Advertisment

சி.பி.எம் செயலாளர் பதவியில் இருந்து விலகிய கொடியேரி பாலகிருஷ்ணன்

கேரளா உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு சி.பி.எம் மாநில செயலாளர் பதவியில் இருந்து கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலப் பிரச்னைகளை சுட்டிக்காட்டி விலகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kodiyeri Balakrishnan, CPM Kerala, Kodiyeri Balakrishnan steps downs, கேரளா, சிபிஎம், கொடியேரி பாலகிருஷ்ண பதவி விலகினார், சிபிஎம் கேரளா மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்னன், Kerala local body polls, Kerala polls, Kerala news, tamil Indian express

கேரளாவில் மாநில உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேரள மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலப் பிரச்னைகளை சுட்டிக்காட்டி, சிபிஎம் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

Advertisment

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்குப் பிறகு சி.பி.எம் கட்சியில் இரண்டாவது தலைவரும் கேரள சி,.பி.எம் மாநில செயலாளருமான கோடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தனது பதவியில் இருந்து விலகினார். அவருடைய பதவி சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) ஒருங்கிணைப்பாளர் விஜயராகவனுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.

மாநில செயலகம் அனுமதித்த மருத்துவ சிகிச்சையை மேற்கோள் காட்டி கொடியேரி பாலகிருஷ்ணன் ராஜினாமாவுக்கு விண்ணப்பித்ததாக சி.பி.எம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயர்மட்ட சிபிஎம் தலைவரான கொடியேரி பாலகிருஷ்ணன் கடந்த ஆண்டு கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற முயன்றார். இருப்பினும், அந்த நேரத்தில், அவர் தனது பதவியில் இருந்து விலகவில்லை. அதே நேரத்தில், பாலகிருஷ்ணன் கட்சி விவகாரங்களிலிருந்து எவ்வளவு காலம் விலகி இருப்பார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பெங்களூருவில் போதைப் பொருள் வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் அவரது இளைய மகன் பினீஷ் கோடியேரி அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதை அடுத்து, பாலகிருஷ்ணன் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த வார தொடக்கத்தில், சிறப்பு நீதிமன்றம் பினீஷின் ஜாமீன் மனுவை நிராகரித்ததையடுத்து நவம்பர் 25ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக கருதப்படும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 1200 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு முன்னதாக, கொடியேரி பாலகிருஷ்ண பதவி விலகியிருப்பது, அவருடைய மகன் போதைப் பொருள் வழக்கில் கைதாகியிருப்பதும் சி.பி.எம் கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) கன்வீனர் விஜயராகவனுக்கு தற்காலிக குற்றச்சாட்டு வழங்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Kerala Cpm Kodiyeri Balakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment