Advertisment

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் - காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவு

Congress Party Update : காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா, காந்தியும் அவரது குடும்பத்தினரும் கட்சியின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் - காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவு

Congress Working Committee Meting Update : சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், அக்கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாக காந்திய நீடிப்பார் என்றும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் காங்கிரஸ் தலைவருக்கான உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

5 மாநில சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி காங்கிரஜ் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியில் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC) கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரும் ஏப்ரல் 8-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு, காங்கிரஸ் கட்சியில், ‘சிந்தன் ஷிவிர்’ அல்லது சிந்தனைக்கூட்டம் நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா, காந்தியும் அவரது குடும்பத்தினரும் கட்சியின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாகவும், கட்சி விரும்பினால், அவரையே மீண்டும் தலைவராக இருக்க வற்புறுத்துவது போன்ற மிகவும் பரிச்சயமான காட்சிகளைக் கூட்டத்தில் பார்த்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும் சோனியாக காந்தியின் தலைமையின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும். கடசியை முன்னிட்டு இருந்து வழிநடத்தவும், பலவீனங்களை நிவர்த்தி செய்யவும், அரசியல் சவால்களை எதிர்கொள்ள தேவையான மற்றும் விரிவான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அவரிடம் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் போராட்டம் பாஜகவுடன் தான் உள்ளது என்றும், அது நவீன தேர்தல் எந்திரத்தைக் கொண்டிருப்பதாகவும், பாஜகவின் எந்திரத்திற்கு இணையாக காங்கிரஸும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். காந்தி குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த தகவலுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2020ல் காங்கிரஸ் கட்சியில் பெரும் மாற்றங்கள் தேவை என்று, கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய குழுவின் (G23) தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கூட்டத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற இது போன்ற கூட்டங்களில் வெளிநடப்புக்கள் உள்ளிட்ட சூடான கருத்துப் பரிமாற்றங்களைக் கண்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும்  தாமதமாக, கட்சியை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வெளிப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதில் பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்ட நேரம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், இது மிகவும் தாமதமாக வந்தமுடிவு என்றும், குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே இது நடந்திருக்க வேண்டும் என்றும் கூறினார். முடிவு தாமதமாகிவிட்டதை ஒப்புக்கொண்ட சோனியா, அது தனது தவறு என ஏற்றுக்கொண்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மேலும ஹரிஷ் ராவத் தனது பொறுப்புகளில் இருந்து மிகவும் முன்னதாகவே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அவர் உத்தரகாண்டில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றும் ஆசாத் கூறியுள்ளார். ஆலோசனைகள் என்று கூறப்பட்ட இந்த கூட்டத்தில் காங்கரஸ் கட்சியின் தலைமை மீதான விமர்சனங்கள் அதிகமாக முன்வைக்கப்பட்டது.

தலைவர் சோனியாக காந்திக்கு கடிதம் எழுதியவர்களின் ஒருவாரான திக்விஜய சிங், கே.எச் முனியப்பா மற்றும் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் ராகுல் காந்தியிடம் இன்னும் நெருக்கம் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து உட்கட்சி தேர்தலுக்குப் பிறகு பதவியேற்கும் புதிய காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலத் தலைவர்கள் இருவரும் எளிதில்"அணுகக்கூடிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் பொறுப்புகளை ஏற்க்கக்கூடியாவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசாத், கூறியுள்ளார்.

ஜி 23 குழுவின் மற்றொரு உறுப்பினரான ஆனந்த் ஷர்மா, பிரதேச காங்கிரஸ் கமிட்டி (பிசிசி) தலைவர்களுடன் இணைந்து பணி தலைவர்களை நியமிக்கும் நடைமுறை சிக்கல்களை உருவாக்குகிறது, காங்கிரஸுக்கு கூட்டு சுயபரிசோதனை மற்றும் முடிவெடுக்கும் கலாச்சாரம் உள்ளது, ஆனால் கட்சிக்கு வெளியில் இருந்து வருபவர்களை மாநிலத் தலைவர்களாக நியமிக்கக் கூடாது என்று கூறிய அவர், இந்த பதவிகள் சித்தாந்த ரீதியில் அர்ப்பணிப்புடன் உயர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கங்கா ஆரத்தியில் ராகுல் பங்கேற்றது குறித்து அனைத்து 5 மாநில பொதுச்செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தனித்தனியாக அறிக்கை சமர்ப்பித்த போது, உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் தனது அறிக்கையில் இந்துத்துவாவுடன் மேலோட்டமாக இருப்பதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என்று கூறியதை சர்மா சுட்டிக்காட்டியுள்ளார். .

இந்நலையில், இந்த கூட்டத்தில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் தோற்றம் ஒரு விவாதப் புள்ளியாக இருந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில்  எதிர்க்கட்சி இடம் சுருங்கி வருவதால் காங்கிரஸ் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்று ஷர்மா கூறியுள்ளார். இதில் தற்போது ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் போட்டியிட தயாராகி வருகிறது என்று கூறிய ஷர்மா, 2024 பொதுத் தேர்தல்கள் மற்றும் வரவிருக்கும் பிற தேர்தல்களுக்கு கட்சி ஒரு வியூகத்தை வகுக்க வேண்டும் கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் "தீவிரமான கவலைக்குரியது கட்சி,  கட்சி தனது செயல்பாடுகள் மற்றும் கட்சியில் உள்ள குறைபாடுகளால், நான்கு மாநிலங்களில் பாஜக மாநில அரசுகளின் தவறான ஆட்சியை வெளிக்கொண்டு வர முடியவில்லை. பஞ்சாப்பிலும் ஆட்சியை தக்கவைக்க முடியவில்லை என்று கூறப்பட்டது. லோக்சபாவின்  காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காந்தி குடும்ப உறுப்பினர்களை "பயனற்றவர்கள்" என்று காட்டுவதன் மூலம் பாஜக ஒரு தனது வெற்றியை அமைப்பதாகக் கூறினார். ஆனால் நாம் அந்த வலையில் விழுந்துவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

 “ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் ராகுல் காந்தி முன் வந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் அமைப்பு ரீதியான தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த காங்கிரஸின் தலைவர் அந்த செயல்முறையின் மூலம் தீர்மானிக்கப்படுவார் என்று காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறை தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விரைவில் ராஜஸ்தான், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநிலங்களில், சிந்தன் ஷிவிர் என்ற சிந்தனைக்கூட்டத்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். முன்னதாக, ராஜஷ்தான் முதல்வது அசோக் கெலாட் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் உள்ளிட்ட சில கட்சித் தலைவர்கள் ராகுலை மீண்டும் தலைமைப் பதவிக்கு வருமாறு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sonia Gandhi Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment