2020 இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு, Death registrations show 6% rise in pandemic year 2020 | Indian Express Tamil

2020இல் 81.16 லட்சம் பேர் மரணம்… பிறப்பு சதவீதம் சரிவு – அதிர்ச்சியளிக்கும் டேட்டா

இது பிறப்பு, இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை அல்ல. 2020இல் பதிவான எண்ணிக்கை மட்டுமே ஆகும். 2020இல் இறப்பு எண்ணிக்கை அதிகமானதற்கு கொரோனா பலிகள் முக்கிய காரணமாகும்.

2020இல் 81.16 லட்சம் பேர் மரணம்… பிறப்பு சதவீதம் சரிவு – அதிர்ச்சியளிக்கும் டேட்டா

இந்திய பதிவாளர் ஜெனரல் மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய தரவின்படி, 2020 ஆம் ஆண்டில் 81.16 லட்சம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும்.

சிவில் பதிவு முறை(CRS) வெளியிட்ட தரவின்படி, 2020 இல் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 2019 இல் 2.48 கோடியிலிருந்து 2.42 கோடியாகக் குறைந்துள்ளது. அதேசமயம், இறப்புப் பதிவுகள் 2019 இல் 76.41 லட்சமாக இருந்த நிலையில், 2020இல் 81.16 லட்சமாக அதிகரித்துள்ளது

மேலே குறிப்பிட்டுள்ளவை, பிறப்பு மற்றும் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை அல்ல. 2020இல் பதிவான எண்ணிக்கை மட்டுமே ஆகும். உண்மையான எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம். சமீப ஆண்டுகளில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இறப்பு பதிவு கடந்த மூன்று ஆண்டுகளில் உயர்வைக் கண்டுள்ளது. 2019 இல், அனைத்து இறப்புகளிலும் 92சதவீதம் பதிவு செய்யப்பட்டன. ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு 79 சதவீத இறப்புகள் மட்டுமே பதிவாகியிருந்தது.

2020 ஆண்டில் இறப்பு எண்ணிக்கை அதிகமானதற்கு கொரோனா பலிகள் முக்கிய காரணமாகும். புள்ளிவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டில் கோவிட் -19 காரணமாக 1.49 லட்சம் பேர் இறந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் 5.23 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தெரிகிறது.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட CRS புள்ளிவிவரங்களிலும் கொரோனா மரணம் என தனியாக எதுவும் குறிப்பிடவில்லை.

நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் VK பால் கூறுகையில், 2020இல் நாட்டில் கொரோனா இறப்புகளின் உண்மையான எண்ணிக்கையானது அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் இருந்து பெரிதும் வேறுபடவில்லை என்பதையே சிஆர்எஸ் டேட்டா காட்டுகிறது.

இந்த தரவு மரணத்திற்கான காரணத்தைக் கூறவில்லை, ஆனால் நிச்சயமாக 4.74 லட்சம் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளதில் கோவிட்-19 இறப்புகளும் அடங்கும். பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் அதிகரிப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம்.

முதலாவது, 2020 இல் பதிவுசெய்யப்பட்ட அதிகப்படியான இறப்புகள் அனைத்தும் புதிய நோயால் ஏற்படவில்லை. இரண்டாவது, 2 ஆண்டுகளுக்கு இடையில் நமது மக்கள் தொகை 1.6 கோடி அதிகரித்துள்ளது. அதன் காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் மூன்றாவது, இறப்பை பதிவு செய்வது எளிதாகிவிட்டது. மக்கள் அதிக விழிப்புணர்வுடன் உள்ளனர். வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்களுக்கு இறப்பு சான்றிதழ்கள் தேவை, எனவே பதிவுகள் அதிகரித்து வருகின்றன. அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Death registrations show 6percent rise in 2020