Coronavirus Outbreak Essential services exempt from curfew
Coronavirus Outbreak Essential services exempt from curfew : எங்களுக்காக நீங்கள் வீட்டில் இருங்கள்! உங்களுக்காக உழைப்பவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள். கொரோனா வைரஸூக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள இந்த போரில் பலர் வீட்டிக்குள் முடங்கியிருப்பதை, டிவி பார்த்துக் கொண்டிருப்பதை, குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவதை, இத்தனை நாட்களாக செய்யாமல் இருந்த காரியங்களை செய்வதை பெறும் வதையாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் உங்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சேவைகள் என்னென்ன என்பதை பட்டியலிடுகின்றோம்.
மருத்துவமனைகள், மருந்தகங்கள்
வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள்
காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள்
மளிகைக் கடைகள், நியாய விலைக்கடைகள்
உணவு மற்றும் மருந்துகளை டெலிவரி செய்யும் இணைய வர்த்தக நிறுவனங்கள்
தண்ணீர் மற்றும் மின்சார நிர்வாகம்
செய்தித்தாள்கள், ஊடகங்கள், செய்தி இணையங்கள்
பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் மையங்கள்
அரசினை இயக்கும் அலுவலகங்கள்
ஹோம் டெலிவரி மற்றும் டேக் அவே உணவகங்கள்
கடினமான காலம் தான். கொஞ்சம் நாட்களுக்கு உங்களின் வீட்டுக்குள் அமர்ந்து இருந்தாலே நீங்கள் இந்த நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய கடமையாகும். உணர்ந்து செயல்படுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். உங்கள் கைகள் அதிகம் படும் இடங்களை சுத்தம் செய்யுங்கள். சேவைகள் செய்பவர்களை குறை சொல்லாமல் உங்களின் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”