Advertisment

நாடு முழுவதும் மே 3 வரை பொது முடக்கம் அறிவிப்பு: மோடி முன்வைத்த 7 வேண்டுகோள்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரைகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாடு முழுவதும் மே 3 வரை பொது முடக்கம் அறிவிப்பு: மோடி முன்வைத்த 7 வேண்டுகோள்

இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தேசியளவிலான பொது முடக்கம் வரும் மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். வரும் காலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்படும் என்று கூறிய பிரதமர் மோடி," நோய் தடுப்பு நடவடிக்கையில் நாம் இப்போது தளர்வை அனுமதிக்க முடியாது. ஹாட்ஸ்பாட் பகுதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், புதிய ஹாட்ஸ்பாட் பகுதிகளாக மாறும் இடங்களையும் நாம்  உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

Advertisment

 

முன்னதாக, கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கையாள்வதற்கான அணுகுமுறைகளை உருவாக்குவது தொடர்பாக முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமலை நீட்டிக்க வேண்டும் என்பதில் மாநிலங்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து இருப்பது போல தெரிவதாகவும் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தங்களது பொது முடக்க காலத்தை மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிப்பதாக அறிவித்தது.

இன்று பிரதமர்  தனது உரையை முடிப்பதற்கு முன், நாட்டு மக்களிடம் ஏழு விஷயங்களைக் கடைபிடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

  1. வயதானவர்கள் மற்றும் மூத்த குடிமக்களை கவனித்துக் கொள்ளுங்கள்
  2. வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை  உண்மையாகப் பயன்படுத்துங்கள்
  3. ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்து மற்றவர்களையும் பதிவிறக்கம் செய்யச் சொல்லுங்கள்.
  4. ஏழை மக்களை கவனித்துக்கொள்ளுங்கள், அவர்களின் உணவு தேவைகளில் அக்கறை கொள்ளுங்கள்
  5. யாருடைய வேலை வாய்ப்பையும் பறிக்காதீர்கள்.
  6. இக்கட்டான சூழலில் நமக்கு உதவி செய்யும் சுகாதார ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறை போன்றோர்களின் வார்தைகளை கடைபிடுயுங்கள்.
  7. அர்ப்பணிப்புடன், மே 3 வரை பொது முடக்கத்தைப் பின்பற்றுங்கள். நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் பாதுகாப்பாக இருங்கள்.

இந்த 7 விஷ்யங்களை கடைபிடிப்பதன் மூலம் நீங்கள் அரசுக்கு உதவமுடியும் என்றும் தெரிவித்தார்.

Live Blog

PM Modi Speech Live Updates:  பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். 



























Highlights

    10:40 (IST)14 Apr 2020

    நிலைமை மேம்படும் இடங்களில் மட்டும் சில தளர்வுகள் அளிக்கப்படும் - பிரதமர் மோடி

    வரும், ஏப்ரல் 20ம் தேதி வரை,மாவட்டங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதை கண்காணிப்போம். நிலைமை மேம்படும் இடங்களில் மட்டும் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். tமீண்டும் அந்த பகுதியில் நிலைமை மோசமடைந்துவிட்டால், அளிக்கப்பட்ட தளர்வுகள் ரத்து செய்யப்படும் என்று மோடி தனது உரையில் தெரிவித்தார். இது குறித்த ஒரு விரிவான வழிகாட்டுதல் நெறிமுறையை நாளை  வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.  

    10:34 (IST)14 Apr 2020

    நோய் தடுப்பு நடவடிக்கையில் நாம் இப்போது தளர்வை அனுமதிக்க முடியாது - மோடி

    வரும் காலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, "  நோய் தடுப்பு நடவடிக்கையில் நாம் இப்போது தளர்வை அனுமதிக்க முடியாது. ஹாட்ஸ்பாட் பகுதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், புதிய ஹாட்ஸ்பாட் பகுதிகளாக மாறும் இடங்களையும் நாம்  உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்." என்று தெரிவித்தார். 

    10:30 (IST)14 Apr 2020

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது: பிரதமர் மோடி

    வைரஸ் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய நான் முதல்வர்கள், அதிகாரிகளுடன் பல சந்திப்புகளை நடத்தினேன்.அபாயங்களை மனதில் கொண்டு, இந்த பொது முடக்க காலம் மே 3 வரை நீட்டிக்கப்பட வேண்டும். வைரஸ் பரவலை நாம் நிறுத்த வேண்டும்.

    10:19 (IST)14 Apr 2020

    மே 3 வரை பொது முடக்கம் நீடிப்பு: நேரலையில் மோடி அறிவிப்பு

    தேசிய பொது முடக்கம் மே மாதம் மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார் மோடி  

    10:15 (IST)14 Apr 2020

    மக்களின் தியாகங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்- மோடி

    ஒரு கோவிட்- 19 நோயாளி கூட உறுதிபடுத்தாத நிலையில் கூட, கோவிட்- 19 பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை இந்தியா ஸ்க்ரனிங் செய்ய ஆரம்பித்தது .

    நாட்டைக் காப்பாற்ற,பொது மக்கள் கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். எத்தனை சிரமங்களை எதிர்கொள்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். இந்த நாட்டு மக்களின் தியாகத்திற்காக நான் மரியாதையுடன் வணங்குகிறேன் எtன்று மோடி குறிப்பிட்டார் 

    10:03 (IST)14 Apr 2020

    பிரதமர் உரையை இங்கே நேரலையில் காணுங்கள்

    09:59 (IST)14 Apr 2020

    பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் பேசுகிறார்

    கடந்த மார்ச்-24ம் தேதி அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் கடைசி நாளான இன்று பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். தற்போதைய பொது முடக்கம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிகப்படும் என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பிரதமரின் உரை அமைந்துள்ளது.  மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்காளம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா  போன்ற மாநிலங்கள் ஏப்ரல் 30 வரை பொது முடக்கத்தை நீட்டிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

    PM Modi Speech Live Updates:  பொது முடக்கத்தின் போது கல்வி அட்டவணையின் தொடர்ச்சியை உறுதி செய்ய தொழில்நுட்பத்தின் சக்தியை முழுவதுமாகப் பயன்படுத்துமாறு பல்கலைக்கழகங்களையும், இதர கல்வி நிறுவனங்களையும் குடியரசு துணைத் தலைவர், வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.

    கொவிட் நிதியுதவிக்கு பங்களிக்கும் விதமாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் அசோக் லாவாசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோர் ஆணையம் தமக்கு வழங்கி வரும் அடிப்படை ஊதியத்தின் முப்பது சதவீதத்தை,வரும் 2020 ஏப்ரல் 1 முதல் ஒரு வருட காலம், தானாக முன் வந்து குறைக்க முடிவு செய்துள்ளனர்

     

    Coronavirus Corona
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment