Advertisment

திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா: டிஜிபி அலுவலகத்தில் 2 பேர் பாதிப்பு

Coronavirus Latest LIVE Updates: சென்னையில் ஒரேநாளில் 176 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், திருவல்லிக்கேணியில் மட்டும் 20 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலக ஊழியர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus latest news updates

coronavirus latest news updates

Covid-19 News Update :  சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரேநாளில் 176 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், திருவல்லிக்கேணியில் மட்டும் 20 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலக ஊழியர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

இன்றோடு நிறைவடைவதாக இருந்த ஊரடங்கினை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, தொழிலாளர்கள், புனிதப் பயணம் சென்றவர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக இன்றைய நாளான ``தொழிலாளர் தினத்தில்'' இருந்து ``ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்'' இயக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. சிக்கித் தவிக்கும் மக்களை அனுப்பி வைக்க அல்லது அழைத்து வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் விடுக்கும் கோரிக்கையின் அடிப்படையில், இடையில் வேறு எங்கும் நிற்காமல், புறப்பட்ட இடத்தில் இருந்து சேருமிடத்துக்கு நேரடியாக சென்று சேருவதாக இந்த ரயில் சேவைகள் இருக்கும்.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் தவிர அனைத்து பயணிகள் ரயில் சேவைகளை வரும் 17ம் தேதி வரை ரத்து செய்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து மொத்தம் 8,888 பேர் குணமாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் இது 25.37 சதவீதம் ஆகும். மொத்தம் 35,043 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து புதிதாக 1,993 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Coronavirus Live Updates : கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகள் அனைத்தையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்



























Highlights

    22:32 (IST)02 May 2020

    2 காவலர்களுக்கு கொரொனா; சென்னை டிஜிபி அலுவலகத்தில் உளவுப்பிரிவு கட்டுப்பாட்டு அறை மூடல்

    சென்னை டிஜிபி அலுவலத்தில் உளவுப்பிரிவில் பணி புரியும் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் பணி புரிந்த சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள உளவுப்பிரிவு கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது.

    22:26 (IST)02 May 2020

    லோக் பால் அமைப்பில் உறுப்பினராக இருந்த நீதிபதி கொரோனாவால் மரணம்

    சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் லோக்பால் அமைப்பில் உறுப்பினருமான அஜய் குமார் திரிபாதி கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

    19:43 (IST)02 May 2020

    வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்கள் சொந்த ஊர் திருப்ப இணையதளத்தில் பதிவு செய்யலாம் - தமிழக அரசு

    வெளி மாநிலங்களில் தங்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப தமிழக அரசின் www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் சிவப்பு நிற பட்டனை குளிக் செய்து தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பழுப்பு நிற பட்டனை கிளிக் செய்து தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    19:14 (IST)02 May 2020

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,757 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

    19:10 (IST)02 May 2020

    கர்நாடகாவில் மதுக்கடைகளை திறக்க அனுமதி - கர்நாடகா கலால் அமைச்சர் நாகேஷ் அறிவிப்பு

    கர்நாடகா கலால்துறை அமைச்சர் நாகேஷ்: கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் மே 4 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் விற்பனைக்கு திறக்கப்படும். சிவப்பு மண்டல பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது. மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார்களுக்கு அனுமதியில்லை. 3 அடி சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து மதுவாங்கி செல்லலாம் என்று அறிவித்துள்ளார்.

    19:10 (IST)02 May 2020

    கர்நாடகாவில் மதுக்கடைகளை திறக்க அனுமதி - கர்நாடகா கலால் அமைச்சர் நாகேஷ் அறிவிப்பு

    கர்நாடகா கலால்துறை அமைச்சர் நாகேஷ்: கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் மே 4 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் விற்பனைக்கு திறக்கப்படும். சிவப்பு மண்டல பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது. மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார்களுக்கு அனுமதியில்லை. 3 அடி சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து மதுவாங்கி செல்லலாம் என்று அறிவித்துள்ளார்.

    17:35 (IST)02 May 2020

    சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று

    சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வந்த 2 உளவுத்துறை காவலர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

    புதுப்பேட்டை ஆயுதப்படை பெண் காவலர் ஒருவருக்கும் ஓட்டேரி காவல் நிலைய காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    17:28 (IST)02 May 2020

    செங்கல் சூளைகள், கல்குவாரிக, எம்-சாண்ட் கிரஷர்கள் போக்குவரத்துக்கு அனுமதி - தமிழக அரசு

    செங்கல் சூளைகள், கல்குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் அவற்றிற்கான போக்குவரத்துக்கு அனுமதி - தமிழக அரசு

    ஐடி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 20 பேரைக் கொண்டு செயல்பட அனுமதி - அமைச்சரவை ஒப்புதல்

    மே 4 முதல் மே 17 நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது - தமிழக அரசு

    16:53 (IST)02 May 2020

    மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

    முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வெளியானது. அதன்படி, “அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல்கள் மட்டும் வழங்கலாம். ஊரக, நகர்ப்புற பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை. கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். நகராட்சி, மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்களை தவிர்த்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம். சென்னையில் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    16:53 (IST)02 May 2020

    தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல்

    தமிழகத்தில் ஊரடங்கை வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்க தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட்டுள்ளது. மேலும், சென்னையில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    16:13 (IST)02 May 2020

    கொரோனா தடுப்பு பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்ற அழைப்பு

    கொரோனா தடுப்பு பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.

    15:59 (IST)02 May 2020

    சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனைகளில் நிரம்பியது கொரோனா வார்டுகள்

    சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் இருந்த அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    15:28 (IST)02 May 2020

    நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை விமான சேவைகள் ரத்து - விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம்

    கொரோனா பரவலைத் தடுக்க, பொது முடக்கம் சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமான போக்குவரத்து தொடர்ந்து நடைபெறும் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    14:28 (IST)02 May 2020

    மே 17 வரை தமிழகத்தில் பொது முடக்கம் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

    மே 17 வரை பொது முடக்கம் நீட்டிப்பு செய்த உள்துறை அமைச்சகத்தின்  உத்தரவு  தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இருக்காது என்றும், ஆரஞ்சு பகுதிகளில் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு.  

    2020 மே 4 ஆம் தேதியில் இருந்து மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமல் காலத்தை நீட்டிப்பதாக பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஓர் உத்தரவை நேற்று பிறப்பித்தது

    13:12 (IST)02 May 2020

    சென்னை பல்லாவரத்தில் வடமாநில தொழிலாளர்கள் போரட்டம்- சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை

    சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி, சென்னை பல்லாவரத்தில் வடமாநில தொழிலாளர்கள் போரட்டத்தில் இறங்கினர்.  இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.ஒரே இடத்தில் கூடிய தொழிலளர்கள் போலிசாரின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.    

    சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை

    கொரோனா தொற்று முடக்க நிலை கட்டுப்பாடுகளால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்துக் கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரிகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் மற்றவர்கள் செல்வதற்காக, ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.    

    13:08 (IST)02 May 2020

    உலக நாடுகள் சீனாவிடம் பாடம் கற்க வேண்டும் - உலக சுகாதார அமைப்பு

    கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாண்டதற்காக உலக சுகாதார அமைப்பு  சீனாவைப் பாராட்டியுள்ளது. முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்று பரவலில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் மக்கள் தொடர்பு நிறுவனமாக செயல்படுகிறது  என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.  மேலும், சீனா எவ்வாறு சமூகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது என்பது குறித்து உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.  . 

    12:31 (IST)02 May 2020

    ஆயுதப்படைகளின் செயல் பாராட்டுக்குரியது -அமித் ஷா கருத்து

    கொரோன வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிராக நம் தேசத்தை பாதுகாப்பாக வைத்திருக்க அயராது உழைத்து வரும் கொரோனா வாரியர்ஸுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தலைமை தளபதி மற்றும் ஆயுதப்படைகளின் முடிவை (மருத்துவமனைகள் மீது மலர் தூவுவது) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார் .

    11:36 (IST)02 May 2020

    கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு

    திருவாரூர் மாவட்டத்தை தொடர்ந்து கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் கடைகள் மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்.  

    11:08 (IST)02 May 2020

    தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. மே 3ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க அமைத்த 17 பேர் கொண்ட வல்லுநர் குழு, வல்லுநர்கள் மற்றும் மற்ற அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தங்களது இடைக்கால அறிக்கையை  நேற்று சமர்பித்தனர். இன்று நடக்கும் அமைச்சரவை கூடத்தில் இந்த அறிக்கை வைத்து விவாதம் நடக்கும் என்று எதிர்பாரக்க்ப்படுகிறது.     

    10:58 (IST)02 May 2020

    கேரளாவில் தொற்று இல்லை, அதிக பாதிப்படைந்த மாநிலமாக மகாராஷ்டிரா

    கேரளாவில் நேற்று எந்த கொரோனா தொற்றும் கண்டறியப்படவில்லை. மகாராஷ்டிரா  மாநிலம் நேற்று ஒரு நாளில் மட்டும் 1008  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாநிலம், ஒரே நாளில் 1000 எண்ணிக்கையைத்  தாண்டியது இதுவே முதல் முறையாகும். தமிழகம் கொரோனா தொற்றின் எழுச்சியைக் கண்டுவருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 203 பேர் உறுதி செய்யப்பட்டனர். மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது. 

    10:49 (IST)02 May 2020

    திருவாரூரில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு அமல்

    திருவாரூரில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மருந்தகங்கள், பால் கடைகள் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.   

    10:46 (IST)02 May 2020

    அரியலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    சென்னை  கோயம்பேடு சந்தையில் இருந்து லாரிகளின் மூலம் தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்ற 40 பேரில், 19 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது இன்று கண்டறியப்பட்டுள்ளது.  அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நமங்குணம், சொக்கநாதபுரம், சிறுகளத்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இந்த 19 பேரையும் மருத்துவமனைகளில் சேர்க்கும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம், அரியலூர் மாவட்டம் தற்போது சிவப்பு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.

    10:03 (IST)02 May 2020

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று பதிவு

    கிருஷ்ணகிரி மாவட்டம் தனது முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த  நல்லூர் கிராமத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இதன்மூலம், தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமான கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது.கொரோனா தொற்று ஏற்பட்ட நபரின் நல்லூர் கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.     

    10:00 (IST)02 May 2020

    கொரோனா ஒழிப்புக்கு நம்பிக்கை அளிக்கும் ரெம்டெசிவைர்: ஏன் எச்சரிக்கை தேவை?

    கொரோனா வைரஸ்கள் தங்களது  மரபணுப் பொருளாக ஒற்றைச் சுழல் இழை ஆர்.என்.ஏவைக் கொண்டுள்ளன. பெருந்தொற்றாக விளங்கும் சார்ஸ் -கோவ் 2 (நாவல் கொரோனா வைரஸ் ) செல்களுக்குள் நுழைந்த உடன், ஆர்டிஆர்பி (ஆர்.என்.ஏ-வை நம்பியிருக்கும் ஆர்.என்.ஏ பாலிமெரேஸ்) என்ற நொதி மூலம், வைரஸ் நம் உடம்பில் பெருக்கிக் கொள்கிறது. 

    ஆர்டிஆர்பி- ன் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் ரெம்டெசிவைர்  மருந்து செயல்படுகிறது.

    மேலும், வாசிக்க:  கொரோனா ஒழிப்புக்கு நம்பிக்கை அளிக்கும் ரெம்டெசிவைர்: ஏன் எச்சரிக்கை தேவை?

    09:57 (IST)02 May 2020

    ரெம்டெசிவைர் மருந்துக்கு அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல்

    நேற்று, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாம், கொரோனா தடுப்பு மருந்தாக கிலியட் சயின்ஸ் நிறுவனத்தின் ரெம்டெசிவைர் மருந்தை  அவசரகால பயன்பாட்டின் கீழ் அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம், அமெரிக்க மருத்துவமனைகளில் இந்த ஆன்டிவைரல் மருந்தை  பரவலாகப் பயன்படுத்துவதற்கான வழியை நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

    09:48 (IST)02 May 2020

    கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

    கடந்த 24 மணி நேரத்தில் 2293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 71 பேர் மரணமடைந்துள்ளனர்.இது ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கை என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

    09:46 (IST)02 May 2020

    சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர் ஒருவரின் தாயார் கொரோனாவால் மரணம்:

    சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர் ஒருவரின் தாயார் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்துள்ளார். மறைந்தவரின் வயது 77 எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மறைந்தவரின் குடும்ப உறுப்பினர் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    09:42 (IST)02 May 2020

    முதியோர் இல்லத்தில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று

    முதியோர் இல்லத்தில் மூதாட்டிக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை  போரூர் அடுத்த காரம்பாக்கம், செட்டியார் அகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லத்தில் உள்ள மூதாடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இல்லத்தில்இருந்த 30 முதியவர்களையும் தனிமைப்படுத்துதம் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். 

    Coronavirus Live Updates : செம்மையான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் நோய்த் தொற்று பரவல் நடவடிக்கையை உறுதி செய்வதற்காக நாட்டில் அனைத்து மாவட்டங்களும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்கள் என வகைபடுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்த வரை: சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.

    தேனி, தென்காசி, நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், கோயம்புத்தூர், கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் தர்மபுரி ஆகியவை ஆரஞ்சு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    Coronavirus Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment