Advertisment

ஒமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது கோவாக்சின் - பாரத் பயோடெக்கின் ஆராய்ச்சி முடிவுகள்

medRXiv தளத்தில் ஆராய்ச்சி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ஐதராபாத்தை தளமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Covaxin booster effective against Omicron, Delta

Covaxin booster effective against Omicron Delta : எமோரி பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி 6 மாதங்கள் ஆன பிறகு கோவாக்சினை பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்திக் கொள்ளும் போது ஒமிக்ரான் மற்றும் டெல்டா மாறுபாடுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் பயோடெக் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கோவாக்சின் மருந்தின் செயல்திறன் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகளுடன் ஒப்பிடும் வகையில் சிறப்பானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

medRXiv தளத்தில் ஆராய்ச்சி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ஐதராபாத்தை தளமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசிகளை பூஸ்டர் தடுப்பூசிகளாக பெற்ற நபர்களில் 90% பேர் நடுநிலைப்படுத்தும் ஆண்ட்டிபாடிகளை பெற்றனர். இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவரும் 28 நாட்கள் இடைவெளியில் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் கோவிட்-19 மாறுபாடாக ஒமிக்ரான் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்று அட்லாண்டாவில் அமைந்திருக்கும் எமோரி தடுப்பூசி மையத்தின் உதவி பேராசிரியர் மெஹூல் சுதர் கூறினார். ஆரம்ப கட்ட ஆய்வு முடிவுகளில் கோவாக்சினை பூஸ்டர் தடுப்பூசிகளாக பெற்றுக் கொண்ட நபர்களிடம் ஒமிக்ரான் மற்றும் டெல்டா மாறுபாடுகளை எதிர்த்து செயல்படும் வகையில் நோயெதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். ஒரு பூஸ்டர் டோஸ் நோயின் தீவிரத்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

கோவாக்சின் தடுப்பூசியை மேம்படுத்த நாங்கள் தொடர் ஆராய்ச்சியில் எங்களை ஈடுபடுத்தி வருகின்றோம் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா கூறினார். ஹூமரல் மற்றும் உயிரணு தொடர்பு நோயெதிர்ப்பு சக்தியை மல்டி-எபிடோப் தடுப்பூசி அதிகரிக்கும் என்ற எங்களின் கருத்தியலை இந்த ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன என்றும் அவர் கூறினார்.

கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறனை ஒமிக்ரானுக்கு எதிராக அதிகரிக்க, அக்குஜென் எமோரி தடுப்பூசி மையத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இரண்டாம் கட்ட மருத்துவ ஆய்வில் பங்கேற்ற நபர்களிடம் இருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்பு “செரா”வை ஆய்வு செய்ய துவங்கியது. 28 நாட்கள் இடைவெளியில் முதல் இரண்டு தடுப்பூசிகளை பெற்று 6 மாதங்களில் பூஸ்ட த் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட நபர்களிடம் பெறப்பட்ட செராவும் neutralization assay-ல் சோதனை செய்யப்பட்டது. மூன்று டோஸ்களுக்கு பிறகு, மாதிரிகளில் அளவிடப்பட்ட ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிரான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் ஜியோமெட்ரிக் மீன் டைட்டர்ஸ் 75 ஆக இருந்தது. டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக 480 மற்றும் D614G எனப்படும் திரிபுக்கு எதிராக 706 இந்த மதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுக்கு Ocugen. Inc நிறுவனம் நிதியுதவி அளித்தது. பாரத் பயோடெக் இரண்டாம் கட்ட ஆய்வுகளில் பெறப்பட்ட செராவை வழங்கியது.

முந்தைய ஆய்வுகள் வைரஸின் ஆல்பா, பீட்டா, டெல்டா, ஜீட்டா மற்றும் கப்பா வகைகளுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் நடுநிலைப்படுத்தும் திறனைக் காட்டியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment