Advertisment

IOC இதைவிட வேறு என்ன செய்யமுடியும். உஜ்வாலா திட்ட பயனாளிகள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்

இலவச Ujjwala மறுநிரப்பல் திட்டத்தின் கீழ் எரிவாயு உருளையை பெற வழக்கமான வாடிக்கையாளர்கள் கூடுதல் ஆவணங்கள் அல்லது பிரதிகள் கொடுக்க தேவையில்லை, என அந்த அறிக்கை கூறுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IOC இதைவிட வேறு என்ன செய்யமுடியும். உஜ்வாலா திட்ட பயனாளிகள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்

உஜ்வாலா வாடிக்கையாளர்கள் மூன்று இலவச சமையல் எரிவாயு (LPG) உருளை பெறும் நடைமுறையை ஐஓசி எளிதாக்கியுள்ளது. கோவிட் -19 காரணமாக நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதற்கான நடைமுறை எளிமைபடுத்தப்பட்டுள்ளன.

Advertisment

Pradhan Mantri Garib Kalyan Yojana (PMGKY) திட்டத்தின் கீழ் ஏப்ரல் முதல் ஜூன் வரை அனைத்து தகுதியுள்ள பயனாளிகளுக்கும் 14.2 கிலோ எடையுள்ள 3 சமையல் (LPG) எரிவாயு உருளை இலவசமாக வழங்கப்படும் என கடந்த வாரம் அரசு அறிவித்தது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

எளிமையாக்கப்பட்ட நடைமுறையின் கீழ் அனைத்து PMUY வாடிக்கையாளர்களுக்கும் தங்கள் வங்கி கணக்கில் சமையல் எரிவாயு உருளை மறு நிரப்பலுக்கான முழு சில்லரை விற்பனை விலை (retail selling price RSP) வரவு வைக்கப்படும். வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்பட்டதை உறுதிபடுத்தும் குறுஞ்செய்தியும் அனுப்பிவைக்கப்படும்.

மறு நிரப்பல் எரிவாயு உருளை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு மட்டுமே வழங்கப்படும், இதற்காக யாரும் வினியோகஸ்தரிடம் செல்ல வேண்டியதில்லை. எரிவாயு உருளை கிடைத்த உடன் வாடிக்கையாளர் அவரது வங்கி கணக்கில் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ள உருளையின் முழு சில்லரை விற்பனை விலையை செலுத்த வேண்டும். மறு நிரப்பலுக்கான ஒப்புதல் cash memo விலேயே சேர்க்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் உருளையை IVRS/SMS மூலம் பதிவு செய்யலாம். மறு நிரப்பல் எரிவாயு உருளையை எந்த கைபேசி எண்ணிலிருந்தும் IVRS மூலமாகவும் அல்லது Whatsapp/Paytm/Online மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இலவச Ujjwala மறுநிரப்பல் திட்டத்தின் கீழ் எரிவாயு உருளையை பெற வழக்கமான வாடிக்கையாளர்கள் கூடுதல் ஆவணங்கள் அல்லது பிரதிகள் கொடுக்க தேவையில்லை, என அந்த அறிக்கை கூறுகிறது.

வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கை மாற்றியிருந்தால் அவர்கள் தங்களுடைய விநியோகஸ்தரை தொடர்பு கொள்ள வேண்டும். ஆவணங்களின் நகல்கள் தேவை ஏற்பட்டால், விநியோகஸ்தர் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் நகல்கள் எடுக்க உதவி செய்வார்கள். கோவிட் கட்டுப்பாடுகள் நடமுறையில் இருப்பதால், வாடிக்கையாளர்கள் விநியோகஸ்தரை நேரடியாக சென்று பார்ப்பதை முடிந்தவரை தவிர்த்து தொலைபேசி மூலமாக தொடர்புக் கொள்ள வேண்டும். ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் விநியோகஸ்தரை நேரடியாக சென்று பார்க்க நேரிட்டால் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், என கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Ioc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment