ரமலான் நாளில் சிறப்பு தொழுகை அனுமதி கோரி மனு: ஐகோர்ட் தள்ளுபடி

Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

By: May 23, 2020, 7:28:22 AM

Covid-19 Cases Update : கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியிருக்கிறது. முதல் கட்டமாக 100 ஜோடி ரயில்களை வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இயக்கவிருப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ரயில்வே கவுண்டர்களில் முன்பதிவு தொடங்கின. அரசு செலவுகள் 20 சதவீதம் குறைப்பு, அரசு அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் செல்ல தடை என அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கொரோனா நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குகிறது.

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8795 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அதோடு பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். உலக அளவில் 51.89 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog
Corona latest news updates : இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
21:41 (IST)22 May 2020
உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் குழு

சென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க, உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய துணைவேந்தர் துரைசாமியின் பதவிக்காலம் முடிவதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, இக்குழு சென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

21:40 (IST)22 May 2020
வழக்கு தள்ளுபடி

ரமலான் தினத்தன்று பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்த 2 மணி நேரம் அனுமதி கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

20:42 (IST)22 May 2020
காவல்துறை அவசர அழைப்பு எண் தற்காலிக மாற்றம்

பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு நிறுவனத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏர்டெல், வோடா போன், ஐடியா மற்றும் ஜியோ நிறுவன, வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களில் இருந்து, அவசர போலீஸ் எண்: 100, 112ல் தொடர்பு கொண்டால், அந்த அழைப்புகளை, காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், தற்காலிகமாக, 044 - 4610 0100, 044 - 7120 0100 என்ற எண்களுக்கு, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். 

20:31 (IST)22 May 2020
பாகிஸ்தான் விமான விபத்து - ராகுல் இரங்கல்

பாகிஸ்தான் விமான விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

20:10 (IST)22 May 2020
ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு

உம்பன் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்  வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஒடிசாவில் புயல் நிவாரண பணிகளுக்காக முன்தொகையாக, ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20:03 (IST)22 May 2020
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

19:50 (IST)22 May 2020
தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதி இளங்கோவன் மதுரை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்  செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மகளிர் நீதிபதியாக அம்பிகா உள்பட 28 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

19:24 (IST)22 May 2020
ஐந்தாம் ஆண்டு ஆட்சி நாள் துவங்குவதையொட்டி அதிமுக அறிக்கை

அதிமுக அரசின் ஐந்தாம் ஆண்டு ஆட்சி நாள் துவங்குவதையொட்டி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், கட்சி தொண்டர்களுக்காக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக மக்களின் காவல் அரணாகவும், உண்மை ஊழியனாகவும் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இன்னும் செய்துமுடிக்க வேண்டிய பணிகள் இருப்பினும், அவற்றை செய்து முடிக்கும் ஆற்றல் நமக்கு உண்டு. அதிமுக அரசே தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பில் இருந்திட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். நேற்றும் இன்றும் நாளையும், அதிமுக ஆட்சியே மக்கள் அரசாக தொடர்வதை உறுதி செய்ய உழைப்போம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

18:29 (IST)22 May 2020
பாகிஸ்தான் விமான விபத்து : மோடி இரங்கல்

பாகிஸ்தான் விமான விபத்து, தன்னை நிலைகுலைய வைத்துள்ளது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுவதாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

18:25 (IST)22 May 2020
தமிழகத்தில் இரண்டாவது முறையாக ஒரேநாளில் அதிக பாதிப்பு

தமிழகத்தில் இன்று 786 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், 569 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.. இது ஒருநாளில், இரண்டாவது அதிகபட்ச தொற்றாளர்களின் எண்ணிக்கையாகும். (798 மே 11, 2020)

18:11 (IST)22 May 2020
786 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 14,753 ஆக உயர்வு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா

17:52 (IST)22 May 2020
42 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரள மாநிலத்தில் மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

* கொரோனா பாதிப்புக்கு தற்போது வரை 216 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

- பினராயி விஜயன், கேரள முதல்வர்

17:25 (IST)22 May 2020
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை செய்யபப்ட்டுள்ளது - ICMR

17:24 (IST)22 May 2020
ஐசிசி டி20 போட்டிகள்

இந்தாண்டு அக்டோபரில் நடைபெறவிருந்த ஐசிசி டி20 போட்டிகள் அடுத்தாண்டு ஒத்திவைக்கப்பட இருப்பதாகவும் அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

16:59 (IST)22 May 2020
செப்.30க்குள் தேர்தலை நடத்த வேண்டும்

கொரோனா ஊரடங்கு காரணமாக, தேர்தல் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளார். அது குறித்து அக்டோபர் 30ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரிக்கு நீதிபதி ஆணையிட்டுள்ளார். ஏற்கனவே, ஜூன் 30ஆம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

16:41 (IST)22 May 2020
அதிகார மையமாக பிரதமர் அலுவலகம் உள்ளது

அனைத்து அதிகாரங்களும் தனக்கு கீழ் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார்

இந்தியாவின் ஒட்டுமொத்த அதிகார மையமாக பிரதமர் அலுவலகம் உள்ளது

- சோனியா காந்தி

16:11 (IST)22 May 2020
WHO நிர்வாகக் குழுத்தலைவராக ஹர்ஷவர்தன் தேர்வு

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு

* 34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார்

* ஆண்டுக்கு 2 முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும்

15:58 (IST)22 May 2020
சோனியா காந்தி ஆலோசனை

எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை:

* முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங். மூத்த தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு

15:57 (IST)22 May 2020
விமான விபத்து

பாகிஸ்தானில் 100 பேர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது

* கராச்சி விமான நிலையத்திற்கு அருகே விபத்து நடந்ததாக தகவல். லாகூரிலிருந்து கராச்சி சென்றபோது நடுவானில் விபத்துக்குள்ளானது விமானம்

15:48 (IST)22 May 2020
7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிகள்

திட்டம், குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிடவும், ஆய்வு செய்யவும் 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தஞ்சை - ககன்தீப் சிங் பேடி
திருவாரூர் - ராஜேஷ் லக்கானி
நாகை - சந்திரமோகன்
கரூர் - கோபால்
திருச்சி - கார்த்திக்
அரியலூர் - விஜயராஜ்குமார்
புதுக்கோட்டை - அபூர்வா

15:48 (IST)22 May 2020
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அனுமதி

மருத்துவ அவசரநிலை அல்லது உறவினர் இறுதிச் சடங்கில் பங்கேற்க வருவதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அனுமதி

* திருமணமான ஜோடிகளில் ஒருவர் இந்தியாவில் இருந்தால் வெளிநாட்டில் உள்ள இணை இந்தியா வருவதற்கு அனுமதி

- மத்திய அரசு

15:47 (IST)22 May 2020
நாடு திரும்ப அனுமதி

வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

* வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இந்தியாவில் இருந்தால் நாடு திரும்ப அனுமதி

15:17 (IST)22 May 2020
கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

தனியார் உர விற்பனை நிலையங்கள் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை

மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்

- புதுக்கோட்டை ஆட்சியர்

15:17 (IST)22 May 2020
சினிமா படப்பிடிப்புக்கு எப்போது அனுமதி?

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி தருவது பற்றி விரைவில் முதல்வர் ஆலோசனை

* கொரோனா பாதிப்பு சூழல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு ஆலோசித்து முடிவு செய்யப்படும்

- அமைச்சர் கடம்பூர் ராஜூ

15:16 (IST)22 May 2020
வைரஸ் நோய் தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

14:31 (IST)22 May 2020
இந்தியாவுக்கு வர அனுமதி

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் படிக்கும் மாணவர்கள் இந்தியாவுக்கு வர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

மாணவரின் பெற்றோர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை!

14:16 (IST)22 May 2020
1.34 லட்சம் பேர் வெளி மாநிலம் சென்றுள்ளனர்

தமிழகத்தில் மே 20 ஆம் தேதி வரை 1.34 லட்சம் பேர் 92 ரயில்கள் மூலம் வெளி மாநிலம் சென்றுள்ளனர்

தமிழகத்தில் உள்ள சுமார் 4 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

- அமைச்சர் காமராஜ்

14:15 (IST)22 May 2020
ரூ.2,609 கோடியை வழங்க வேண்டும்

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.2,609 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்

- மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சர் காமராஜ் கோரிக்கை

14:05 (IST)22 May 2020
சட்டப்படி கடும் நடவடிக்கை

முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் பேட்டியளித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், முகக்கவசம் அணியாமல் பொது மக்கள் வெளியே வரக் கூடாது அவ்வாறு வரும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். மேலும் சமூக தொற்று உருவாகாமல் இருக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த படி சுகாதார அறிவுரைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.

மேலும் பொது இடங்களுக்கு நடந்து வரும் பொது மக்கள் முக கவசம் அணியாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 100 ரூபாய் அபராதமும் வாகனங்களில் வருபவர்கள் முககவசம் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக ஆணையர் தெரிவித்தார்.

13:47 (IST)22 May 2020
இந்தியாவில் கொரோனாவால் 1.18 லட்சம் பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து18 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 48 ஆயிரத்து 534 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 3 ஆயிரத்து 583 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 41 ஆயிரத்து 642 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 148 பேர் உயிரிழந்துள்ளனர்.

13:43 (IST)22 May 2020
105 பேருக்கு புதிதாக கொரோனா

கர்நாடகாவில் மதியம் 12 மணி நிலவரப்படி 105 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

மொத்த பாதிப்பு 1,710
மொத்த பலி 41
குணமடைந்தவர்கள் 588
சிகிச்சை பெற்றுவருபவர்கள் - 1,080

13:41 (IST)22 May 2020
30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்

தேர்தலை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

13:40 (IST)22 May 2020
2 பேர் உயிரிழப்பு

கிணறு தூர்வாரும் போது விபத்து - 2 பேர் உயிரிழப்பு’

செங்கல்பட்டு: களத்தூர் கிராமத்தில் விவசாய கிணற்றை தூர்வாரும்போது மண் சரிந்து விபத்து - இருவர் உயிரிழப்பு

13:40 (IST)22 May 2020
ரூ.1,000 கோடி நிதி

‘மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி நிதி’

Amphan புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மத்திய, மாநில அரசுகள் துணை நிற்கும்

- புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் பிரதமர் மோடி பேட்டி

12:59 (IST)22 May 2020
சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைப்பு

சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைப்பு. தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 774 இருந்து 655 ஆக குறைந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 164 ஆக இருந்த தெருக்களின் எண்ணிக்கை 135 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

12:41 (IST)22 May 2020
தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோ, ரிக்‌ஷாக்கள் இயங்க அனுமதி

சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி பயணிக்கும் வகையில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்களை இயக்கலாம். 

11:53 (IST)22 May 2020
வடமாநிலங்களில் இருந்து வந்த 68 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்கு வங்கம் - 6, ஆந்திரா - 2, கர்நாடகா, ஒடிசா, தெலங்கானா, உ.பியில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

11:46 (IST)22 May 2020
தமிழகத்திற்கு விமான சேவை வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம்.  ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கலாம் என பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக சென்னை மற்றும் கோவையிலிருந்து உள்நாட்டு விமான சேவை துவங்குவதாக இருந்தது. 

11:19 (IST)22 May 2020
முகக் கவசம் அணியாதவர்களுக்கு 500 அபராதம்

சென்னையில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறை முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்;காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு வருகிறார்

10:47 (IST)22 May 2020
சக்திகாந்த தாஸ் செய்தியாளர் சந்திப்பு தொடர்ச்சி

வங்கிக்கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் கூடுதல் கால அவகாசம். வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு' ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35% ஆக குறைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவிடம் 487 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது. ரிசர்வ் வங்கி முன்னணியில் உள்ளதாகக் குறிப்பிட்ட சக்தி காந்ததாஸ், கோவிட் -19 தொடர்பான சவால்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார். "ரிசர்வ் வங்கி விழிப்புடன் இருப்பதோடு, அனைத்து கருவிகளையும் - மற்றும் புதியவற்றை பயன்படுத்துகிறது - நிதி அமைப்பு சீராக இயங்குவதற்கும், அனைவருக்கும் அணுகலை உறுதி செய்வதற்கும், நிதி ஸ்திரத்தன்மையைக் காப்பதற்கும் ரிசர்வ் வங்கி தீவிரமாக செயல்படுகிறது" என்று கூறி தனது பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்தார். 

10:36 (IST)22 May 2020
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர் சந்திப்பு

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ். அப்போது, ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும். ரெப்போ வட்டி விகிதம் 4%-மாக குறைக்கப்படும். இந்தியாவில் பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 17 சதவீதம் குறைந்துள்ளதாகவும், உற்பத்தி நடவடிக்கைகள் 21 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். முக்கிய தொழில்களின் வெளியீடு 6.5 சதவீதம் சுருங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். 

10:09 (IST)22 May 2020
வங்கி ஊழியருக்கு கொரோனா

புதுக்கோட்டை கீழராஜவீதி மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரிந்து வந்த நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், வங்கிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

09:21 (IST)22 May 2020
இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,12,359-லிருந்து 1,18,447ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45,300-லிருந்து 48,534 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,435-லிருந்து 3,583 ஆகவும் அதிகரித்துள்ளது. 

09:10 (IST)22 May 2020
அமெரிக்காவில் கொரோனா

அமெரிக்காவில் 16.20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு. அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 16,20,767 ஆகவும்,  கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96,314 ஆகவும் அதிகரித்துள்ளது. 

08:58 (IST)22 May 2020
உலகளவில் கொரோனா

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,89,488 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,78,561 ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,34,092 ஆகவும் உயர்ந்துள்ளது. 

Corona latest news updates : தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Title:Coronavirus live updates train flight service india lockdown covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X