Advertisment

வீட்டை விட்டு வெளியேற சொன்னதால் விபரீதம் : தீக்குளித்த தம்பதி பலி

கேரளாவில் வீட்டை விட்டு வெளியேற சொன்னதால், தீக்குளித்த தம்பதி, ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
வீட்டை விட்டு வெளியேற சொன்னதால் விபரீதம் : தீக்குளித்த தம்பதி பலி

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆத்தியன்னோர் பகுதியில் வசித்தவர் பொங்கில் ராஜன் (45) இவரது மனைவி அம்பிலி (36). கூலி தொழிலாளியான இவர்களுக்கு ராகுல் ராஜ் மற்றும் ரஞ்சித் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் வசிக்கும் இடம் தனக்கு சொந்தமானது என கூறி வசந்தா என்ற பெண்மணி, கூறி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், வசந்தாவுக்கு சாதகமாக தீர்ப்பு கூறிய நீதிமன்றம் ராஜனை அந்த இடத்தில் இருந்து காலி செய்யுமாறு பரிந்துரைத்தது.

Advertisment

ஆனால் தற்போது இடத்தை காலி செய்ய முடியாது என்றும், தனக்கு காலஅவகாசம் தேவை என்றும் ராஜன் கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் ராஜனை அந்த இடத்தில் இருந்து காலி செய்ய வழக்கறிஞர் ஆணையத்தை நியமித்தது. இதனையடுத்து கடந்த கடந்த 22-ந் தேதி அன்று காவல்துறையினருடன் ராஜனின் வீட்டிற்கு சென்ற வழக்கறிஞர் ஆணைய அதிகாரிகள், ராஜனிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜன், தன்மீதும் தனது மனைவி மீதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பதாக கூறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக  தீப்பற்றியதில், ராஜனும் அவரது மனைவியும் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளனர்.

இதனையடுத்து 70 சதவீதம் தீக்காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை ராஜன் உயிரிழந்தார். தொடர்ந்து அன்று மாலை அவரது மனைவி அம்பிலியும் உயிரிழந்தார். இந்த சம்பம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.  இறக்கும் நிலையில், ராஜன் கொடுத்த மரணவாக்கு மூலத்தில்,  “காவல்துறையினரை தடுப்பதற்காகவும், அவர்களை வெளியேற்றும் முயற்சியில் இவ்வாநு செய்தோம் இப்படி செய்தால். காவல்துறையினர் பின்வாங்குவார்கள் என்று நினைத்தோம். உன்மையில் என் வாழ்க்கையை முடித்துகொள்ள எனக்கு எந்த திட்டமும் இல்லை. எதிர்பாராதவிதமாக பற்றிய தீ எங்களை மூழ்கடித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜனின் மூத்த மகன் ராகுல் ராஜ் கூறுகையில்," சம்பவம் நடந்த அன்று “நாங்கள் மதிய உணவு சாப்பிட இருந்தோம். அப்போது, நீதிமன்ற அதிகாரிகளுடன்  வந்த காவல்துறையினர் வீட்டை காலி செய்யும் உத்தவின் நகலை கான்பித்து எங்களை வெளியேறுமாறு கூறினார்கள். ஆனால் எனது தந்தை எங்கள் உணவை சாப்பிட அனுமதிக்குமாறு கெஞ்சினார். “ஆனால், காவல்துறை எங்களை சாப்பிட அனுமதிக்காமல், வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு வெளியேறுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த ராஜன் மற்றும் அவரது மனைவியை, சர்ச்சைக்குரிய  நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். போலீஸ் நடவடிக்கை மற்றும் தம்பதியரின் மரணத்தால் கேரளாவில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், பெற்றோர் இல்லாமல் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மகன்களுக்கு கேரளா அரசு உதவி செய்யும் எனவும், அவர்களுக்காக கல்வி கல்விச் செலவுகளை அரசு ஏற்கும் எனவும், அரசு சார்பில் அவர்களுக்கு ஒரு வீடு வழங்கப்படும், ”என்றும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆராயுமாறு  மாவட்ட காவல்துறை ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. இது குறித்து ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி அந்தோனி டொமினிக் கூறுகையில், காவல்துறையினர் சரியான முறையில் செயல்படத் தவறிவிட்டனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் செயலில், ஒரு தனி மனிதனின் மனதை புண்படுத்தி தற்கொலைக்கு தூண்டியிருக்க கூடாது. போலீசார் முன்னிலையில் இரண்டு உயிர்கள் பலியாகியிருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

ஆனால் ராஜன் தம்பதி இறந்தாலும் தனது முடிவில் இருந்து மாறாத, வசந்தா (வழக்கு தொடர்ந்து பெண்மனி) 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தை நான் வாங்கினேன். இப்பகுதியில் உள்ள மக்கள் எனக்கு எதிராக உள்ளனர். ஆனால் அந்த நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். இந்த நிலத்திற்காக நான் தனியாக போராடி வருகிறேன். அதனால் இங்கிருந்து வெளியேற மாட்டேன். இது எனக்கு சொந்தமான நிலம் என்பதை நான் நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment