Advertisment

நல்ல வாழ்க்கையை தேடி உ.பி. வந்த எனக்கு தற்கொலையே பரிசு - கொரோனாவால் நிகழ்ந்த விபரீதம்!

வடகிழக்கு இந்தியர்களின் உருவ அமைப்பை வைத்து அவர்களை நாளுக்கு நாள் கிண்டல் செய்யும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
COVID19 outbreak Aldrin Lyngdoh northeast young man found dead atop eatery

COVID19 outbreak Aldrin Lyngdoh northeast young man found dead atop eatery

COVID19 outbreak Aldrin Lyngdoh northeast young man found dead atop eatery : ஆல்ட்ரின் லைங்டோஹ் என்பவர் ஷில்லாங்கை சேர்ந்தவர். வடகிழக்கு இந்தியரான இவர் நல்ல வாழ்க்கையை தேடி உத்திரபிரதேசம் வந்துள்ளார். அம்மாநில அமைச்சர் சௌத்ரி உதய்பெனின் மருமகள் ஆக்ராவில் இனிப்புக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடையில் அவர் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார் ஆல்ட்ரின். கொரோனா வைரஸ் நோய் தொற்றால் அதிக அளவுக்கு மன ரீதியாக அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் வடகிழக்கு மக்கள். அவர்களின் உருவ அமைப்பை வைத்து அவர்களை நாளுக்கு நாள் கிண்டல் செய்யும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது.

Advertisment

மேலும் படிக்க : மலை வழியாக எல்லையை அடைந்த தமிழர்கள்… தமிழகத்திற்கு வர 3 நாட்கள் நடந்தே வந்த கொடூரம்!

இது போன்ற மன அழுத்தத்திற்கு ஆல்ட்ரினும் ஆளாகியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கையை முடித்து கொள்ள இருப்பதாகவும், தன்னைப் போன்ற எண்ணற்ற வடகிழக்கு இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் என்.ஜி.ஒ நிறுவனரான ரோபின் ஹிபுவுக்கும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

தன்னுடைய தற்கொலை கடிதத்தில் எனக்கு செல்ல வழிகள் ஏதும் இல்லை. எனக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளது. எனக்கு உதவுங்கள். நாம் அனைவரும் எங்கே செல்லப் போகிறோம் என தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காஷி மொழியில் “என்னை காப்பாற்றுங்கள், காஷி உடன்பிறப்புகளே. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த செய்தி கிடைத்தவுடனே, மேகலாயா காவல்துறைக்கு செய்தி அனுப்பி அவருடைய உறவினர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டார். ஆக்ரா காவல்துறைக்கு இந்த செய்தி கிடைத்து அந்த இனிப்பு கடைக்கு வந்து பார்த்த போது, அக்கடையின் முதல் மாடியில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார் ஆல்ட்ரின்.

மேலும் படிக்க : “வீட்டில் இருந்து நாட்டை காக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரமீடு மூலம் செய்தி அனுப்பிய எகிப்து அரசு!

இது தொடர்பாக அக்கடையின் உரிமையாளர் சீமாவிடம் கேட்ட போது, ஆல்ட்ரினை முன்பே பதவியில் நீக்கிவிட்டோம். அவர் ஏற்கனவே திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தார். மேலும் அவர் வெகு நாட்களாக காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்து அவர் எங்களின் கட்டிடத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

2018ம் ஆண்டு தேவ் தாப்பா என்ற பெயரில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு, சிகந்த்ரா என்ற இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அவருக்கு காச நோய் வந்தது. ஆனால் தன்னுடைய தற்கொலை கடிதத்தில், இனி திருட்டு தொழில் செய்யப் போவதில்லை என்ற உறுதியுடன் நல்ல வாழ்க்கையை தேடி ஆக்ராவுக்கு வந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment