Advertisment

இந்தியாவில் டெல்டா அலையில் 2.4 லட்சம் பேர் பலி; அதே நிகழ்வுகள் விரைவில் நடக்கலாம்: ஐநா அறிக்கை

2021ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், கோவிட்-19 டெல்டா வைரஸின் கொடிய அலை இந்தியாவில் 2,40,000 உயிர்களை பலிகொண்டதாகவும் பொருளாதார மீட்சியை சீர்குலைத்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வியாழக்கிழமை கூறியது.

author-image
WebDesk
New Update
Covid 19, covid third wave, coronavirus, Delta, Omicron, UN Report, 2 lakh 40 thousand people death, இந்தியாவில் டெல்டா அலையில் 2.4 லட்சம் பேர் பலி, ஐநா அறிக்கை, Delta virus, Omicron variant, covid 19 vaccines

ஐ.நா.வின் 2022ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார நிலை மற்றும் பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையில், கோவிட்-19-ன் வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரான் வைரஸ், புதிய தொற்று அலைகளை கட்டவிழ்த்து விடுவதாகவும், மனிதர்கள் மற்றும் பொருளாதாரத்தில் தொற்றுநோய் மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisment

2021ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், கோவிட்-19 டெல்டா வைரஸின் கொடிய அலை இந்தியாவில் 2,40,000 உயிர்களை பலிகொண்டதாகவும் பொருளாதார மீட்சியை சீர்குலைத்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வியாழக்கிழமை கூறியது.

ஐக்கிய நாடுகள் உலகப் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார் வாய்ப்புகள் (WESP) 2022 அறிக்கை, கோவிட்-19 இன் வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரான் வைரஸ் புதிய தொற்று அலைகளை கட்டவிழ்த்துவிட்டதால், தொற்றுநோய் மனிதர்கள் மற்றும் பொருளாதாரத்தில் மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்தியாவில் டெல்டா வைரஸின் கொடிய அலை ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 2,40,000 உயிர்களைத் பலி கொண்டது. பொருளாதார மீட்சியை சீர்குலைத்தது. இதே போன்ற நிகழ்வுகள் விரைவில் நடக்கலாம்” என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.

“தடுப்பூசிகளுகான உலகளாவிய அணுகுதலை உள்ளடக்கி, கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மற்றும் நீடித்த உலகளாவிய அணுகுமுறை இல்லாமல், தொற்றுநோய் உலகப் பொருளாதாரத்தின் நிலையான மீட்சிக்கு தொடர்ந்து மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை துணைப் பொதுச் செயலாளர் லியு ஜென்மின் கூறினார்.

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவலின்படி, இதுவரை 1,54,61,39,465 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் அழிவை ஏற்படுத்தியது. ஏனென்றால், இறப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்தது. தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை அழுத்தியது. உலக அளவில் கொரோனா வைரஸின் டெல்டா வகை வைரஸை, ஒமிக்ரான் வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை விரைவாக தாண்டுவதை நாடு கண்டுவருகிறது.

தெற்காசியா 2030 நிகழ்ச்சி நிரலை அடைவதில் பெரும் பின்னடைவு அபாயங்களை எதிர்கொள்கிறது என்று ஐ.நா அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

“ஒப்பீட்டளவில் மெதுவாக தடுப்பூசி செலுத்தும் வளர்ச்சி புதிய மாறுபாடுகள் மற்றும் தொடர்ச்சியான பரவலில் இப்பகுதியை பாதிக்கிறது. நிதிக் கட்டுப்பாடுகள் மற்றும் போதிய உலகளாவிய தடுப்பூசி விநியோகம் சில நாடுகளில் முழு மீட்புக்கு இழுத்துச் செல்கிறது” என்று ஐ.நா அறிக்கை கூறியுள்ளது.

டிசம்பர், 2021-ன் தொடக்கத்தில், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாக்கிஸ்தான் மக்கள் தொகையில் 26 சதவீதத்திற்கும் குறைவாகவே முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். இதற்கு நேர்மாறாக, பூட்டான், மாலத்தீவு மற்றும் இலங்கையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்கள் தொகை 64 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Coronavirus Omicron Delta Variant Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment