Advertisment

கொரோனா: நகைக்கடன் வாங்குவோர் எண்ணிக்கை 77% உயர்வு

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அதன் நகைக்கடன் வளர்ச்சி 2021 ஜூன் மாதத்தில் 338.76 சதவிகிதம் என அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
கொரோனா: நகைக்கடன் வாங்குவோர் எண்ணிக்கை 77% உயர்வு

கடந்த 12 மாதத்தில் இந்திய நிறுவனங்கள் மற்றும் சேவைத் துறை பெற்றுள்ள கடன் அளவு சரிந்துள்ளது. அதேபோல் ரீடைல் லோன் பிரிவு அதாவது தங்க கடன், கிரெடிட் கார்டு லோன் ஆகியவை பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய வங்கி அமைப்பில் ரீடைல் அல்லது பர்சனல் லோன் பிரிவு வர்த்தகம் மொத்த கடன் வர்த்தகத்தில் வெறும் 26 சதவீதம் மட்டுமே. ஜூலை 2021 வரையில் முடிவடைந்த 12 மாத காலகட்டத்தில் ரீடைல் லோன் பிரிவு 11.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முந்தைய 12 மாத காலகட்டத்தில் 9 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

Advertisment

இந்த ரீடைல் லோன் பிரிவில் தங்க கடன் மட்டும் கடந்த 12 மாதத்தில் சுமார் 77.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 27,223 கோடி ரூபாய் உயர்ந்து 62.412 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் தங்கக் கடன் 338.76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கியின் மொத்த தங்க கடன் வர்த்தக மதிப்பு 21,293 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஆனால் நகைக்கடன் வணிகத்தில் ஏற்பட்டுள்ள உயர்வு கொரோனா ஊரடங்கு, வேலை இழப்பு, ஊதிய பிடிப்புகள், மருத்துவ செலவுகள் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், பணநெருக்கடி மற்றும் எதிர்பாராத செலவுகள் அதிகரித்துள்ளதால் மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. இதன் மூலம் எளிதில் கடன் பெறலாம். இந்த வணிகத்தில் பணத்தை மீட்பது சிக்கலானது அல்ல என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரித்துள்ளது என்றார்.

ஜூலை 2021 ல் முடிவடைந்த 12 மாதங்களில் கிரெடிட் கார்டு நிலுவையும் 9.8 சதவீதம் (ரூ. 10,000 கோடி) உயர்ந்து ரூ.1.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நம்மிடம் பணம் இல்லையென்றாலும் விருப்பமானவற்றை கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம். ஆனால் இது விருப்பமான செலவினங்களை எடுக்க பரிந்துரைக்கும் அதே வேளையில், நுகர்வோர் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக விலை அல்லது அதிக கடன்களை நாடுவதை சுட்டிக்காட்டுகிறது. ஜூலை 2020 உடன் முடிவடைந்த முந்தைய 12 மாதங்களில், கிரெடிட் கார்டு நிலுவை 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

சமீபத்திய RBI தரவுகளின்படி, சில்லறை விற்பனைப் பிரிவுகளுக்கான கடன் நிலுவைத் தொகை ரூ. 2.88 லட்சம் கோடியாக அதிகரித்து ஜூலை 2021 வரை ரூ. 28.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் தொழிற்துறை மற்றும் சேவை துறை கடன் அளவில் 1 சதவீதமும், அதற்கு முன்பு 2.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த இரண்டு பிரிவுகளும் மொத்த கடன் நிலுவையில் உள்ள ரூ .108.32 லட்சம் கோடியில் பாதிக்கும் மேல் உள்ளன.

மேலும் ரீடைல் கடன் பிரிவில் வீட்டுக் கடன் பிரிவு மட்டும் சுமார் 51.3 சதவீதம் வர்த்தகத்தைப் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஜூலை 2021 வரையில் முடிந்த 12 மாத காலகட்டத்தில் 8.9 சதவீத வளர்ச்சி அடைந்திருந்த நிலையில் இதற்கு முந்தைய 12 மாத காலகட்டத்தில் 11.1 சதவீதமும் உயர்ந்து மொத்த கடன் அளவு 14.66 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்போது வீட்டு கடன் அதிகரித்துள்ளது.

publive-image

ஜூலை 2021ல் பெரிய தொழில்களுக்கான கடன் 2.9 சதவீதம் குறைந்து ரூ. 22.75 லட்சம் கோடியாக இருப்பதை ரிசர்வ் வங்கி தரவு வெளிப்படுத்துகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு வளர்ச்சி 1.4 சதவீதம் இருந்தது. இதன் விளைவாக, புதிய முதலீடுகளை செய்யாத தொழிலின் ஒட்டுமொத்த கடன் வளர்ச்சி, ஜூலை 2021 வரையிலான 12 மாதங்களில் 1 சதவிகிதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தது. முந்தைய 12 மாதங்களில் 0.9 சதவீதமாக இருந்தது. சரிவுக்கு ஒரு காரணம் டி-லீவரேஜிங் (கடன்களை குறைத்தல்) மற்றும் பத்திர சந்தைக்கான அணுகலாக இருக்கலாம்.

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, நடுத்தரத் தொழில்களுக்கான கடன் ஒரு வருடத்திற்கு முன்பு 1.8% இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது ஜூலை 2021 இல் 71.6 சதவிகிதம் ரூ .1.63 லட்சம் கோடியாக வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது. குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் 7.9 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு 1.8 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது. தொற்றுநோயால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க எஸ்எம்இக்களுக்கு நீட்டிக்கப்பட்ட அவசர கடன் வரி உத்தரவாத திட்டம் போன்ற அரசின் முயற்சியால் இது உயர்ந்துள்ளது.

NBFCs மற்றும் வணிக ரியல் எஸ்டேட்களுக்கான கடன் வளர்ச்சியின் வீழ்ச்சி காரணமாக, சேவைத் துறையின் கடன் வளர்ச்சி ஜூலை 2020ல் 12.2%லிருந்து ஜூலை 2021 இல் 2.7 %ஆக குறைந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக வணிக செயல்பாடுகள், புதிய ஆர்டர்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டதால், இந்தியாவின் சேவைத் துறை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக ஜூலையில் சுருங்கியுள்ளதாக ஐஎச்எஸ் மார்கிட் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இந்தியா சர்வீசஸ் பிசினஸ் ஆக்டிவிட்டி இன்டெக்ஸ் ஜூலை மாதத்தில் 45.4 ஆக இருந்தது. 50க்கும் கீழே இருந்தால் குறுகியதை குறிக்கும்.

வாகனக் கடன்கள் 2021 ஜூலை மாதத்தில் 7.3 சதவீதம் உயர்ந்து ரூ.2,65,951 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு 2.7 சதவிகித வளர்ச்சியாக இருந்தது. விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டன. 2020 ஜூலை மாதத்தில் 5.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது ஜூலை 2021ல் 12.4 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்தது.

இதற்கிடையில், கடந்த 12 மாதங்களில் தொலைத்தொடர்பு (13.5 சதவீதம் சரிவு), சிமென்ட் (21.5 சதவீதம் சரிவு) மற்றும் உலோகங்கள் மற்றும் உலோக பொருட்கள் (13.3 சதவீதம் சரிவு) உள்ளிட்ட பல துறைகளுக்கு வங்கிகள் தங்கள் வெளிப்பாட்டைக் குறைத்துள்ளன. துறைமுகங்கள், கட்டுமானம், உரம், தோல் மற்றும் சர்க்கரை ஆகியவற்றுக்கான கடன்களும் இந்த காலத்தில் குறைந்துள்ளது.

இருப்பினும், வங்கிகள் வெளிப்பாட்டை ரூ.54,000 கோடி அல்லது கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்து ரூ.2.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. GeM மற்றும் நகைகளுக்கு ரூ .6,000 கோடியிலிருந்து ரூ .61,404 கோடியாகவும் அதிகரித்துள்ளது. (‘Government e-Marketplace - GeM’ (ஜெம்) நிறுவனம் வியாபார வாய்ப்புகளை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Credit Growth Gold Loan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment