் 3ம் கட்டம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், எந்த மாநில அரசும், ஊரடங்கை முழுமையாக விலக்கிக்கொள்ள கோரிக்கை வைக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    10:22 (IST)17 May 2020

    பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் மாற்றம்

    கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் புயல் பாதிப்புகள் ஏற்பட்டால் அதைச் சமாளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

    தமிழகத்தில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுள்ள இந்த சூழ்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வதோடு, புயலை எதிர்கொள்ள மிக சரியான நேரத்தில் தயார் நிலைக்கு வரவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10:18 (IST)17 May 2020

    டாஸ்மாக் கடைகளில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

    தமிழகத்தில் நேற்று, டாஸ்மாக் கடைகளில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.7 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடிக்கும், திருச்சியில் ரூ.40.5 கோடிக்கும், கோவையில் ரூ.33.05 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது.

    09:43 (IST)17 May 2020

    90,927 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,927 ஆக அதிகரித்துள்ளது. 34,109 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். 2,872 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    09:25 (IST)17 May 2020

    சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமுள்ள நிலையில், அங்கு மரணங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன

    அமெரிக்கா - 90113

    பிரிட்டன் -34466

    இத்தாலி - 31763

    பிரான்ஸ் - 27625

    ஸ்பெயின் - 27563

    பிரேசில் - 15662

    ஜெர்மனி - 8027

    09:15 (IST)17 May 2020

    உலக சுகாதார நிறுவனம் முக்கிய அறிவிப்பு

    கொரோனா தடுப்பு மருந்து சோதனையாக சர்வதேச நாடுகளில் 8 மருந்துகளின் சோதனைகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    Corona latest news updates : பொதுத் தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு மாணவர்கள், வெளியூர்களில் இருந்து திரும்பி வருவதற்கு, 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பித்து, 'இ - பாஸ்' பெறலாம் என, அரசு தெரிவித்துள்ளது. 'கணினி வசதியே இல்லாதவர்களால், எப்படி பாஸ் வாங்க முடியும்? அப்படியே வாங்கினாலும், தேர்வு எழுதுவதற்காக, வெளியூர் வருபவர்களுக்கு மட்டும், கொரோனா பரவாதா? உத்தரவிடுவதற்கு முன், அரசு யோசிக்க வேண்டாமா?' என, பெற்றோரும், ஆசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

    கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்களை மாற்ற வேண்டும். ஏழைகளின் வங்கி கணக்கில் பணத்தை போடுங்கள்,'' என, மத்திய அரசுக்கு, காங்கிரஸ், எம்.பி., ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

    India Corona Virus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment