Advertisment

கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்தை விட குறைவான தினசரி தொற்று பாதிப்பு

India’s daily Covid cases fall below 3 Lakh in weeks Tamil News: கடந்த 25 நாட்களுக்கு பிறகு தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று 3 லட்சத்தை விட ( 2.81 லட்சம்) குறைந்து காணப்பட்டது.

author-image
WebDesk
New Update
Covid 19 India Second wave Tamil News: India’s daily Covid cases fall below 3 Lakh in weeks

Covid 19 India Second wave Tamil News: இந்தியாவில் உருமாறியுள்ள கொரோனா தொற்றின் தாக்கம் முதல் அலையை விட மோசமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தொற்றின் பரவல் மற்றும் இறப்பு விகிதம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 25 நாட்களுக்கு பிறகு தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று 3 லட்சத்தை விட ( 2.81 லட்சம்) குறைந்து காணப்பட்டது.

Advertisment

நேற்று குறைவான சோதனைகள் நடத்தப்பட்டதால் தொற்று பாதிப்பில் இந்த வீழ்ச்சி இருக்கலாம் என சில மருத்துவர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் சராசரியாக 18 முதல் 19 லட்சம் வரையிலான கொரோனா சோதனை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் நேற்று 15.73 லட்சம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,106 ஆக பதிவாகியுள்ளது. மேலும் தொற்று உறுதி செயப்பட்டவர்களின் எண்ணிக்கை வீதத்தில் 1 லட்சம் குறைந்து 35.16 ஆக உள்ளது.

டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவுவதை சரிபார்க்கும் மையங்கள் அதிகப்படுத்தப்பட்டும் உள்ளன. இவை தவிர நாடு முழுவதும் உருவாகி வரும் 2வது அலையை கட்டுப்படுத்த மற்றும் கிராமப்புறங்களில் பரவுவதை சமாளிக்க புதிய நிலையான இயக்க நடைமுறை (SOP) மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்கள் தொற்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிராம அளவிலான கண்காணிப்பு, சமூக சுகாதார அதிகாரிகளுடன் தொலைபேசி ஆலோசனை, விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் பயிற்சி என பல துறைகளில் கவனம் செலுத்தும்.

இதற்கிடையில், தங்களது கோவிட் -19 தடுப்பூசியான ‘கோவாக்சின்’ இந்தியாவிலும், இங்கிலாந்திலும் காணப்படும் கொரோனா வைரஸ் விகாரங்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவ இதழான மருத்துவ தொற்று நோய்களில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை பாரத் பயோடெக் நிறுவனம் பேசியுள்ளது.

கோவாக்சினுடனான தடுப்பூசி முறையே இந்தியா மற்றும் இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்ட பி .1.617 மற்றும் பி .1.1.7 உள்ளிட்ட அனைத்து முக்கிய உருவெடுத்து வரும் தொற்றுகளுக்கு எதிராக நடுநிலையான டைட்டர்களை உருவாக்கியுள்ளது எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொரோனா தொற்றுக்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது.

இது செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தை கடந்தது. அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தையும், அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தையும், நவம்பர் 20 அன்று 90 லட்சத்தையும், மற்றும் டிசம்பர் 19 அன்று ஒரு கோடியையும் தாண்டியது. மேலும் மே 4 அன்று 2 கோடிக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்ற கடுமையான மைல்கல்லை தாண்டியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

India Covid 19 Covid 19 In India Covid 19 Second Surge Covid19 In India Covid New Cases
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment