Advertisment

Coronavirus Updates : இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு; 36 பேர் பலி - சுகாதாரத் துறை

Coronavirus Updates : கொரோன வைரஸ் தொடர்பான முக்கிய செய்திகளை  உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்  

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2 women tests corona positive, returned from varanasi

2 women tests corona positive, returned from varanasi

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 16,000-த்தை தாண்டிய நிலையில், கட்டுப்பாடற்ற மண்டலங்களில், இன்று (ஏப்ரல். 20) முதல் சில குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. இது குறித்த தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.

Advertisment

இன்று 20 முதல் ஊரடங்கு தளர்வு - எந்தெந்த துறைகள் இயங்க அனுமதி? முழு விவரம் இங்கே

எவ்வாறாயினும், பஞ்சாப், டெல்லி, தெலுங்கானா ஆகியவை இந்த கூடுதல் தளர்வை முற்றிலுமாக நிராகரித்துள்ளன. முழுமையான பொது முடக்கம்   மே 3 ஆம் தேதி  வரை நீட்டிக்கப்படும் என்று டெல்லி,பஞ்சாப் அரசாங்கங்கள் கூறிய நிலையில்,  கே.சந்திரசேகர் ராவ் தலைமயிலான தெலுங்கான அரசு பொது முடக்க கட்டுப்பாட்டை மே 7ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

இன்று முதல் நாட்டின் சில தொழிற்சாலைகள் இயக்கப்படும் நிலையில், ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்திற்குள் இடம்பெயர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. ஆனால், மாநிலங்களுக்கு இடையிலான நகர்வுக்கு தடைவிதித்துள்ளது.  நேற்று மட்டும், புதிதாக 552 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.

உலகளவில், 1.65 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிர் இழந்துள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமான  மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதற்கிடையில், பிரெஞ்சு அதிபர்  இம்மானுவேல் மக்ரோன், பொது முடக்கம் நீக்கப்பட்ட பின்பும், " கொரோனா வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்" என்று நாட்டு மக்களுக்கு எச்சரித்தார்.

மேலும், இதுபோன்ற முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்

Live Blog

Coronavirus Updates : கொரோன வைரஸ் தொடர்பான முக்கிய செய்திகளை  உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:21 (IST)20 Apr 2020

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு; 36 பேர் பலி - மத்திய சுகாதாரத் துறை

    மத்திய சுகாதாரத் துறை: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு; 36 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

    22:11 (IST)20 Apr 2020

    மத்திய, மாநில அரசுகளிடையே எந்த மோதலும் இல்லை - கேரளா முதல்வர் பினராயி விஜயன்

    மத்திய அரசின் வழிமுறைகளை கேரள அரசு பின்பற்றுகிறது. மத்திய, மாநில அரசுகளிடையே எந்த மோதலும் இல்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    22:03 (IST)20 Apr 2020

    புதுச்சேரியில் பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்பி பணியிடை நீக்கம்

    புதுச்சேரியில் போலீஸ் எஸ்பி சுபாஷ் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அம்மாநில அரசு எஸ்பி சுபாஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

    21:59 (IST)20 Apr 2020

    ஊரடங்கை மீறி விதிகளை தளர்த்திய கேரளா - மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்

    கேரளாவில் ஊரடங்கு விதிகளை மீறி பல்வேறு தளர்வுகளை அரசு அமல்படுத்தியுள்ளதால் அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    21:47 (IST)20 Apr 2020

    கோவை மாவட்டம் அன்னூரில் 40 வயதான பெண் காவலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    மேட்டுப்பாளையம் அவினாசி சாலை சோதனை சாவடியில் பணியாற்றிய பெண் காவலருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    20:25 (IST)20 Apr 2020

    சென்னையில் மருத்துவமனை அருகே 2 கி.மீ சுற்றளவில் உணவு வழங்க தடை - மாநகராட்சி அறிவிப்பு

    சென்னையில் மருத்துவமனைகள் அருகே 2 கி.மீ சுற்றளவில் உணவு வழங்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் உணவுப்பொருட்கள் முறையான பரிசோதனைக்கு பிறகே சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    19:26 (IST)20 Apr 2020

    மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்பு

    கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்தபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியது ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணைக்கு ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

    18:34 (IST)20 Apr 2020

    ரேபிட் டெஸ்ட் கிட் விஷயத்தில் ஸ்டாலின் அரசியல் செய்ய வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

    ரேபிட் டெஸ்ட் கிட் விஷயத்தில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார். தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் துரிதமாக வெளிப்படையாக செயல்படுகிறது.ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை இந்திய அரசு வாங்கிய அதே சீனாவில் அதே நிறுவனங்களில் வாங்கியிருக்கிறோம். தமிழக அரசு ரேபிட் டெஸ்ட் கிட் கருவி வாங்குவதில் விலையை நிர்ணையிக்கவில்லை. விலை குறைவாக வாங்கியதாக சொல்லப்படும் சட்டீஸ்கரில் இன்னும் கிட் வந்து சேரவில்லை. இந்த விஷயத்தில் ஸ்டாலின் தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம். கிட் விஷயத்தில் ஸ்டாலின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறினார்.

    18:29 (IST)20 Apr 2020

    கொரோனாவால் இறப்பவர்களின் உடல் உரிய மரியாதையுடன் அடக்க செய்யப்படும் - விஜயபாஸ்கர்

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் காவல்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளனர். கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவார்கள். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

    18:21 (IST)20 Apr 2020

    தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரொனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: தமிழக அரசு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கொரோன வைரஸ் தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்படுகிறது. நேற்று முதல் 6,130 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 41,710 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 43 பெருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 457 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதற்குப் பிறகு 14 நாட்கள் வீட்டில் குவாரண்டைனில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

    17:51 (IST)20 Apr 2020

    மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு

    மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட இவர்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    17:30 (IST)20 Apr 2020

    சென்னை அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணியாளர் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தூய்மைப்பணியாளர் வேலை செய்து வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 வயது குழந்தை உள்பட அவரது குடும்பத்தில் உள்ள 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 5 பேருக்கும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    17:27 (IST)20 Apr 2020

    ஊடகவியலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஊடகவியலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளது. மேலும், ஊடகவியலாளர்கள் யாருக்கெல்லாம் பரிசோதனை தேவையோ அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

    16:50 (IST)20 Apr 2020

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார அமைச்சகம்

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    16:22 (IST)20 Apr 2020

    அதிமுக தலைமை அறிவிப்பு

    அஇஅதிமுக செய்தித் தொடர்பாளராக வா.புகழேந்தி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான திரு. ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமியும் இதனை கூட்டாக அறிவித்தனர். 

    16:07 (IST)20 Apr 2020

    விஜயகாந்த் அறிக்கை

    கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பொது மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதுவும் சென்னையில் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது அது பெரும் பிரச்னையானது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

    publive-image

    15:17 (IST)20 Apr 2020

    ஊரடங்கு தளர்த்தப்படாது - தமிழக அரசு

    மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு தளர்த்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும் எனவும் நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    14:57 (IST)20 Apr 2020

    இறந்தவர்களின் உடல்களில் இருந்து கொரோனா பரவாது

    "கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம், உடல்களை தகனம் அல்லது அடக்கம் செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இறந்தவர்களின் உடலிலிருந்து நோய் பராவது" என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. 

    14:42 (IST)20 Apr 2020

    ஆலோசனை நிறைவு

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது.  மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதலை செயல்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெற்றது

    13:20 (IST)20 Apr 2020

    ஈரானில் சிக்கி தவிக்கும் 650 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

    ஈரானில் சிக்கி தவிக்கும் 650 தமிழக மீனவர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்து அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு மீனவர்களை உடனடியாக மீட்குமாறு தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி,  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் மூலம்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

       

    13:08 (IST)20 Apr 2020

    தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் இன்று ஐஇ தமிழ் பேஸ்புக் நேரலையில் இணைகிறார்

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக  மத்திய,மாநில அரசுகள் எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் இன்று ஐஇ தமிழ் பேஸ்புக் நேரலையில் இணைகிறார்.   

    12:35 (IST)20 Apr 2020

    'ஒன்றிணைவோம் வா' முயற்சி - உதவிகளை ஒன்றிணைக்கும் என மு.க ஸ்டாலின் கருத்து

    திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் தனித்தனியாக செய்யும் உதவிகளை  ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்த ஒன்றிணைவோம் வா முயற்சி அமையும் என ஸ்டாலின் கருத்து. 

       

    12:23 (IST)20 Apr 2020

    கேரளாவின் ஊரடங்கு தளர்வு: மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது.

    கேரளாவின் ஊரடங்கு தளர்வு மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யும் என மத்திய உள்துறை அமைச்சகம் கேரள அரசுக்கு கடிதம். 

    11:48 (IST)20 Apr 2020

    அறுவை சிகிச்சை நிபுணர் உடலை அடக்கம் செய்யவிடமால் தடுத்த 20 பேர் கைது

    இரண்டு வாரங்களுக்கு முன்பு  கொரோனா வைரஸ் சோதனை உறுதி செய்யப்பட்ட 55 வயதான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று  மரணமடைந்தார். இன்று, அண்ணாநகரில் அவரின் உடலை அடக்கம் செய்ய சென்ற போது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

    11:31 (IST)20 Apr 2020

    தமிழக 'ரெட் ஸோன்' மாவட்ட ஆட்சியர்களுக்கு பீலா ராஜேஷ் முக்கிய உத்தரவு (2/2)

    தமிழகத்தில் கொரோனா வைரஸ்  நோய்த் தொற்றைக் கையாள  ஒவ்வொரு மாவட்டமும் பின்வருமாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன:

      • அதிக தொற்று பரவல் கொண்ட ஹாட்ஸ்பாட்
      • க்ளஸ்டர் அடிப்படையிலான  ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள், 
      • ஹாட்ஸ்பாட் அல்லாத மாவட்டங்கள்

    அதிக தொற்று பரவல் கொண்ட ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள், நோய்க் கட்டுப்படுத்தும் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.    க்ளஸ்டர் அடிப்படையிலான  ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் ஒவ்வொரு வாரமும், பாதிப்பு எண்ணிக்கை குறைந்த காலத்தில் இரட்டிப்பாதல் அடிப்படையில் அடியாளம் காண வேண்டும். அந்த மாவட்டங்களில் தொற்று பரவல் தடுப்பு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.  ஹாட்ஸ்பாட் அல்லாத மாவட்டங்களில் நடக்கும் செயல்பாடுகள் நோய் தொற்று பரவாத வண்ணம் இருத்தல் வேண்டும்.  

    11:21 (IST)20 Apr 2020

    தமிழக 'ரெட் ஸோன்' மாவட்ட ஆட்சியர்களுக்கு பீலா ராஜேஷ் முக்கிய உத்தரவு

    publive-image

    publive-image

    10:45 (IST)20 Apr 2020

    மேலும் ஒரு மருத்துவர் பலியாகி இருப்பது வேதனையளிக்கிறது - மு.க ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒரு மருத்துவர் பலியாகி இருப்பது வேதனையளிக்கிறது. மக்கள் நலன் காக்கப் பணியாற்றும் காவல்துறையினர், ஊடகத்தினருக்கும் கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிமுக அரசு அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசர நிலையையே இது உணர்த்துகிறது " என்று பதிவு செய்துள்ளார்.  

    10:39 (IST)20 Apr 2020

    ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 65 வயது மேற்பட்டவர்களுக்கு வேலை உண்டா?

    உள்துறை  அமைச்சகம் கடந்த 15ம் தேதி வெளியிட்ட  தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்கள், ஏப்ரல் 20 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டப் பணிகளை பாசனம் மற்றும் தண்ணீர் சேமிப்புப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பணிகள் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.   

    இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை ஊரக வளர்ச்சி அமைச்சகம் நடத்திய காணொலி கூடத்தில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோயுற்றவர்கள் கிராம வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடத் தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.     

    10:21 (IST)20 Apr 2020

    கொரோனா வைரஸ் தோற்றத்தை ஒத்திருக்கும்  உணவுப் பொருட்கள் தயாரிப்பு

    இந்தியாவிலும், பிற நாடுகளிலும் உள்ள உணவுப் பிரியர்கள், கொரோனா வைரஸ் தோற்றத்தை ஒத்திருக்கும்  உணவுப் பொருட்களை தயாரித்து வருகிறார்கள். இவற்றை நாம் சாப்பிடுவோமா?

    09:51 (IST)20 Apr 2020

    மிகவும் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளுக்கான கொரோனா தொற்று வளர்ச்சி விளக்கப்படம்

    09:49 (IST)20 Apr 2020

    அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை 40,000-ஐத் தாண்டியது.

    09:46 (IST)20 Apr 2020

    மே மாதம் 3ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கும், கொரோனா வைரசின் எதிர்காலம் என்ன?

    HCoV-OC43,HCoV-HKU1 போன்ற வைரஸ் தொற்றுக்கு எதிராக நாம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்திகள் மிகவும் குறுகிய காலம் மட்டும் செயல்பட்டன ( கிட்டதட்ட, 40 வாரங்கள்). நாம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தி குறுகிய காலமாக இருந்தால், வருடாந்திர கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மறுபுறம், நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலத்திற்கு செயல்பட்டால் ( குறைந்தது , இரண்டு ஆண்டுகள்) இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை நோய் தொற்றுக்கு வழிவகுக்கும்.

    சமிபத்தில் ‘சயின்ஸ்’ எனும் நாளிதழில், மிகக் கடுமையான கொரோன வைரஸ் பெருந்தோற்று அலைக்குப் பின், என்னவெல்லாம் நடக்க கூடலாம்  என்பது குறித்த ஆய்வக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது

    மேலும், விவரங்களுக்கு: இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்  

    09:42 (IST)20 Apr 2020

    குறிப்பிட்ட பொருளாதார நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்- சிவராஜ் சிங் சவுகான்

    கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதித்த இந்தூர்,போபால்,உஜ்ஜைன் போன்ற மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களில் இன்று முதல் வரையறுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். குட்கா, மதுபானம் விற்பனைகள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் என்றும் அறிவித்தார்.

    09:29 (IST)20 Apr 2020

    தமிழகத்தில் 22 ஹாட்ஸ்போட் மாவட்டங்கள் : இங்கு ஊரடங்கில் தளர்வு இருக்காது

    கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் 15 பேருக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில், இந்தியா முழுவதும் 170 ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக மத்திய அரசு பட்டியலிட்டது . அதில் தமிழகத்தில் 22 மாவட்டங்கள் இடம் பெற்றிருந்தன. எனவே, இந்த 22 மாவட்டங்களில் மே மாதம் மூன்றாம் தேதி வரை தளர்ர்வுகள் இருக்காது என்றும் கூறப்படுகிறது    

    09:20 (IST)20 Apr 2020

    இன்று முதல் கட்டுபாடற்ற மண்டலங்களில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்

    09:18 (IST)20 Apr 2020

    தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வு இருக்குமா ? முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்கள் அடிப்படையில், தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வு இருக்குமா? என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    09:16 (IST)20 Apr 2020

    இன்று முதல் ஊரடங்கு தளர்வு - எந்தெந்த துறைகள் இயங்க அனுமதி? முழு விவரம் இங்கே

    நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக, மக்கள் எதிர்கொள்ளும் “கஷ்டத்தைத் தணிக்க”, தற்போது நடைமுறையில் உள்ள பல கட்டுப்பாடு தளர்வுகள் iஇன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. மாநிலங்களால் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர்த்து, நாடு முழுவதும் உள்ள மக்கள் சமூக விலகல் மற்றும் முகமூடிகளை கட்டாயமாகப் பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குக் கட்டுப்படும்போது சில தளர்வுகளை அனுபவிக்க முடியும்.

    மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

    09:06 (IST)20 Apr 2020

    ஊரடங்கில் தளர்வு இல்லை- டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப் அறிவிப்பு

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 16,000-த்தை தாண்டிய நிலையில், கட்டுப்பாடற்ற மண்டலங்களில், இன்று (ஏப்ரல். 20) முதல் சில குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. இது குறித்த தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.

    எவ்வாறாயினும், பஞ்சாப், டெல்லி, தெலுங்கானா ஆகியவை இந்த கூடுதல் தளர்வை முற்றிலுமாக நிராகரித்துள்ளன. முழுமையான பொது முடக்கம் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று டெல்லி,பஞ்சாப் அரசாங்கங்கள் கூறிய நிலையில், கே.சந்திரசேகர் ராவ் தலைமயிலான தெலுங்கான அரசு பொது முடக்க கட்டுப்பாட்டை மே 7ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

    Coronavirus Updates : இ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருள்கள் விநியோகம் செய்வதற்கு தற்போதுள்ள முடக்கநிலை அமல் காலத்தில் தடை நீடிக்கும் என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

    கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் தற்போதைய பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஓய்வூதியத்தைக் குறைக்கும் உத்தேசம் எதுவும் இல்லை என்றும், அதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

    தெரிவித்துள்ளது. மாறாக, ஓய்வூதியர்களின் நலன்களைக் காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Coronavirus Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment