Advertisment

Corona Updates : டாக்டர் சைமன் மரணம் - இன்று முதல் கருப்புப் பட்டை அணிய அரசு மருத்துவர்கள் முடிவு

கொரோனா தொற்றால் டாக்டர் சைமன் மரணமடைந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ பணியாளர்கள், டாக்டர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் இன்றுமுதல் பணிநேரத்தில் கருப்புப்பட்டை அணிய முடிவு எடுத்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus latest news updates

coronavirus latest news updates

Covid-19 Cases Update: கொரோனா தொற்றால் டாக்டர் சைமன் மரணமடைந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ பணியாளர்கள், டாக்டர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் இன்றுமுதல் பணிநேரத்தில் கருப்புப்பட்டை அணிய முடிவு எடுத்துள்ளனர்.

Advertisment

தமிழகத்தில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தையும், மத்திய அரசு அறிவித்துள்ள, மே, 3 வரை, தொடர்ந்து கடைபிடிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு, ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய் தொற்றின் தன்மையை, மீண்டும் ஆராய்ந்து, நோய் தொற்று குறைந்தால், வல்லுனர் குழு ஆலோசனை பெற்று, நிலைமைக்கு ஏற்றார்போல், தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழகம்முழுவதும் பசியால் வாடும் மக்களுக்கு உணவு தருவோம்,'' என, மாவட்ட செயலர்களிடம், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தெரிவித்தார்.தி.மு.க., மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:'ஒன்றிணைவோம் வா' என்ற தலைப்பில், நம் பணியை துவக்க உள்ளோம். ஒட்டுமொத்த உலகத்தையும், கொரோனா வைரஸ் முடக்கியுள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து, வைரசை வீழத்துவோம் என்ற நம்பிக்கை, எனக்கு இருக்கிறது.புயல், சுனாமி, வெள்ளம், தீ விபத்து, பஞ்சம் போன்ற, பல பேரிடர்களை சமாளித்துள்ளோம். தமிழகம் முழுவதும், பசி பட்டினியோடு இருப்பவர்களுக்கு உதவி செய்வோம். தற்போது, பசியால் வாடுபவர்களுக்கு, உணவு வழங்கி, தனித்தனியாக, தி.மு.க.,வினர் உதவி செய்து வருகின்றனர். அடுத்த கட்டமாக, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உதவி செய்வோம்.ஒருங்கிணைவோம்; உணவு தருவோம்; உயிரூட்டுவோம்; பசியை போக்குவோம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    22:38 (IST)21 Apr 2020

    கொரோனா பாதிப்பு குறித்து தொலைபேசி சர்வே நடத்தும் இந்திய அரசு

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தொலைபேசி மூலம் இந்திய அரசு சர்வே நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    22:21 (IST)21 Apr 2020

    சென்னையில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் மேலும் 21 பேர் கைது

    சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த சம்பவத்தில் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    20:51 (IST)21 Apr 2020

    19 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

    கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்டுள்ள 19 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி நாளை காணொலி முலம் ஆலோசனை நடத்துகிறார்.

    20:30 (IST)21 Apr 2020

    கொரோனா மரணம் குறித்து ஆராய்வதற்கு மாநில, மாவட்ட அளவில் குழு அமைப்பு - தமிழக அரசு அரசாணை

    கொரோனா வைரஸால் ஏற்பட்ட மரணம் குறித்து ஆராய்வதற்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    20:22 (IST)21 Apr 2020

    அரசு மருத்துவர்கள் நாளைமுதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் - அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு

    கொரோனாவால் இறந்த மருத்துவருக்கு அஞ்சலி இரங்கல் தெரிவிக்கும் வகையில், அரசு மருத்துவர்கள் நாளைமுதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என்றும் அரசு மருத்துவர்கல் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பணியின்போது இறந்த மருத்துவர்களுக்கு நாளை இரவு 9 மணிக்கு குடும்பத்துடன் மெழுகு வர்த்து ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

    19:41 (IST)21 Apr 2020

    பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வந்திருப்பது வேதனை தருகிறது - மு.க.ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வந்திருப்பது மனவேதனை தருகிறது. அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவுகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    18:42 (IST)21 Apr 2020

    நெல்லையில் ஏப்.26, மே.3ல் முழு ஊரடங்கு - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

    நெல்லையில் ஏப்.26, மே.3 ஆகிய 2 நாள்களிலும் மருத்துவமனை, மருந்தகங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவித்துள்ளார்.

    18:39 (IST)21 Apr 2020

    தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்த எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு - சுகாதாரத்துறை

    தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:49 (IST)21 Apr 2020

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பலி என்ணிக்கை 600 ஆக உயர்வு - மத்திய சுகாதாரத்துறை

    இந்தியாவில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 590-ல் இருந்து இன்று 603 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,259 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:03 (IST)21 Apr 2020

    தமிழகத்தில் ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் - தமிழக அரசு

    ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளதால் மத்திய அரசின் தளர்வு பொருந்தாது. தமிழகத்தில் ஐ.டி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    16:37 (IST)21 Apr 2020

    ரேபிட் டெஸ்ட் கிட்டை 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம்

    கொரோனா பரிசோதனைக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டை 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம். மாநில அரசுகளுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல். 

    ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்துவது குறித்து 2 நாட்களுக்கு பிறகு மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

    16:16 (IST)21 Apr 2020

    சீனா கேள்வி

    ஹெச்1என்1 எனப்படும் பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் பரவியது அமெரிக்காவிலிருந்து தானே, அதற்கு யாரேனும் இழப்பீடு கேட்டோமா என சீனா கேள்வி எழுப்பியுள்ளது

    16:06 (IST)21 Apr 2020

    3 லட்சம் கேஸ் சிலிண்டர்கள்

    தடைக்காலத்திலும் தினமும் 3 லட்சம் கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகிறது

    * தமிழகத்திலுள்ள சிலிண்டரில் கேஸ் நிரப்பும் 12 ஆலைகளும் விடுமுறையின்றி அனைத்து நாட்களும் இயங்கி வருகின்றன

    - இந்தியன் ஆயில் நிறுவனம்

    16:06 (IST)21 Apr 2020

    அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை

    தமிழகத்தில் 5.47 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் நிலோபர் கபில்

    16:05 (IST)21 Apr 2020

    83 பேருக்கு கொரோனா

    ராஜஸ்தானில் மேலும் 83 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,659 ஆக உயர்வு - இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்

    15:22 (IST)21 Apr 2020

    சிங்கப்பூரில் ஜூன் 1 வரை ஊரடங்கு

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு

    * சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு

    15:12 (IST)21 Apr 2020

    25 பேருக்கு பாதிப்பு இல்லை

    திருவண்ணாமலை : செய்யாறு அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்த 25 பேருக்கு பாதிப்பு இல்லை - வீடு திரும்பினர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்த 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    15:04 (IST)21 Apr 2020

    20 பேர் குணமடைந்துள்ளனர்

    சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 20 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் இன்று மாலை வீடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    14:55 (IST)21 Apr 2020

    கொரோனா பாதிப்பு உறுதி

    பாகிஸ்தானில் பிரபல சமூக சேவகர் #FaisalEdhi என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல்!

    சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் இம்ரான்கானை சந்தித்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

    14:37 (IST)21 Apr 2020

    யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

    குடியரசுத் தலைவர் மாளிகையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

    பணியாளருக்கு தொற்று என வெளியான தகவல் குறித்து விளக்கம்

    குடியரசுத் தலைவர் மாளிகைப் பணியாளரின் குடும்ப நபருக்கு தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பு

    14:36 (IST)21 Apr 2020

    7 நாட்களில் மட்டும் ரூ.26.30 கோடி நிதி

    கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக இதுவரை 160 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதியாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக பலரும் நிதி வழங்கி வரும் நிலையில் கடந்த 7 நாட்களில் மட்டும் 26 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 208 ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் அளித்த நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    14:35 (IST)21 Apr 2020

    சுகாதார பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்

    கொரோனா தடுப்பு பணி - உயிரிழக்கும் சுகாதார பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம். உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு. மருத்துவப் பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

    - ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு 

    14:26 (IST)21 Apr 2020

    ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் சோதனை நிறுத்தம்

    ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் சோதனையில் தவறான முடிவுகள் வந்ததால், இந்த சோதனை நடைமுறை நிறுத்தப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    13:26 (IST)21 Apr 2020

    டிவி ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா

    தனியார் டிவி சேனலை சேர்ந்த 50 ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், 27 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன

    13:00 (IST)21 Apr 2020

    குண்டர் சட்டம் பாயும்

    கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கீழ்ப்பாக்கத்தில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

    12:53 (IST)21 Apr 2020

    திருப்பூர் செய்தியாளர்களுக்கு கொரோனா இல்லை.

    திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா என "ரேபிட் டெஸ்ட் கிட்" மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் செய்தியாளர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனத்தெரிய வந்துள்ளது.

    12:19 (IST)21 Apr 2020

    மக்கள் மனிதநேயம் காக்க வேண்டும்

    கொரோனா அறப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கும் மருத்துவர்களை நல்லடக்கம் செய்வதில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. நமக்காக உயிரை பணயம் வைத்து போராடிய மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு நாம் தலைவணங்கி மனிதநேயம் காக்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    12:03 (IST)21 Apr 2020

    சட்டவிரோதம்- கே.எஸ்.அழகிரி

    அம்மா உணவகத்தை தமிழக அரசின் நிதியிலிருந்துதான் நடத்த வேண்டுமேயொழிய அதிமுக கட்சியின் நிதியிலிருந்து நடத்துவது சட்டவிரோத செயலாகும். எனவே, இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

    11:27 (IST)21 Apr 2020

    கொரோனா விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு - வைரமுத்து கோரிக்கை

    கரோனாவுக்கு நிரந்தர மருந்து கண்டறியும் விஞ்ஞானிக்கோ விஞ்ஞானிகளுக்கோ நோபல் பரிசு வழங்கப்படும் என்று சுவீடிஷ் அகாடமி அறிவிக்க வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

    11:14 (IST)21 Apr 2020

    ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா தொற்று

    டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றி வரும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 125 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை தனிமைப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    10:35 (IST)21 Apr 2020

    உடல் அடக்கத்திற்கு எழுந்த எதிர்ப்பு மனவேதனை அளிக்கிறது - தமிழிசை

    கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பு மிகுந்த மன வேதனை அளிப்பதாக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    10:11 (IST)21 Apr 2020

    பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை

    கொரோனா தொற்றால் இறந்தவர் உடல் மூலம் வைரஸ் கிருமி பரவாது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இறந்தவர்களை மரியாதையுடன் அனுப்பி வைப்பதே மனித நேயம். கொரோனாவால் இறந்தவர்கள் உடல் சரியான பாதுகாப்புடன் கையாளப்படுகின்றன. இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை உருவான நிலையில் மக்களுக்கு சென்னை மாநகராட்சி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    10:05 (IST)21 Apr 2020

    சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல்

    பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

    publive-image

    09:32 (IST)21 Apr 2020

    சர்வதேச அளவில் கொரோனா பாதிப்புகள்

    கொரோனா வைரஸ் தொற்று, சர்வதேச நாடுகளிடையே அதிகளவிலான உயிர்ப்பலியை ஏற்படுத்தி வருகிறது.

    அமெரிக்கா - 42,094

    இத்தாலி - 24,114

    ஸ்பெயின் - 20,852

    பிரான்ஸ் - 20,292

    பிரிட்டன் - 16,550

    பெல்ஜியம் - 5,828

    ஈரான் - 5,209

    ஜெர்மனி - 4,862

    சீனா - 4,636

    09:19 (IST)21 Apr 2020

    17,656 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 17,656லிருந்து 18,601ஆக அதிகரித்துள்ளது.  உயிரிழந்தோர் எண்ணிக்கை 559லிருந்து 590ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,842லிருந்து 3,252ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Corona latest news updates : கேரளா உள்ளிட்ட, சில மாநிலங்களில் ஊரடங்கு விஷயத்தில் விதிமுறைகளை மீறி, ஓட்டல், பஸ் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. 'ஊரடங்கு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றாவிட்டால், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மோசமான விளைவுகள் ஏற்படும்' என, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கொரோனாவுக்கு பின் நாட்டை சீரமைக்கும் முக்கிய பணியில் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்' என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறி உள்ளார். எளிய மனிதனின் பிரச்னைகளையும் தேவைகளையும் கவனத்தில் வைத்து தேசத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். வல்லரசு என்ற இந்தியாவின் பல்லாண்டு கனவை நோக்கி பயணிக்கும் நேரம் இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    India Corona Virus Narendra Modi Lockdown
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment