Advertisment

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா நோக்கி அதிகம் செல்லும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்

Coronavirus oxygen express heads south deliveries spikes தென் மாநிலங்களில் செயலில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாங்கள் இந்த மாநிலங்களுக்கு நிறைய ஆக்ஸிஜனைத் திருப்பிவிட்டோம்

author-image
WebDesk
New Update
Coronavirus oxygen express heads south deliveries spikes to Andhra Tamilnadu Tamil News

Coronavirus oxygen express heads south deliveries spikes to Andhra Tamilnadu Tamil News

Coronavirus oxygen express heads south deliveries spikes Tamil News : ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்குவது கடந்த நான்கு நாட்களில் மிகக் கூர்மையாக அதிகரித்துள்ளது என்று இந்திய ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் வரைபடம் சுட்டிக்காட்டுகிறது.

Advertisment

கோவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்ஸிஜனை வழங்க நாட்டைச் சுற்றியுள்ள சிறப்பு ரயில்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,142 டன்களுக்கும் அதிகமான ஒற்றை நாள் ஆக்சிஜன் அளவுகளைக் கொண்டிருந்தன. அதன் முந்தைய நாளான மே 20 அன்று கொண்டுசெல்லப்பட்ட 1,118 டன்களின் அதிகபட்ச அளவை இது முறியடித்தது.

ஏப்ரல் 19-க்கு இடையில், முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டதும் கடந்த திங்கட்கிழமை, 247 ரயில்களில் 977-க்கும் மேற்பட்ட டேங்கர்களில் 16,023 டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை ரயில்வே வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவின் பரந்த கிராமப்புற நிலப்பகுதிக்கும் பரவியுள்ளதால், இரண்டாவது அலையின் தொடக்கத்தில் டெல்லி மற்றும் மும்பைக்கு அவசரக்கால பொருட்களை வழங்குவதிலிருந்து, ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் கடந்த மாதத்தில் 15 மாநிலங்களை எட்டியுள்ளது.

மொத்த விநியோகத்தில், பாதிக்கும் மேற்பட்டவை திங்கள் வரை 8,249 டன் ஆக்சிஜன் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு வந்துள்ளன. மேலும் கடந்த சனிக்கிழமையன்று அசாம், ஓர் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரேக்கில் 80 டன் பெற்றது.

ஆந்திராவில் விநியோகத்தில் மிகப்பெரிய ஏற்றம் காணப்பட்டது. இது, வியாழக்கிழமை (மே 20) வரை ஒட்டுமொத்தமாக 292 டன் பெற்றது. திங்களன்று, இந்த எண்ணிக்கை 730 டன்னாக உயர்ந்தது. அதாவது, 150 சதவீதம் அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை வரை தமிழகம் 1,024 டன் பெற்றது. இது, வியாழக்கிழமையிலிருந்து 75 சதவீதம் அதிகரித்துள்ளது. கர்நாடகாவிற்கு 1,063 டன் கிடைத்தது. இது வியாழக்கிழமை வரை 640 டன் ஆக்ஸிஜனைப் பெற்றதை விட 66 சதவீதம் அதிகம்.

தெலுங்கானா, வியாழக்கிழமை வரை 772 டன் பெற்றது. திங்கள் இறுதியில், அதன் எண்ணிக்கை 26 சதவீதம் அதிகரித்து 976 டன்னாக உயர்ந்துள்ளது.

publive-image

பெரிய ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாத மாநிலமான கேரளாவில் கடந்த வியாழக்கிழமை வரை 118 டன் ஏற்றிச் செல்லும் ஆறு டேங்கர்கள் கொண்டு செல்லப்பட்டன. நான்கு நாட்களுக்குப் பிறகு, அந்த எண்ணிக்கை 246 டன்னாக உயர்ந்தது. அதாவது, 108 சதவீதம் அதிகம்.

"தென் மாநிலங்களில் செயலில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாங்கள் இந்த மாநிலங்களுக்கு நிறைய ஆக்ஸிஜனைத் திருப்பிவிட்டோம்" என்று இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு மூத்த அரசாங்க அதிகாரி கூறினார்.

கடந்த மாதம் முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையிலிருந்து மும்பைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்திருந்தாலும், மகாராஷ்டிராவுக்கு இதுவரை 614 டன் மட்டுமே தேவைப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 27 முதல் திங்கள் வரை டெல்லிக்கு 4,600 டன் கிடைத்தது. அதாவது வியாழக்கிழமையிலிருந்து 17 சதவீதம் அதிகரித்துள்ளது. 3,649 டன்களுடன் உத்தரப்பிரதேசம் பெறப்பட்ட ஆக்சிஜன் அளவைப் பொறுத்தவரை இது இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த திங்களன்று ஹரியானா 1,759 டன்களைப் பெற்றுள்ளது. இது, வியாழக்கிழமை முதல் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில், ஆக்ஸிஜனின் பெரும்பகுதி இந்த மூன்று மாநிலங்களுக்கும் வந்துள்ளது.

மேற்கில் உள்ள ஹப்பா, பரோடா மற்றும் முந்த்ரா மற்றும் நாட்டின் கிழக்கில் உள்ள ரூர்கேலா, துர்காபூர், டாடாநகர் மற்றும் அங்கூல் ஆகியவற்றிலிருந்து பெரும்பாலான ஆக்ஸிஜன் எடுக்கப்படுகிறது. இந்த வாரம் யாஸ் சூறாவளியின் அச்சுறுத்தல் காரணமாக, ஆலைகளுக்குத் தடையின்றி மின்சாரம் உறுதி செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் உருவாக்கியுள்ளதுடன், வழக்கமான பாதைகள் பாதிக்கப்படாமல் எக்ஸ்பிரஸ்களுக்கான மாற்று வழிகளிலும் பணியாற்றியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Oxygen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment