1971ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில், இந்தியா வரலாற்று வெற்றியை பதித்தது. அந்த வெற்றியின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் , இரண்டு நாள் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின் முடிவுல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பல போர் வீரர்களையும், போரில் வீரப் பதக்கங்களைப் பெற்ற சிலரின் குடும்பத்தினரையும் சந்தித்தார்.
போரில் முன்மாதிரியான தைரியத்தை வெளிப்படுத்தியதற்காக பரம் வீர் சக்ராவால் அலங்கரிக்கப்பட்டவர் கர்னல் ஹோஷியார் சிங். அவரது மனைவி தன்னோ தேவியை சந்தித்த ராஜ்நாத் சிங், அவரது பாதங்களை தொட்டு வணங்கினார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த 30 முக்தி ஜோதாக்களுடன் மற்ற வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாகிஸ்தானுடனான போரில் வெற்றியை நிலைநாட்ட, வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அமைச்சர் மரியாதை செலுத்தினார்.
நோட்டிஸ் நோட்டிஸ்…
நியமன எம்.பி.யும், இந்திய முன்னாள் தலைமை நீதிபதியுமான ரஞ்சன் கோகோயின் சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸின் ராஜ்யசபா எம்.பி சிறப்புரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வருவதற்காக நோட்டிஸ் அனுப்பினார்.
அதனை தொடர்ந்து, மறு நாளே சிபிஐ(எம்) ஜான் பிரிட்டாஸ் தவிர மூன்று காங்கிரஸ் எம்பிக்கள் அமி யாக்னிக், நீரஜ் டாங்கி மற்றும் சக்திசிங் கோஹில் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பினர். முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக சிறப்புரிமையை உயர்த்தக்கோரி திமுகவும் நோட்டீஸ் அளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் டச் இருக்கு!
மானியங்களுக்கான கூடுதல் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) அமல்படுத்துவது குறித்து கவலை தெரிவித்தனர்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், பாஜக எம்பியுமான அபராஜிதா சாரங்கி MGNREGA-இன் இணைச் செயலாளராகப் முன்பு பணியாற்றியவர். அவர், MGNREGA திட்டத்தின் பட்ஜெட் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். இது அவர் துறையில் தனது முன்னாள் சக ஊழியர்களுடன் இன்னும் தொடர்பில் இருப்பது போல் தெரியவந்து சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கமளித்த அவர், இன்று காலையில், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் பேசினேன். ஏனென்றால், இன்று இப்பிரச்சினை குறித்து சபையில் கேள்வியும், சந்தேகங்களும் எழுப்பப்படும் என்பதை நன்கு அறிவேன்” என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil