Advertisment

அரசிடம் பணமும் உணவும் உள்ளது... ஏழைகளுக்கு தரும் மனம் தான் இல்லை - சிதம்பரம் ட்வீட்

ஊரடங்கு நீட்டிப்பை தாண்டி மோடியின் வார்த்தைகளில் நாட்டு மக்களுக்கு வேறென்ன செய்திகள் இருக்கிறது - சிதம்பரம் கோபம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
P Chidambaram's response on lockdown extension

P Chidambaram's response on lockdown extension  : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து, மே 3-ம் தேதிவரை தொடரும் என அறிவித்தார்.

Advertisment

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஏழை எளிய மக்கள் தங்களின் வாழ்வுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் என்ன செய்ய வேண்டும், அவர்களை பசியில் இருந்து காக்கும் திட்டங்கள் என்ன என்பதை அவர் இன்றும் அறிவிக்கவில்லை. ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதற்கு முன்பாகவே இன்று தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழர்களுக்கு, தமிழில் தெரிவித்திருந்தார் மோடி.

லாக்டவுனை தாண்டி, பிரதமரின் இந்த புத்தாண்டு செய்தியில் என்ன இருக்கிறது. ஏழைகளின் வாழ்வாதாரம், அவர்களின் உயிர் - இது இந்த அரசின் முக்கியமான விசயங்களில் ஒன்றாக இல்லை. இந்தியாவில் இருக்கும் முதல்வர்கள் கேட்ட நிதி தொடர்பாக எந்த பதிலும் இல்லை. மார்ச் 25ம் தேதி வெளியிட்ட பேக்கேஜில் ஒரு ரூபாய் கூட புதிதாக சேர்க்கவில்லை.

ரகுராம் ராஜன் முதல் ஜீன் ட்ரேஜ் வரை, பிரபாத் பட்நாயக் முதல் அபிஜித் பானர்ஜி வரை யார் கூறிய அறிவுரைகளும் அரசின் காதில் விழவில்லை. 40 நாட்களுக்கு ஏழைகள் என்ன செய்வார்கள். அவர்கள் உணவுகளுக்காக வேண்டுகோள் விடுக்கிறார்கள். அரசிடம் பணமும், உணவும் உள்ளது. ஆனால் அரசுக்கு அதை ஏழைகளுக்கு தர மனம் தான் இல்லை என்று வரிசையாக ட்வீட்களை வெளியிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க : அச்சத்தில் நின்ற தூய்மை பணியாளர்கள் ; களத்தில் துணிந்து இறங்கிய ரோஜா!

Coronavirus P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment