Advertisment

கொரோனா: இந்தியா இன்னும் பல உச்ச நிலைகளைக் காணலாம்!

கோவிட் -19-ல், ஆண்களின் நோயெதிர்ப்பு சக்தி பெரும்பாலும் சைட்டோக்கைன்கள் மற்றும் கீமோக்கைன்கள் (cytokines and chemokine) மூலமாகவே உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
covid 19 book randeep guleria gagandeep kang chandrakant lahariya tamil news

Covid 19 book Coronavirus

*இறப்பு விகிதங்களைக் குறைப்பது ஓர் நல்ல அறிகுறிதான் ஆனால், வழக்குகளின் உச்சநிலையுடன் இணைக்கப்படவில்லை. மேலும் இந்தியா “பல உச்சநிலைகளை” காணலாம்.

Advertisment

*கோவிட் -19 மறு நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகள் மிகவும் அரிதானவை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட நபர் லேசான அறிகுறிகளை மட்டுமே சந்திக்கிறார்.

*கோவிட் -19 முன்-அறிகுறி வழக்கு, முழு அளவிலான தொற்றுநோயின் அறிகுறிகளைக் கொண்ட ஓர் நபரைப் போலவே இருக்கலாம் என்பதை தற்போதைய சான்றுகள் உணர்த்துகின்றன.

இந்தியாவின் முன்னணி சுகாதார நிபுணர்களான டாக்டர் ரன்தீப் குலேரியா, டாக்டர் ககன்தீப் காங் மற்றும் டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா ஆகியோர் Till We Win: India’s Fight Against Covid-19 Pandemic என்ற தங்களின் வெளியாகவிருக்கும் புத்தகத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோயைச் சுற்றியுள்ள சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கான பதில்களைப் பதித்துள்ளனர்.

எய்ம்ஸ் இயக்குநரான டாக்டர் குலேரியா, நாட்டின் சிறந்த நுரையீரல் நிபுணர் மட்டுமின்றி அரசாங்கத்தின் கோவிட் -19 பணிக்குழுவின் உறுப்பினரும்கூட. டாக்டர் காங் உலக புகழ்பெற்ற தடுப்பூசி மற்றும் தொற்று நோய் ஆராய்ச்சியாளர். மற்றும் டாக்டர் லஹாரியா, முன்னணி பொது கொள்கை மற்றும் சுகாதார அமைப்பு நிபுணர்.

"இது நாம் அனைவரும் கடந்து வந்த ஒரு தனித்துவமான பயணம். நம்மில் யாரும் தனிப்பட்ட விதத்திலோ அல்லது ஓர் நாடாகவோ இதற்கு முழுமையாகத் தயாராக இல்லை. நாங்கள் அனைவரும் இதற்காக எவ்வாறு ஒன்றிணைந்தோம், தொற்றுநோயை அழிக்க எங்கள் வழியில் எப்படிப் போராடினோம் என்பதை நேரில் விளக்குவது முக்கியம் என்று நாங்கள் நினைத்தோம்" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் குலேரியா கூறினார்.

இந்தப் புத்தகம், ஏன் கோவிட் -19 மற்றொரு சுவாச நோய் மட்டுமல்ல; பொதுச் சுகாதார பதில் மற்றும் அதன் முன்னணியில் இருக்கும் கதைகள்; தடுப்பூசிகளுக்கு நீண்ட பாதையைக் கொண்டுள்ள நிலையில் பொதுமக்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான எதிர்கால பாதை வரைபடம் என இன்னும் வளர்ந்து வரும் இந்த தொற்றுநோய் தொடர்பான மூன்று முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது.

தொற்றுநோய்களின் பின்விளைவுகளையும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை 'லாங் கோவிட் (Long Covid) என அழைக்கப்படுகிறது. இது தொற்றுநோயின் அடுத்த நெருக்கடியாக இருக்கலாம் எனக் கணிக்கிறார்கள். "நாங்கள் தொடங்கியபோது, வழக்குகள் குறைவாக இருப்பதை உறுதி செய்வதும், இறப்புகளைத் தடுப்பதும் எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. வைரஸ் தொற்றுநோயைப் போல் இல்லாமல், மீட்கப்பட்ட ஏராளமான மக்களில், கோவிட் -19 ஓரளவு மீதமுள்ள கோவிட் பிந்தைய சீக்வெலாவுக்கு வழிவகுக்கிறது என்பதை இப்போது நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம். பல வழக்குகளில் இது மிகவும் லேசானதாகவும் சில வாரங்களுக்குள் குணமடைந்தும் விடுகின்றன. ஆனால் சிலவற்றில், இது நுரையீரல் மற்றும் இதயம் போன்ற உறுப்புகளுக்குக் கணிசமான சேதத்தை ஏற்படுத்தி, நீண்ட கால மறுவாழ்வு மற்றும் அதிகரித்த பராமரிப்பு தேவைப்படுகிற அளவுக்குக் கொண்டு செல்கின்றது. நீண்டகால கவனிப்பை வழங்குவதற்கான அடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்" என்று குலேரியா கூறினார்.

தடுப்பூசி கண்டுபிடிப்பில் இருக்கும் சவால்களையும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதாக அவர் கூறினார். "அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எங்களுக்குத் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று நிறைய நம்பிக்கை உள்ளது. இருப்பினும், அது கைகளில் கிடைக்கும் போது நிறைய மாற்றங்கள் நடந்திருக்கும். பல தடுப்பூசி வேட்பாளர்கள் உள்ளனர் ஆனால், முதலாவதாக வருவது சிறந்ததாக இருக்காது. அதன்பிறகு அதிகமான நோயெதிர்ப்பு மற்றும் பாதுகாப்பான தடுப்பூசிகள் நம்மிடம் இருக்கலாம்… ஆகையால்… ஒரு தடுப்பூசி அல்லது பல தடுப்பூசிகள் இருக்கிறதா அல்லது வெவ்வேறு குழுக்கள் வெவ்வேறு தடுப்பூசிகளைப் பெறுவார்களா, இதனை எவ்வாறு தீர்மானிப்பது, எப்படி அவற்றை முழு மக்களுக்கும் விநியோகிக்க உள்ளோம் போன்ற பிரச்சினைகள் ஓரளவிற்குத் தீர்க்கப்படும்”.

நாடு, பல உச்சநிலைகளை இந்த தொற்றுநோய் தொடும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள். "இருப்பினும், எத்தனை, எப்போது என்று சொல்ல முடியாது ... எத்தனை சிகரங்கள் நிகழ்ந்தன என்பதைத் தொற்றுநோயின் முடிவில் (மட்டுமே) பதிலளிக்க முடியும்" என்கின்றனர். வழக்குகள் மற்றும் இறப்புகள் குறைந்துவிட்ட இடங்கள் ஏற்கெனவே உச்சத்தை எட்டியுள்ளன என்பது அவசியமில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

முன்-அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு இந்த புத்தகம் ஓர் சிவப்புக் கொடியை நீட்டுகிறது. இந்தியாவிலிருந்து கிடைத்த சான்றுகள் அவை தொற்றுநோயாக இருக்கக்கூடும் என்று கூறுகின்றன. "ஒரு சிறிய விகிதம், ஒவ்வொரு 10 நிகழ்வுகளில் ஒன்று, அறிகுறிக்கு முந்தைய அல்லது லேசான நோயாக இருக்கக்கூடும். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், மக்கள் நோய்க்கான எந்த அறிகுறிகளையும் காட்டாதபோது, மற்றவர்களுக்கு எப்போது அது முன் அறிகுறியாகப் பாதிப்படையும். நோயின் முதல் அறிகுறி தோன்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இப்படி இருந்திருக்கும்...  மீட்கப்பட்ட ஒருவர் நோய்க்குப் பிறகு மூன்று மாதங்கள் வரை மேல் சுவாசக் குழாயிலிருந்து வைரஸைப் பரவச் செய்ய முடியும் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன".

"ஒரு நபர் இரண்டாவது முறையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவர் அல்லது அவள் (இரண்டாவது) நோய்த்தொற்றில் கடுமையான நோயை உருவாக்க வாய்ப்பில்லை என்று ஊகிக்கப்படுகிறது" என ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நோயெதிர்ப்பு அமைப்பு விரைவாகப் பதிலளிப்பதை அவர்கள் கண்டதாகப் புத்தகம் கூறுகிறது. மேலும், இது தடுப்பூசி வளர்ச்சி மற்றும் செயல்திறனைப் பாதிக்காது என்பதையும் காட்டுகிறது.

ஆண்களும், இணை நோயுற்றவர்களும் ஏன் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதற்கு, “காரணங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை… கோவிட் -19-ல், ஆண்களின் நோயெதிர்ப்பு சக்தி பெரும்பாலும் சைட்டோக்கைன்கள் மற்றும் கீமோக்கைன்கள் (cytokines and chemokine) மூலமாகவே உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்களில், கோவிட் -19-க்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி டி-செல்கள் மூலம் இயக்கப்படுவதாகக் கருதப்படுகிறது… டி-செல் சார்பு ரெஸ்பான்ஸ் மிகவும் சீரானதாகவும் நுணுக்கமாகவும் இருக்கிறது” என்கிறார்கள் ஆசிரியர்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Coronavirus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment