Advertisment

ஜம்மு –காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: குப்கர் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை

J&K DDC Election Results 2020 : ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

author-image
WebDesk
New Update
ஜம்மு –காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: குப்கர் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

காஷ்மீர் பள்ளத்தாக்கில் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி (பிஏஜிடி) பெரும்பான்மையான இடங்களில் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதுவரை வெளியான தேர்தல் முடிவில் , பிஏஜிடி கூட்டணி 71 இடங்களில் முன்னிலை மற்றும் 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக  கூட்டணி 48 இடங்களில் முன்னிலை மற்றும் எட்டு இடங்களில் கைப்பற்றியது. 19 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ், இதுவரை நான்கு இடங்களை கைப்பற்றியது.

 

 

இதற்கிடையே, ஜம்மு ஆட்சிப்பிரிவுகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ஸ்ரீநகர் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலில் பெரும்பாலான இடங்களை சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஸ்ரீநகர் பள்ளத்தாக்கில் கொன்மோ -2 மாவட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தொகுதியில் பாஜகவின் ஐஜாஸ்  உசேன் (Aijaz Hussain) வென்றார். மேலும், பாண்டிபோரா மாவட்டத்தில் துலைல் தொகுதியை அக்கட்சியைச் சேர்ந்த ஐஜாஸ் அஹ்மத் கான் வென்றார்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா , மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள்  பாஜகவுக்கும் அதன் "பினாமி அரசியல் கட்சிக்கும்" தகுந்த பாடம் என்று குறிப்பிட்டார். மேலும், மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவை மக்கள் நிராகரித்ததாகவும் கூறினார்.

 

 

"இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி. பிரதமர் மற்றும் அவரது கொள்கைகள் மீது மக்கள் நம்பிக்கை  கொண்டுள்ளனர். இது, காஷ்மீரில் தேசியவாத சிந்தனைகள் அதிகரித்து கொண்டிருப்பதற்கான அறிகுறி "என்று ஐஜாஸ்  உசேன் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

publive-image ஐஜாஸ்  உசேன்

 

குப்கர் பிரகடனம் என்பது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி, தேசிய மாநாட்டு கட்சி தலைவரின் குப்கர் இல்லத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட தீர்மானமாகும். ஜம்மு- காஷ்மீரின் அடையாளம், சுயாட்சி, சிறப்பு அந்தஸ்து ஆகியவற்றை பாதுகாப்பது இப்பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும். மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்காக குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில், 7 அரசியல் கட்சிகள் உள்ளன. இதன் தலைவராக உமர் அப்துல்லா, துணைத் தலைவர் மெகபூப முப்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment