Advertisment

தடுப்பூசி தேவை; மாநில அரசுகளை கைகழுவிய மத்திய அரசு: எதிர்க்கட்சி மாநிலங்கள் கண்டனம்

உலகில் வேறெந்த நாட்டிலும் தடுப்பூசி திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த அரசு இல்லை

author-image
WebDesk
New Update
Don’t wash hands of vaccine, what about the poor: Opp states to Centre

Manoj C G , Prabha Raghavan : 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மே 1ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்த மறுநாளில், மாநில அரசுகளும், துறைசார் நிபுணர்களும் பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளனர். மத்திய அரசு 50% தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை வெளிசந்தை மூலம் மாநில அரசுகள் பெற்றுக் கொள்ளலாம் என்று தடுப்பூசி கொள்கையில் மாற்றத்தை தெரிவித்து அறிவித்துள்ளது. இது மாநில அரசுகளுக்கு மேலும் நிதி சுமையை உருவாக்கும். பாஜக ஆளும் மாநிலங்களான உ.பி. மற்றும் அசாம் போன்ற மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் மற்ற மாநில அரசுகளை கை கழுவிட்டதாக மத்திய அரசை முதல் அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisment

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிரதமருக்கு பிப்ரவரி மாதம் எழுதிய கடிதத்தில், மேற்கு வங்கம் தங்களின் மாநில மூலங்களை பயன்படுத்தி தடுப்பூசிகளை பெற்று இலவசமாக மக்களுக்கு வழங்க பிரதமரின் தலையீடு வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது உங்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகிவிட்டது என்று மமதா பானர்ஜீ குறிப்பிட்டார்.

மேலும் படிக்க : சென்னையில் அதிகரித்து வரும் தொற்று; சிகிச்சை தர தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி

அறிவிக்கப்பட்ட கொள்கை நேர்மையற்ற முறையில் தடுப்பூசிகள் விற்பனை செய்வதற்கு வழி வகுக்கும். இது தடுப்பூசிகளின் விலை உட்பட சந்தை விலைகளை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றுகிறது, இது பொது மக்களை பெரும் நிதிச் சுமையின் கீழ் கொண்டு வரக்கூடும்" என்று அவர் கூறினார்.

Covid19 vaccines in Open Market

பிரதமருக்கு கடிதம் எழுதிய கேரள முதல்வர் பினராயி விஜயன், தடுப்பூசி பெறும் பயனர்களை இலக்கை விரிவு செய்ததை வரவேற்கின்றோம். தற்போது இருக்கும் பொருளாதார சுமையை அடிக்கோடிட்டு காட்டிய அவர், "கோவிட் தடுப்பூசிகளை வாங்குவதற்கான கூடுதல் சுமை மாநில நிதிகளில் கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார்.

இந்த முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பினராயி விஜயன், மாநில அரசுகளுக்கு கொரொனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் மேலும் பெருந்தொற்று காலத்தில் பொதுநலன் கருதி மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்க வேண்டியது மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : கொரோனா தடுப்பூசி மூலப்பொருட்கள்: அமெரிக்காவை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏன்?

இந்திய அரசு சேனலாக செயல்படாமல் , தடுப்பூசி விநியோகிக்கப்படும் மாநில அரசுகளை உள்ளடக்கிய ஒரு அரசாங்க சேனலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வெளி சந்தையில் விநியோகஸ்தர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தடுப்பூசி வைத்திருக்க அனுமதி வழங்கலாம், அதற்காக மலிவு விலையை நிர்ணயிக்க வேண்டும் அப்போது தான் நேர்மையற்ற நிறுவனங்கள் பொதுமக்களை சுரண்டுவதை தடுக்க முடியும். மத்திய அரசு அதன் 50% ஒதுக்கீட்டிலிருந்து மாநில அரசுகளுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கும் என்று கொள்கை கூறினாலும், திறந்த சந்தை நிறுவனங்களுடன் போட்டியிட அவர்கள் விடமாட்டார்கள் என்பதற்கு மாநிலத்திற்கு ஒரு உறுதி தேவை என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, புதிய கொள்கை மிகவும் தவறானது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கூடுதல் சுமைகளை தரக்கூடாது. அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை பெறும் அனைத்து வயதினருக்கும் அதனை இலவசமாக வழங்கி, தனியார் மருத்துவமனைகளில் 25% தடுப்பூசிகளை வைத்திருக்கலாம். யாரால் பணம் கொடுத்து பெற முடியுமோ அவர்கள் அதனை அங்கே சென்று பெற்றிருப்பார்கள் என்றார்.

தொலைநோக்கு பார்வையாகவும் இல்லை, முற்றிலும் இந்த கொள்கை தவறானது. உடனே இதனை திரும்பி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சத்தீஸ்கரின் சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் குறிப்பிட்டார். மகாராஷ்ட்ர மாநில அரசு, சர்வதேச சந்தைகளில் இருந்து தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கூறியது. அஸ்ட்ரஜென்கா, ஃபைசர், ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சர் ஜித்தேந்திர அவ்ஹத் கூறினார்.

மேலும் படிக்க : கொரோனா இரண்டாம் அலை: ஆக்ஸிஜன் தேவை அதிகம்; இறப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை

புதிய கொள்கைகளை விமர்சித்து பேசியது காங்கிரஸ் கட்சி. 28 என்பதை சராசரி வயதாக கொண்ட ஒரு நாட்டில் 45 வயதிற்கு கீழே உள்ளவர்களை ஒரு பொது திட்டத்தில் இருந்து விலக்குவது கருணையற்ற செயல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

மத்திய அரசு பொறுப்புகளில் இருந்து ஓடிவிட்டது. மாநில அரசுகளுக்கு அதிக சுமைகளை வழங்கியது மட்டும் அல்லாமல் தடுப்பூசி உற்பத்தியாளர்களை பயனடைய வைத்துள்ளது. இது மாநிலங்களுக்கு இடையே சரிசமமற்ற தன்மையையும், ஏழை பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளியையும் அதிகரிக்கும் என்று கூறினார். உலகில் வேறெந்த நாட்டிலும் தடுப்பூசி திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த அரசு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

எந்த நாடும் கொரோனா தடுப்பூசியை பொதுசந்தைக்கு விடவில்லை. ஏன் என்றால் தடுப்பூசிகள் அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது. அவரச தேவைக்காக பயன்படுத்துவதாகவும் உள்ளது. ரஷ்யாவை தவிர வேறெந்த நாடும் தடுப்பூசிகளுக்கான உரிமத்தையும் கூட வைத்திருக்கவில்லை என்று ககன்தீப் கங் கூறியுள்ளார்.

இந்தியாவில் தடுப்பூசிகள் எண்ட்ரியை அதிகரிப்பது அல்லது உற்பத்தியை அதிகரிப்பது விநியோக சங்கிலியை அதிகரிக்கும். இது ஜூன் இறுதியில் தான் நடைபெறும் என்று பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் தலைவர் கே. ஸ்ரீநாத் ரெட்டி கூறியுள்ளார்.

45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் இலவச தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறிய நிலையில், குறைவான வருமானத்தை பெறும் குடும்பங்களில் உள்ள இளம் பிராயத்தினருக்கு தேவையான தடுப்பூசிகளை மாநில அரசுகள் வழங்க வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் எங்கே இருக்கின்றனரோ அவர்களுக்கு அதே மாநிலத்தில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment