Advertisment

Corona Updates : கொரோனா தடுப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 135 தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona News, CM Edappadi Palaniswami

Corona News, CM Edappadi Palaniswami

Covid-19 Cases Updates: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி கலந்தாலோசிக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் இன்று ஆலோசனை நடத்துகிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த ஆலோசனை இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது.

Advertisment

'கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியில் செல்வோர், 'மாஸ்க்' எனப்படும் முக கவசத்தை கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். கைக்குட்டையை கூட, முக கவசமாக அணிந்து செல்லலாம்' என, பொதுமக்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட முக கவசத்தைத் தான் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முக கவசங்களை கூட அணியலாம். குறிப்பாக, சுகாதாரமான கைக்குட்டைகளை முக கவசமாக அணிவது மிகவும் நல்லது. இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 135 தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 'தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை பெற விரும்புவோர், அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். 'மேலும், கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் குறித்த விபரங்களை, தினமும், பொது சுகாதாரத்துறைக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும்' என, அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    22:57 (IST)05 Apr 2020

    ஒளியேற்றிய அக்சய் குமார்

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம்பிக்கை ஒளியேற்றினார் பாலிவுட் நடிகர் அக்சய் குமார்

    22:57 (IST)05 Apr 2020

    நம்பிக்கை ஒளியேற்றிய இந்திய ராணுவத்தினர்

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம்பிக்கை ஒளியேற்றிய இந்திய ராணுவத்தினர்

    22:55 (IST)05 Apr 2020

    ’ஒற்றுமையின் சிலை’யை ரூ .30,000 கோடிக்கு "விற்க" ஆன்லைனில் விளம்பரம்

    குஜராத்தில் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    (STATUE OF UNITY) ’ஒற்றுமையின் சிலை’யை ரூ .30,000 கோடிக்கு "விற்க" ஆன்லைனில் விளம்பரம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

    22:44 (IST)05 Apr 2020

    ஒற்றுமை ஒளியேற்றிய ரஜினிகாந்த்...

    மனைவி லதாவுடன் ரஜினிகாந்த்...

    22:42 (IST)05 Apr 2020

    தமிழக முதல்வர் பழனிசாமி ஒளியேற்றிய போது...

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம்பிக்கை ஒளியேற்றினார் நடிகை நயன்தாரா

    22:38 (IST)05 Apr 2020

    மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி

    தமிழகத்தில் எதிர்ப்பார்த்ததை விட 1,000 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளது. எந்த இடத்திலும் பிரச்னை ஏற்படவில்லை

    அரசின் வேண்டுகோளை ஏற்று ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும், மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி.

    - அமைச்சர் தங்கமணி

    22:32 (IST)05 Apr 2020

    விளக்கேற்றியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் சச்சின் ஆதரவு

    பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தனது குடும்பத்தினருடன் சேர்ந்து விளக்கேற்றியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் சச்சின் ஆதரவு

    22:31 (IST)05 Apr 2020

    தொழிலதிபர் ரத்தன் டாடா ஆதரவு

    பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கேற்றினார் தொழிலதிபர் ரத்தன் டாடா

    22:30 (IST)05 Apr 2020

    விளக்கேற்றிய பி.வி.சிந்து

    பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கேற்றினார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து

    22:01 (IST)05 Apr 2020

    ஒற்றுமை ஒளியேற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர்

    கொரோனாவுக்கு எதிராக ஒளியேற்றினார் அமைச்சர் விஜயபாஸ்கர்

    22:00 (IST)05 Apr 2020

    ஒளியேற்றிய பிரதமர் மோடி

    டெல்லியில் பிரதமர் மோடி தனது இல்லத்தில் விளக்கேற்றினார்

    21:59 (IST)05 Apr 2020

    2500 மெகா வாட் குறைந்தது

    தமிழகத்தில் எந்தவித மின்சார பாதிப்பும் ஏற்படவில்லை

    * எதிர்பார்த்ததை விட 2500 மெகா வாட் குறைந்தது - அமைச்சர் தங்கமணி

    21:38 (IST)05 Apr 2020

    ஒளியேற்றினார் முதல்வர் பழனிசாமி

    கொரோனாவுக்கு எதிராக ஒளியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    21:35 (IST)05 Apr 2020

    14ஆம் தேதிக்குப் பிறகு முடிவு

    பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

    21:34 (IST)05 Apr 2020

    ஒளியேற்றிய அமித்ஷா...

    பிரதமரின் வேண்டுகளை ஏற்று டெல்லியில் விளக்கேற்றினார் அமித்ஷா

    21:21 (IST)05 Apr 2020

    ஒளியேற்றினார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

    கொரோனாவுக்கு எதிராக ஒளியேற்றினார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

    21:09 (IST)05 Apr 2020

    ஒளியேற்றிய ரஜினிகாந்த்

    சென்னை போயஸ் கார்டன் இல்ல வாயிலின் முன்பு ஒளியேற்றினார் நடிகர் ரஜினிகாந்த்.

    21:06 (IST)05 Apr 2020

    மெழுகுவர்த்தி, டார்ச் மூலம் ஒளி

    பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் மூலம் ஒளியேற்றி வருகின்றனர். இந்தியா முழுவதும் மக்கள் இதனை பின்பற்றி வருகின்றனர்.

    21:04 (IST)05 Apr 2020

    நாடு முழுவதும் ஒற்றுமை ஒளி

    பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, மக்கள் மின் விளக்குகளை அனைத்து ஒளியேற்றி வருகின்றனர். நாடு முழுவதும் ஒற்றுமை ஒளியேற்றி வருகின்றனர். 

    20:51 (IST)05 Apr 2020

    யாரும் பயப்பட வேண்டாம்

    இன்றிரவு 9.09 மணிக்கு ஒளியேற்றும் நிகழ்வு முடிந்த பின்னர் யாரும் பயப்பட வேண்டாம்

    - அமைச்சர் தங்கமணி

    20:41 (IST)05 Apr 2020

    நியூயார்க்கில் மட்டும் 3500 பேர் கொரோனாவுக்கு பலி

    அமெரிக்காவில் கொரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான நியூயார்க்கில் மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது நாளோன்றுக்கு இருபதாயிரம் பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் .

    20:40 (IST)05 Apr 2020

    கொரோனா பரிசோதனைக்கு முன்னரே செத்து மடியும் மக்கள்

    இத்தாலியின் வடக்கு பகுதி கொரோனாவுக்கு அதிகம் பாதித்துள்ள நிலையில், மருத்துவமனையில் இடமில்லாததால் நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறும் அவல நிலை நீடிக்கிறது. இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கு முன்னரே மக்கள் உயிரிழந்து வருவது அதிகரித்துள்ளது.

    20:08 (IST)05 Apr 2020

    காவலர்களை சிறப்பித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

    இடைவெளியை கடைபிடிக்காமல் நின்ற கூட்டம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மருத்துவமனை முன், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல் துறையினர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் கலந்துகொண்டு காவல் துறையினர்களூக்கு உதவிகளை வழங்கினர்.நிகழ்ச்சியில், இடைவெளியை பின்பற்றாமல் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு நின்றனர்.

    19:50 (IST)05 Apr 2020

    முதலமைச்சருடன் பிரதமர் மோடிதொலைபேசியில் பேச்சு

    தமிழக முதலமைச்சருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

    * 8 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அதிமுக சார்பில் பங்கேற்க முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    19:24 (IST)05 Apr 2020

    சைபர் மோசடி...

    போலியான முறையில் பி.எம். கேர்ஸ் என்ற இணையதள இணைப்புகளைப் பயன்படுத்தி சைபர் மோசடிகள் மூலம் சிலர் மக்களை ஏமாற்றுவதாக மகாராஷ்டிரா சைபர் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    19:01 (IST)05 Apr 2020

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு - மாவட்டம் வாரியாக

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக லிஸ்ட் இங்கே,

    publive-image

    18:54 (IST)05 Apr 2020

    தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

    கொரோனாவால் உயிரிழந்த கீழக்கரை நபரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் - ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ்

    18:50 (IST)05 Apr 2020

    நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

    இன்று இரவு 9 மணிக்கு ஒளியேற்ற நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

    * மின் விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும், மற்ற மின்சாதனங்களை அணைக்க தேவையில்லை. தெரு விளக்குகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களில் மின்விளக்குகளை அணைக்க தேவையில்லை

    18:43 (IST)05 Apr 2020

    எப்போது வேண்டுமானாலும் கொரோனா உறுதியாகலாம்

    28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா உறுதியாகலாம்

    * 2 முறைக்கு மேல் சோதனையில் இல்லை என்று முடிவு வந்தபிறகே வீட்டிற்கு அனுப்புவோம்

    * இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன

    - பீலா ராஜேஷ்

    18:29 (IST)05 Apr 2020

    2ஆம் நிலையில் தமிழகம்...

    கொரோனா பாதிப்பில் 2ஆம் நிலையில்தான் இருக்கிறது தமிழகம். நிலைமை தீவிரமான பிறகு சிகிச்சைக்கு வருபவர்களே உயிரிழக்கின்றனர் -  பீலா ராஜேஷ்

    18:19 (IST)05 Apr 2020

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்...

    இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன

    மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் தான் அதிக ரத்த மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன - பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை செயலர்

    18:07 (IST)05 Apr 2020

    கொரோனா பாதிப்பு 571 ஆக அதிகரிப்பு

    ’தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 571 ஆக அதிகரிப்பு’

    இன்று பாதிக்கப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்

    - சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

    17:53 (IST)05 Apr 2020

    அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும்

    மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும்

    * விதி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

    17:53 (IST)05 Apr 2020

    27,661 நிவாரண முகாம்களில், 12.50 லட்சம் பேர்

    நாடு முழுவதும் உள்ள 27,661 நிவாரண முகாம்களில், 12.50 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் முறையாக பின்பற்றுகின்றன. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் நிலைமை திருப்திகரமாக உள்ளது - உள்துறை அமைச்சகம்

    17:52 (IST)05 Apr 2020

    40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு

    கொரோனாவை கட்டுப்படுத்த உலகெங்கும் 40 நாடுகளுக்கு மேல் முழு ஊரடங்கு அல்லது பகுதி சார்ந்த ஊரடங்கு அமலில் உள்ளது

    17:50 (IST)05 Apr 2020

    மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

    இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார். அண்ணா சாலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பிரதமர் அறிவுறுத்திய 9 நிமிட நேரத்தில் தெருவிளக்குகள் மருத்துவமனை விளக்குகளை அணைக்க வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    17:49 (IST)05 Apr 2020

    தமிழகத்தில் மேலும் 8 கொரோனா ஆய்வகங்கள் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

    தமிழகத்தில் மேலும், எட்டு கொரோனா ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே மாநிலத்தில் 17 கொரோனா ஆய்வகங்கள் செயல்படுவதாக குறிப்பிட்டார். ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒன்று என்ற விதத்தில் கொரோனா ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

    17:49 (IST)05 Apr 2020

    மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குன்றத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

    16:23 (IST)05 Apr 2020

    கடந்த 24 மணி நேரத்தில் 472 பேருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை

    நாடு முழுவது கொரோனா பாதிப்பால் 79 பேர் உயிரிழந்துள்ளனர் - மத்திய அசுகாதாரத்துறை

    கொரோனா பாதிக்கப்பட்ட 267 இதுவரை குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 274 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்

    16:17 (IST)05 Apr 2020

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியன் வங்கி ரூ.8 கோடி நிதியுதவி

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியன் வங்கியின் 43,000 ஊழியர்கள் அனைவரும் தங்கள் ஒரு நாள் ஊதியம் ரூ.8 கோடியை பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    15:53 (IST)05 Apr 2020

    பள்ளிகள், கல்லூரிகள் குறித்து திறப்பது குறித்து ஏப்ரல் 14-ம் தேதி முடிவு

    மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்: “பள்ளிகள் கல்லூரிகளை திறப்பது குறித்து ஏப்ரல் 14-ம் தேதி மத்திய அரசு முடிவெடுக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மத்திய அரசு முடிவெடுக்கும். ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டபின், தேர்வுகள் நடத்துவது, விடைத்தாள் திருத்துவது குறித்த திட்டம் அரசிடம் தயாராக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

    15:43 (IST)05 Apr 2020

    மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏப்ரல் 7-ம் தேதி ஆலோசனை

    ஊரடங்கு விலக்கலுக்கு பிறகு நீதிமன்ற பணிகளை துவங்குவது குறித்து ஏப்ரல் 7ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்த உள்ளது.

    மாவட்ட நீதிபதிகள் தங்களின் கருத்துகளை நாளைக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    14:52 (IST)05 Apr 2020

    கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள்

    தமிழகத்தில் மேலும் அதிக கொரோனா பரிசோதனை ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    14:21 (IST)05 Apr 2020

    ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி வேண்டுகோள்

    கொரோனா பரிசோதனை என்ற‌ பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட பலர் மருத்துவமனைகளிலே உள்ளனர்.பரிசோதனை முடிவுகளை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    13:24 (IST)05 Apr 2020

    ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

    திமுக தலைவர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலைகளை குறித்து கேட்டறிந்தார்.

    ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்க இருப்பதாக, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

    12:52 (IST)05 Apr 2020

    அரசு உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளுக்கு சீல் வைப்பு

    சென்னையில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கடைகளை 3 மாதங்களுக்கு திறக்க தடை விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    12:36 (IST)05 Apr 2020

    பிரதமர் மோடி வேண்டுகோள்

    இன்று ( ஏப்ரல் 5ம் தேதி) இரவு 9 மணி்ககு 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகளை ஏற்றி இந்திய மக்களின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுங்கள் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    12:16 (IST)05 Apr 2020

    78 ஆயிரம் பேர் கைது

    கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நாடுமுழுமைக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவு விதிகளை மீறியதாக தமிழகத்தில் மட்டும் 78,707 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    11:53 (IST)05 Apr 2020

    மாரிதாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து, சமூக வலைதளங்களில் இரு மதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    11:48 (IST)05 Apr 2020

    தற்காலிக டீன்கள் நியமனம் – பீலா ராஜேஷ்

    தர்மபுரி, ஈரோடு, பெரம்பலூர் மருத்துவ கல்லூரிகளுக்கு தற்காலிக டீன்கள் நியமிக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

    திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பூவதி, தருமபுரி மருத்துவக்கல்லூரி டீனாக நியமனம்

    கோவை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மணி, ஈரோடு மருத்துவக்கல்லூரி டீனாக நியமனம்

    வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் தீரணிராஜன், பெரம்பலூர் மருத்துவக்கல்லூரி டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    11:19 (IST)05 Apr 2020

    மின் விளக்குகளை அணைப்பதால் எந்த பிரச்சனையும் வராது

    இன்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைப்பதால் எந்த பிரச்சனையும் வந்துவிடாது. மின்விளக்குகளை அணைத்தாலும் பிற சாதனங்களை இயக்கலாம் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

    10:45 (IST)05 Apr 2020

    பிரதமரின் அறிவிப்பில் எவ்வித அரசியலும் கிடையாது – அமைச்சர் செல்லூர் ராஜூ

    பிரதமரின் அறிவிப்பில் எந்தவித அரசியலும் கிடையாது. அவரின் வேண்டுகோளுக்கிணங்க இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    10:31 (IST)05 Apr 2020

    மக்கள் திருந்துவது எப்போது?

    மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசும், நிர்வாகங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மக்கள் அதை கேட்பதாக தெரியவில்லை என்பதற்கு இதுவே சாட்சி

    சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்

    publive-image

    10:26 (IST)05 Apr 2020

    அனைவரும் கூடுதல் விழிப்புடன் இருப்போம் – ராமதாஸ்

    09:51 (IST)05 Apr 2020

    அமைச்சர் வேலுமணி கடும் எச்சரிக்கை

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தனது டிவிட்டர் பதிவில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விதிமுறைகளை மீறினால், 3 மாதங்களுக்கு கடையை திறக்க முடியாது என்றும் அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    09:32 (IST)05 Apr 2020

    நடிகை மீனாவின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ

    09:08 (IST)05 Apr 2020

    சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு - 1,199,000 நபர்கள்

    பலி - 64,350 பேர்

    குணமடைந்தவர்கள் - 2,46,000 பேர்

    09:01 (IST)05 Apr 2020

    கொரோனா - சர்வதேச நாடுகளில் உயிரிழப்புகள்

    இத்தாலி - 15,362

    ஸ்பெயின் - 11,814

    அமெரிக்கா - 8,344

    பிரான்ஸ் - 7,560

    பிரிட்டன் - 4,313

    சீனா -3,326

    நெதர்லாந்து - 1,651

    ஜெர்மனி - 1,395

    பெலஜியம் - 1,283

    08:53 (IST)05 Apr 2020

    தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

    சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் பலியானதை தொடர்ந்து, தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரி்ததுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Corona latest news updates : 'காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச பாதிப்புடன் வரும் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்வது அவசியம். கொரோனா காலத்தில், அரசியல் செய்யாமல், சமூகப் பேரிடரை சரி செய்வீர்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஏப்ரல், 15ம் தேதி முதல், ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க, ரயில்வே நிர்வாகம் தயாராகி வருகிறது. இந்நிலையில், ஏப்ரல், 15ம் தேதிக்குப் பின், மீண்டும் ரயில் சேவைகளை தொடங்க, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. ரயில்வே பாதுகாப்பு பணியாளர்கள், ரயிலை இயக்கும் ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், காவலர்கள் என, அனைத்து ஊழியர்களிடமும், பணிக்கு திரும்ப தயாராக இருக்குமாறு, ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டது. எனினும், மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின் தான், ரயில் சேவைகள் தொடங்கப்படும் என தெரிகிறது

    Tamil Nadu India Corona Virus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment