Advertisment

இந்தியாவில் 80 சதவீதம் கொரோனா நோயாளிகளை உற்பத்தி செய்த 16 நகரங்கள்: 3 நாள் நிலவரம் இது

கடந்த மூன்று நாட்களில் இந்தியா முழுவதும் பதிவான 312 நாவல் கொரோனா வைரஸ் (கொவிட்-19) வழக்குகளில், 80%-க்கும் அதிகமான வழக்குகள் இந்தியாவின் 16 நகரங்கள் (அ) மாவட்டங்களில் இருந்து மட்டும் பதிவாகியவை.

author-image
salan raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவில் 80 சதவீதம் கொரோனா நோயாளிகளை உற்பத்தி செய்த 16 நகரங்கள்: 3 நாள் நிலவரம் இது

கடந்த மூன்று நாட்களில் இந்தியா முழுவதும் பதிவான 312 நாவல் கொரோனா வைரஸ் (கொவிட்-19) வழக்குகளில், 80%-க்கும் அதிகமான பேர்கள் இந்தியாவின் 16 நகரங்கள் (அ) மாவட்டங்களில் இருந்து மட்டும் பதிவாகியவை. இதில் 40%க்கும் அதிகமான பேர் டெல்லி, மும்பை, பில்வாரா (ராஜஸ்தான்), காசர்கோடு (கேரளா) நவான்ஷஹர் (பஞ்சாப்) ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ளனர்.

Advertisment

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இரண்டு உயிரிழப்பு மற்றும் 194 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். இதன்மூலம் ஒரேநாளின் அதிகபட்ச எண்ணிகையை இந்தியா பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக மார்ச் 26ம் தேதி அதிகபட்சமாக 86 வழக்குகள் பதிவாகின.  மார்ச் 28ம் தேடி வரை, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 918 ஆக உயர்ந்துள்ள நிலையில், 79 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்,19 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் இந்தூர்,போபால்; கேரளாவில் பதனம்திட்டா, கண்ணூர்; மகாராஷ்டிராவில் புனே, சாங்லி; உத்தரபிரதேசத்தில் கவுதம் புத்த நகர்; அகமதாபாத் (குஜராத்), கரீம்நகர் (தெலுங்கானா), லே (லடாக்) , சென்னை (தமிழ்நாடு) ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களில்  கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து காணப்படுகிறது.

மும்பை, புனே, பதனம்திட்டா ஆகிய மூன்று பகுதிகள் "கொரோனா வைரஸ் தொற்றின் உண்மையான ஹாட்ஸ்பாட்களாக உருவெடுத்துள்ளதாகவும், அங்கு இரண்டாம் மற்றும் மூன்றாம்  கட்ட நோய் தொற்று பரவலை சந்தித்து வருவதாகவும்" என்று அரசாங்க வட்டாரம் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த பட்டியல்கள் மாறும் தன்மையுடையது. இன்று முதலாவது இடத்தில் உள்ள ஒரு மாவட்டம் நாளை கீழ் இரங்கலாம். புது மாவட்டம் முதல் ஐந்து இடத்திற்குள் வரலாம். இது கட்டுப்பாட்டு முயற்சிகளின் பிரதிபலிப்பு அல்ல, என்பதையும் நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்”என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தற்போது 132 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று  கண்டறியப்பட்டுள்ளது . இந்த வாரத் தொடக்கத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் ஊரடங்கை அறிவித்தபோது இந்த எண்ணிக்கை 75 ஆக இருந்தது. இருப்பினும், சுமார் 80 வழக்குகளுக்கு, அவை பதிவாகியுள்ள மாவட்டங்கள் குறித்த விவரங்கள் இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை.

இதற்கிடையில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில்: “அடுத்தகட்ட நிகழ்வை நோக்கி செல்லும் இந்த நேரத்தில், அதிக நோய் சுமை கொண்ட ஹாட்ஸ்பாட் பகுதிகளை சுற்றியே எங்கள் கவனம் உள்ளது. அந்த பகுதிகளில் மாநில அரசுடன் இணைந்து, சமூக கண்காணிப்பு, தொடர்பு தடமறிதல் (contact tracing), கட்டுப்பாட்டு உத்திகள் போன்றவற்றை செய்து வருகிறோம்.அங்கு ஊரடங்கு மற்றும் சமூக விலகலை  திறம்பட செயல்படுத்துவதை  உறுதி செய்கிறோம். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான சுகாதார உள்கட்டமைப்பு தயாரிப்பு, பிரத்தியோக மருத்துவமனைகள், ஐ.சி.யூ படுக்கைகள் ஆகியவற்றிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.," என்றார்.

கடந்த 24 மணி நேரத்தில் இறந்த நோயாளிகள் இருவரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்; ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருந்தது என்றும் அவர் கூறினார்.

மார்ச் 22 முதல் அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்தூர், போபால், கண்ணூர், சூரத், அகமதாபாத் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் தரை இறங்கியவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்பு தடமறிதல் முயற்சி மற்றும் ஏன் குறிப்பிட்ட சர்வதேச விமான நிலையங்கள் மட்டும் ஹாட்ஸ்பாட்டாக  உள்ளன என்ற கேளிவிக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில்: “தொடர்பு தடமறிதல் மிகவும் விரிவான மற்றும் கடுமையான செயல்முறைகளில் ஒன்றாகும். ஏனெனில் ஒரு நபரை நீங்கள் தவறவிட்டாலும், மோசமான விளைவுகள் எற்பட வாய்ப்புள்ளது. . வியன்னாவிலிருந்து வந்த முதல் டெல்லி நோயாளி மூலம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த இரண்டு ஆக்ரா குடியிருப்பாளர்களுக்காக, நாங்கள் 1,63,000 வீடுகளில் தொடர்பு தடமரிதல் முயற்சியை நாங்கள் செய்தோம்.......  ஏனெனில், இது அவ்வளவு விரிவான செயல்பாடு” என்றார்.

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment