Advertisment

முக்கிய கட்டத்தை எட்டிய இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் !

ரஷ்யாவில் மனிதர்கள் மீது நடத்திய சோதனை நல்ல முடிவுகளை தந்துள்ளதாக அந்நாட்டு தரப்பு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Covid19 crisis Bharath Biotech's Vaccine gets nor for human trials

coronavirus vaccines in India : கொரோனா வைரஸுக்கு ஹைதராபாத்தில் இயங்கும் பாரத் பயோ டெக் நிறுவனமும், காடில்லா ஹெல்த்கேர் நிறுவனமும் தடுப்பு மருந்துகளை உருவாக்கியுள்ளன. இந்த மருந்துகளை மனிதர்கள் மீது பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் இந்திய தலைநகர் டெல்லியில் செய்தியாளார்களை சந்தித்த ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தடுப்பூசி ஆராய்ச்சியின் நிலை என்ன என்பதை அறிவித்தார். 2 தடுப்பு மருந்துகளும் முதற்கட்ட சோதனையில் வெற்றி அடைந்துள்ளாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க : சர்வதேச மாணவர்களின் விசா கொள்கை : டிரம்ப் நிர்வாகம் அதிரடி ரத்து

எலி உள்ளிட்ட விலங்குகள் மீது ஆராய்ச்சி செய்து, அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. மருந்தின் தன்மை சிறப்பாக இருப்பதை உறுதி செய்த அவர், முதற்கட்ட முடிவின் ஆய்வறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.  தொடர்ந்து சோதனைகளை தீவிரப்படுத்தி விரைவில் கொரோனா தடுப்பூசிக்கு மருந்தினை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

ரஷ்யாவில் மனிதர்கள் மீது நடத்திய சோதனை நல்ல முடிவுகளை தந்துள்ளதாக அந்நாட்டு தரப்பு அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் அமெரிக்காவின் கேட்ஸ் பவுண்டேசனின் ஆராய்ச்சியும் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment