Advertisment

டாஸ்மாக் விற்பனை ஒரே நாளில் ரூ 170 கோடி: மதுக் கடைகளில் நீண்ட வரிசை

தமிழகத்தில் சென்னை நீங்கலாக, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று ( மே7) முதல் திறக்கப்பட்டன. முதல்நாளிலேயே, ரூ.170 கோடி அளவிற்கு மதுபிரியர்கள், மதுபானங்களை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus latest news updates

Covid-19 Cases Update: தமிழகத்தில் சென்னை நீங்கலாக, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று ( மே7) முதல் திறக்கப்பட்டன. முதல்நாளிலேயே, ரூ.170 கோடி அளவிற்கு மதுபிரியர்கள், மதுபானங்களை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

 

இதுவரையில் 49,391 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. நேற்றில் இருந்து புதிதாக 2958 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறிந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் பாதித்தவர்களில் 14,183 பேர் இதுவரை குணமாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1457 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்த நோய் பாதித்தவர்களில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 28.72 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

சக குடிமக்கள் அனைவருக்கும், உலகம் முழுவதிலும் உள்ள புத்த பகவானைப் பின்பற்றுபவர்களுக்கும் குடியரசுத் தலைவர் புத்த பூர்ணிமா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். " கொரோனா என்ற தொற்றின் வடிவத்தில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், உதவிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை வழங்க நாம் முன்வருவதன் மூலம் புத்த பகவான் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டும். பக்தி மயமான இந்தப்பண்டிகை புத்த பகவானின் போதனைகளைப் பின்பற்ற நமக்கு ஊக்கமளிப்பதுடன், நம்மிடையே நல்லிணக்கத்தைப் பேணும் சிந்தனையை வலுப்படுத்தட்டும்" என்று குடியரசுத் தலைவர் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற முக்கிய  செய்திதிகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள்.

Live Blog

Coronavirus Updates: கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.



























Highlights

    20:59 (IST)07 May 2020

    டாஸ்மாக்கில் ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு விற்பனை

    சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் மது விற்பனை ரூ.170 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

    20:23 (IST)07 May 2020

    சுனாமியால் இறந்தவர்களைவிட அதிக உயிர்களை அரசின் சாராய ஆறு கொண்டு செல்லும் - கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழர்களுக்கு ஒரு கடிதம் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அரசு செய்யும் தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால், சுனாமி கொண்டு சென்ற உயிர்களைவிட அதிகமான உயிர்களை இந்த நோய்க்காலத்தில் அரசு தற்போது திறந்துவிட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும் என்று எச்சரித்துள்ளார்.

    20:16 (IST)07 May 2020

    டாஸ்மாக்கில் மது வாங்க ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி வழக்கு

    டாஸ்மாக் கடைகளில் மது வாங்க ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி டாஸ்மாக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் பலரிடம் ஆதார் இல்லை என்பதால் அதற்கு விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    19:35 (IST)07 May 2020

    திமுகவினர், அவர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடத் தயாரா? - அமைச்சர் செல்லூர் ராஜு

    மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர், அவர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடத் தயாராக இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்.

    19:22 (IST)07 May 2020

    ஆலைகளில் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது - மாசு கட்டுப்பாட்டு வாரியம்

    ஆலைகளைத் திறக்கும்போது தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது. சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    19:20 (IST)07 May 2020

    கொரோனா தடுப்பில் கைதிகளை பயன்படுத்த கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்புக்கும், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளை பயன்படுத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    18:11 (IST)07 May 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கொரோனா; மொத்த எண்ணிக்கை 5000ஐ தாண்டியது

    தமிழகத்தில் மேலும் இன்று புதிதாக 580 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் ம்த்த எண்ணிக்கை 5409 ஆக உயர்ந்துள்ளது.

    18:06 (IST)07 May 2020

    ஓய்வு பெறும் வயது அதிகரிப்புக்கு எதிர்ப்பு; தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்ததற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

    17:58 (IST)07 May 2020

    சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    நெல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    * பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவர் இன்று உயிரிழந்தார்

    17:48 (IST)07 May 2020

    விற்பனை நேரம் முடிந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடல்

    கொரோனா அச்சுறுத்தல் பொது முடக்கத்தால், 44 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் விற்பனை நேரம் முடிந்ததால் மாலை 5 மணி அளவில் மூடப்பட்டன.

    17:40 (IST)07 May 2020

    பரிந்துரையை ஏற்க ஐசிஎம்ஆர் மறுப்பு

    கங்கை நீரை கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்த ஜல் சக்தி அமைச்சகம் வழங்கிய பரிந்துரையை ஏற்க ஐசிஎம்ஆர் மறுப்பு தெரிவித்துள்ளது. 

    17:40 (IST)07 May 2020

    15 மண்டலங்களில் 419 தெருக்கள்...

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 419 தெருக்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    17:38 (IST)07 May 2020

    நாடாளுமன்றக் குழு கூட்டங்களை நடத்த முடியுமா?

    காணொலி காட்சி மூலம் நாடாளுமன்றக் குழு கூட்டங்களை நடத்த முடியுமா?

    * நாடாளுமன்ற செயலாளர் ஆய்வு செய்ய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு

    17:38 (IST)07 May 2020

    கடைகளை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன?

    ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன ? - தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி

    * தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மது நமக்கு தேவைதானா? - விஜயகாந்த்

    17:38 (IST)07 May 2020

    விரைவில் முடிவு

    புதுச்சேரி அரசின் வருமானத்தை பெருக்கும் விதமாக, மது கடைகளை திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் நாராயணசாமி

    16:03 (IST)07 May 2020

    கிருஷ்ணகிரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த மாவட்டத்தில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

    16:00 (IST)07 May 2020

    மருத்துவத்திற்காக வெளியூர் செல்ல ஒரு மணி நேரத்தில் பாஸ் வழங்க கோரி வழக்கு

    மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல ஒரு மணி நேரத்தில் பாஸ்கள் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவம் மற்றும் மரணங்களுக்கு 24 மணி நேரமும் அனுமதிச் சீட்டுகள் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    15:58 (IST)07 May 2020

    விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம்; ஆந்திர அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

    விசாகப்பட்டினத்தில் விஷவாயு பாதிப்பு சம்பவம் தொடர்பாக ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    விஷவாயு சம்பவம் தொடர்பாக மத்திய அரசும் பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    15:05 (IST)07 May 2020

    உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி நிவாரணம் : முதல்வர் ஜெகன் அறிவிப்பு

    விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு்ளளது.

    14:44 (IST)07 May 2020

    விசாகப்பட்டினம் ரசாயன ஆலை விபத்து - முதல்வர் பழனிசாமி இரங்கல்

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் நேரிட்ட வாயுக்கசிவில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல்; சிகிச்சை பெறுவோர் பூரண குணமடைய பிரார்த்திப்பதாக அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    14:14 (IST)07 May 2020

    பெண் காவலர் முதல்வர் வீட்டில் பணியாற்றவில்லை

    கொரோனா தொற்று கொண்ட பெண் காவலர் முதல்வர் பழனிசாமி வீட்டில் பணியாற்றவில்லை. முதல்வர்  வீட்டில் பணியாற்றிய காவலருக்கு கொரோனா என்ற செய்தி உண்மையல்ல என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    14:08 (IST)07 May 2020

    இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

    வெப்பச்சலனம், மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, கோவை, நீலகிரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    13:33 (IST)07 May 2020

    சென்னையில் காவல் உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று

    சென்னையில் காவல் உதவி ஆணையர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    13:27 (IST)07 May 2020

    டாஸ்மாக் கடைகளை திறப்பதன் அவசியம் என்ன? - முதல்வருக்கு தேமுதிக கேள்வி

    கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், மக்களுக்கு வருமானம் இல்லாத இந்த நேரத்தில், டாஸ்மாக் கடைகளை திறப்பதன் அவசியம் என்ன? என்று முதல்வர் பழனிசாமிக்கு பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

    13:13 (IST)07 May 2020

    மதுரையில் டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்

    12:54 (IST)07 May 2020

    புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கேரள காவல்துறை லத்தி சார்ஜ்

    தங்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று எர்ணாகுளம் மாவட்டம் கூத்தட்டுக்குளம் பகுதியில் போராட்டம் நடத்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கேரள காவல்துறை  லேசான லத்தி சார்ஜ் செய்தது. 

    12:20 (IST)07 May 2020

    ஏப்ரல் மாதத்தில் 122 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்தனர்

    ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 122 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்தனர். அவர்களில் சுமார் 75% சிறு வணிகர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் என்று Centre for Monitoring Indian Economy நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில், அதிகம்  பாதிப்படைந்த மாநிலமாக தமழ்நாடு உள்ளது.   

    12:08 (IST)07 May 2020

    தமிழகத்தில் கொரோனா இறப்பு விதிதம் மிகக் குறைவு- ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

    கொரோனாவால் இறப்பவர்களின் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகக்குறைவாக உள்ளது என்று  கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த தொற்று பரவல்நடவடிக்கையில் மக்களின் ஒத்துழைப்பு முக்கியமானது என்று தெரிவித்த அவர், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களை பார்க்க மருத்துவமனைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.    

    12:07 (IST)07 May 2020

    நீட் தேர்விற்கு இன்று முதல் ஆன்லைன்  பயிற்சி

    நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் நீட் தேர்விற்கு இன்று முதல் ஆன்லைன்  பயிற்சி அளிக்கப்படுவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    11:26 (IST)07 May 2020

    ஆரோக்கிய சேது ஐவிஆர்எஸ் சேவைகள் அமல்படுத்தப்படுகின்றன.

    சாதாரண கைபேசிகள், சாதாரண தொலைபேசிகள் வைத்திருப்பவர்களையும் ஆரோக்கிய சேது திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்காக ‘’ஆரோக்கிய சேது ஊடாடு குரல் பதில் முறை -ஐவிஆர்எஸ்’’ செயல்படுத்தப்படுகிறது. இந்தச் சேவை நாடு முழுவதும் கிடைக்கிறது. கட்டணம் இல்லாத இந்தச் சேவையில், மக்கள் 1921 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவர்களை தொலைபேசியில் அழைத்து, அவர்களது ஆரோக்கியம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்படும்.

    கேட்கப்படும் கேள்விகள் ஆரோக்கிய சேது செயலியுடன் சேரக்கப்படும். மக்கள் கூறும் பதில்களின் அடிப்படையில், அவர்களது ஆரோக்கிய நிலைமை குறித்து குறுந்தகவல் அனுப்பப்படும். மேலும் அவர்களது நடமாட்டத்தைப் பொறுத்து, அவர்களது ஆரோக்கியம் பற்றி எச்சரிக்கை தகவல்கள் வரும்.

    11:11 (IST)07 May 2020

    தொற்று மற்றும் தடுப்பு கட்டுப்பாடு அவசர சட்டத்திற்குஉத்திர பிரேதேச அமைச்சரவை ஒப்புதல்:

    2020, தொற்று மற்றும் தடுப்பு கட்டுப்பாடு அவசர சட்டத்திற்குஉத்திர பிரேதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றை வேண்டுமென்றே (COVID-19) பரப்பி மரணம் ஏற்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை தண்டனைகள் கடுமையாக்கப் பட்டுள்ளது.   

    10:58 (IST)07 May 2020

    இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் - மே- 7 காலை 8 மணி வரையிலான நிலவரம்

    10:51 (IST)07 May 2020

    தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59 ஆக உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் பணிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு. ஓய்வுபெறும் வயது 58-ல இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    10:47 (IST)07 May 2020

    இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள்

    10:39 (IST)07 May 2020

    கொரோனா வைரஸ் : தமிழகத்தில் பாதிப்பு சமீபகாலமாக அதிகரித்தது ஏன்?

    கோயம்பேடு சந்தை தான் தொற்று அதிகமாக பரவியதற்கான காரணம் என தெரிந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. மே 5ம் தேதி வரை, அங்கு 1,74,828 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தை விட 1.5 மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவிலேயே, 1,82,884 பேருக்கே சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும், விவரங்களுக்கு கொரோனா வைரஸ் : தமிழகத்தில் பாதிப்பு சமீபகாலமாக அதிகரித்தது ஏன்?

    10:36 (IST)07 May 2020

    ஊரடங்கு நேரத்திலும் மதுவிற்பனைக்கு ஏன் அனுமதி? : மாநிலங்கள் இதன்மூலம் பயன் அடைகிறதா?.

    மது விற்பனையால் மாநிலங்களுக்கு எவ்வாறு வருவாய் கிடைக்கின்றன?

    இந்தியாவில் குஜராத், பீகார் ( பூரண மதுவிலக்கு அமலில் உள்ளன) மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மது தயாரிப்பு மற்றும் விற்பனைகளுக்கென்று பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், இந்த வரிகள் மட்டுமல்லாது மதிப்பு கூட்டப்பட்ட ( வாட்) வரியும் விதிக்கப்படுகிறது. வெளிநாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்தல், போக்குவரத்து செலவு, நிறுவன பதிவு கட்டணம் என பல்வேறு வழிகளில் தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

    மேலும், விவரங்களுக்கு: ஊரடங்கு நேரத்திலும் மதுவிற்பனைக்கு ஏன் அனுமதி? : மாநிலங்கள் இதன்மூலம் பயன் அடைகிறதா?. 

    10:30 (IST)07 May 2020

    திமுக கூட்டணி கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

    திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்து மே 7-ம் தேதி ஒருநாள் கருப்புச் சின்னம் அணிவோம் என்று மு. க விடுத்த அழைப்பை ஏற்று இன்று கூட்டணி கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

    10:16 (IST)07 May 2020

    ஆழ்வார்பேட்டை இல்லத்தில்  குடும்ப உறுப்பினர்களோடு ஸ்டாலின் எதிர்ப்பு போராட்டம்

    நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தில்  குடும்ப உறுப்பினர்களோடு எதிர்பை பதிவு செய்து வருகிறார்.   

    10:11 (IST)07 May 2020

    50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும்

    ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் என்று  தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ்  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.  

    10:07 (IST)07 May 2020

    கொரோனாவில் இருந்து குணமாகிய காவல்துறை ஆணையருக்கு உற்சாக வரவேற்பு :

    கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பிய சென்னை காவல் துணை ஆணையருக்கு குடியிருப்பு வாசிகள் கைதட்டி உற்சாக வரவேற்பளித்தனர். 

    10:00 (IST)07 May 2020

    உலக நலுனுக்காக இந்தியா செயல்படுகிறது – பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி புத்த பூர்ணிமா விழாவில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். புத்தர் என்பது இந்தியாவின் உணர்தல் மற்றும் தன்னை - உணர்தல் ஆகிய இரண்டின் அடையாளமாகும். இந்த சுய-உணர்தலுடன், மனிதநேயம் மற்றும் உலக நஇந்தியா தொடர்ந்து செயல்படுகிறது என்று கூறினார்.  

    Coronavirus Updates: தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளையும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளையும் பின்பற்றி மதுபானக் கடைகளை திறக்க எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதியை டாஸ்மாக் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஆன்லைனில் பணம் செலுத்துவோருக்கு 2 மதுபாட்டில்கள் வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும். கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Coronavirus Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment