Advertisment

Corona Updates: சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயம் - மாநகராட்சி அறிவிப்பு

Coronavirus Latest Updates: கொரோனா குறித்த அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona Updates: சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயம் - மாநகராட்சி அறிவிப்பு

Covid-19 Cases Update: உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 1.14 லட்சத்தை தாண்டியது.உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,14,201 ஆகவும், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,52,533 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதாவது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்வு. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 273-லிருந்து 308 ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 857 ஆகவும் உயர்ந்துள்ளது.

Advertisment

அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு ஒரே நாளில் 1500 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியும் படிப்படியாக உயிரிழப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 1075 பேர் ஆளாகியிருக்கிறார்கள். தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதன் செலவை அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கும், 5 செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 199-ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கை நீட்டிப்பதில் தமிழக அரசு தன்னிச்சையான முடிவெடுக்க ஏன் தயங்குகிறது என தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Live Blog

Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    22:24 (IST)13 Apr 2020

    கொரோனா வைரஸ் 10 மடங்கு ஆபத்தானது

    2009ல் தீயாய் பரவிய இன்ஃபுளுவென்சா வைரஸைக் காட்டிலும் கொரோனா வைரஸ் 10 மடங்கு ஆபத்தானது

    இது பரவும் வேகம் மிக அதிகமாகவும், குறைவது மிக மெதுவாகவும் உள்ளது!

    - உலக சுகாதார நிறுவனம் தகவல்

    21:47 (IST)13 Apr 2020

    பொது இடங்களில் எச்சில் துப்புவதை தடுக்க நடவடிக்கை

    கொரோனா எதிரொலியாக புகையிலைகளை பயன்படுத்தி பொது இடங்களில் எச்சில் துப்புவதை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

    21:47 (IST)13 Apr 2020

    மின்கட்டணம் செலுத்த மே-6 வரை அவகாசம்

    மார்ச்.25 முதல் ஏப்.30 வரையிலான மின் கட்டணத்தை செலுத்த மே.06 ஆம் தேதி வரை அவகாசம் - மின்சார வாரியம்

    முந்தைய மாத கணக்கீட்டின்படி மின்கட்டணத்தை செலுத்தலாம்.

    21:33 (IST)13 Apr 2020

    வாகனம் பறிமுதல் செய்யப்படும்

    * வாகனத்தில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் சென்றால், வாகனம் பறிமுதல் செய்யப்படும்

    * மேலும் வெளியே செல்வதற்கான சிறப்பு அனுமதி சீட்டு போன்றவை ரத்து செய்யப்படும்

    - பெருநகர சென்னை மாநகராட்சி

    21:33 (IST)13 Apr 2020

    உரிய உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்

    குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் - ஏடிஜிபி ரவி

    பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஏடிஜிபி ரவி சுற்றறிக்கை

    21:32 (IST)13 Apr 2020

    உணவு வழங்க அனுமதி - சென்னை மாநகராட்சி விளக்கம்

    சென்னையில் ஏழைகளுக்கு உணவு வழங்க விரும்புவோர் 24 மணி நேரத்திற்கு முன்பு அனுமதி பெற வேண்டும்

    சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று அலுவலர்கள் முன்னிலையில் உணவு, மளிகை, மருந்துகளை தரவேண்டும்

    21:15 (IST)13 Apr 2020

    சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயம்

    சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    சென்னையில் வெளியில் வரும் போது மாஸ்க் அணிவது நாளை முதல் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையை தொடர்ந்து சென்னையிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    21:02 (IST)13 Apr 2020

    34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    குஜராத்தில் இன்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது;

    இதனையடுத்து குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 572 ஆக அதிகரிப்பு.

    20:35 (IST)13 Apr 2020

    ஏழைகளுக்கு மட்டுமே கட்டணமில்லா கொரோனா பரிசோதனை

    தனியார் மருத்துவமனை, ஆய்வகங்களில் ஏழைகளுக்கு மட்டுமே கட்டணமில்லா கொரோனா பரிசோதனை - உச்சநீதிமன்றம் உத்தரவு.

    அனைவருக்கும் கட்டணமில்லா பரிசோதனை என கடந்த 8ம் தேதி வழங்கிய உத்தரவில் உச்சநீதிமன்றம் மாற்றம் செய்துள்ளது

    20:32 (IST)13 Apr 2020

    முக‌க்கவசம் அணிவது கட்டாயம்

    கோவை மாவட்டத்தில் முக‌க்கவசம் அணிவது கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

    முகக்கவசம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை - கோவை ஆட்சியர்

    20:32 (IST)13 Apr 2020

    044-26426773 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

    அனைத்து மாவட்ட விவசாயிகளும் தங்களது நெல்லினை நேரடி கொள்முதல் செய்வதற்கு 044-26426773 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் - அமைச்சர் காமராஜ்

    20:01 (IST)13 Apr 2020

    மருந்து வேண்டுமா?

    தமிழகத்தில் 18001212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டால் வீட்டிற்க்கே வந்து மருந்துகள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருந்து சங்க பணியாளர்கள் 5,000 பேர் மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுவர் எனவும் கூறியுள்ளார்.

    20:01 (IST)13 Apr 2020

    ரூ.5 லட்சம் நிதியுதவி

    தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் விவேக் ரூ.5 லட்சம் நிதியுதவி

    19:33 (IST)13 Apr 2020

    150 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று

    மும்பையில் இன்று மட்டும் கொரோனாவினால் 9 பேர் உயிரிழப்பு, 150 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

    மும்பையில் கொரோனா பாதிப்பு 1,546ஆகவும், பலி எண்ணிக்கை 100ஆகவும் உயர்ந்தது..

    இன்று 43 பேர் நோயிலிருந்து மீண்டனர்; இதுவரை மொத்தம் 141 பேர் குணமடைந்துள்ளனர்.

    19:33 (IST)13 Apr 2020

    தாராவியில் 50ஐ நெருங்கும் பாதிப்பு

    மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49ஆக அதிகரிப்பு..

    இன்று புதிதாக 6 பேருக்கு நோய்த்தொற்று, ஒருவர் உயிரிழப்பு..

    மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது..

    19:16 (IST)13 Apr 2020

    புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு

    புதுச்சேரியிலும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு

    18:53 (IST)13 Apr 2020

    கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக....

    தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக..

    சென்னையில் மட்டும் 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    publive-image

    18:20 (IST)13 Apr 2020

    தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்த எண்ணிக்கை 1,173 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் புதிதாக 98 பேருக்கு கொரோன வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது.

    18:14 (IST)13 Apr 2020

    பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படவில்லை; ஒத்திவைக்கப்பட்டுள்ளது - பள்ளிக்கல்வித்துறை

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. முதல்வர் பழனிசாமி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அவசியம் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு ரத்து செய்யப்படவில்லை; ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    17:17 (IST)13 Apr 2020

    அனைத்து நீதிமன்றப் பணிகளும் நிறுத்தி வைப்பு - உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு

    தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றக் கிளை மற்றும் அனைத்து நீதிமன்றங்களின் பணிகளும் ஏப்ரல் 30வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

    16:24 (IST)13 Apr 2020

    தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவு - முதல்வர் பழனிசாமி 2/2

    கட்டத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இரண்டாவது முறையாக ரூ.1000 வழங்கப்படும். பேக்கரிகள் நாளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கத் தடையில்லை. பார்சல்கள் மட்டுமே வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    வெளிமாநில தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    16:24 (IST)13 Apr 2020

    தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவு - முதல்வர் பழனிசாமி 1/2

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

    தமிழத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒரு கிலோ சர்க்கரை து.பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், வழக்கம் போல வழங்கப்படும் அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    16:05 (IST)13 Apr 2020

    தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவு - முதல்வர் பழனிசாமி

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

    15:17 (IST)13 Apr 2020

    தமிழகத்தில் எந்த பகுதியிலும் காய்கறி, பழங்களுக்கு தட்டுப்பாடு இல்லை - வேளாண் துறை செயலர்

    வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி: வாழை, தர்பூசணி, பப்பாளி பழங்களை விநியோகம் செய்ய விவசாயிகள் வியாபாரிகள் இடையே அரசு பாலமாக செயல்படுகிறது. பூ விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என அவர்களின் பூக்களை வாசனை திரவியங்கள் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கட்டணமின்றி அரசு கிடங்குகளை விவசாயிகள் பயன்படுத்தலாம். அரசு குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிரமமின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயம் தொடர்பான போக்குவரத்து வாகனங்களை தடை செய்யக் கூடாது என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

    15:03 (IST)13 Apr 2020

    விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது - விவசாயத்துறை செயலர்

    வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககந்தீப் சிங் பேடி பேட்டி: விவசாயிகளுக்கு தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. விவசாயம் தொடர்புடைய வாகனங்களின் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. விவசாயிகள் சமூக இடைவெளியுடன் விவசாயப் பணிகளை தொடர்வது நல்லது என்று கூறினார்.

    14:59 (IST)13 Apr 2020

    1.24 லட்சம் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - உணவுத்துறை செயலர் பேட்டி

    சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா கூறியதாவது: தமிழகத்தில் 1.24 லட்சம் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரடி கொள்முதல் நிலையங்கல் மூலம் விவாசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சமையல் எரிவாயு பெட்ரோலியப் பொருட்கள் சுமூக உள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு நீடிக்கும்.” என்று கூறினார்.

    14:27 (IST)13 Apr 2020

    நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

    நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 14) காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    13:47 (IST)13 Apr 2020

    கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

    கர்நாடகாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 247ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 59 பேர் குணமடைந்துள்ளனர். 

    13:29 (IST)13 Apr 2020

    நாய்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்

    கோவையில் , சிவா, பிந்து, பாலு ஆகிய தன்னார்வலர்கள், நாய்களுக்கு தினமும் சமைத்து வாகனத்தில் எடுத்து சென்று உணவளித்து வருகின்றனர்.  கடந்த 15 நாட்களாக தினமும்  சாதம், பால் மற்றும் பிஸ்கட்டுகளை  நாய்களுக்கு உணவாக வழங்கி வருவதால், இவர்களது வாகனம் வந்தவுடன் நாய்களும் உணவுக்காக ஓடி வருகின்றன. 

    13:07 (IST)13 Apr 2020

    மகாராஷ்டிராவில் உயரும் கொரோனா

    மகாராஷ்டிராவில் புதிதாக 82 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,064ஆக உயர்வு. இன்று மும்பையில் மட்டும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    12:46 (IST)13 Apr 2020

    மத்திய பிரதேசத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா

    மத்திய பிரதேசம், இந்தூரில் புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தூரில் மட்டும் இதுவரை 328 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. ம

    12:27 (IST)13 Apr 2020

    திமுக சார்பில் வழக்கு

    12:07 (IST)13 Apr 2020

    தமிழக அரசு விளக்கம்

    பொதுமக்களுக்கு உதவும் தன்னார்வலர்கள் யாருக்கும் தடை விதிக்கவில்லை; மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

    11:28 (IST)13 Apr 2020

    திமுக மேல்முறையீடு

    பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் உதவ தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்துள்ளது. 

    11:04 (IST)13 Apr 2020

    முதல்வர் ஆலோசனை

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

    கொரோனா பாதிப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2020ஆம் நிதியாண்டில் 5 சதவீதமாகவும், 2021ஆம் நிதியாண்டில் 2.8 சதவீதமாகவும் சரிவடையும் என உலக வங்கி கணித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வர்த்தகம், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து என அனைத்தும் முடங்கி, பொருளாதார சுழற்சி தடைபட்டுள்ளது.
    Coronavirus Corona
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment