இந்திய ராணுவ அமைச்சகத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாதுகாப்பு துறைக்கான பிரத்யேக இணைய தளம் www.mod.gov.in என்ற முகவரியில் செயல்பட்டு வருகின்றது. பாதுகாப்பு அமைச்சக வரலாறு, முப்படைகளை பற்றிய தகவல்கள், டெண்டர் விண்ணப்பங்கள் என பாதுகாப்பு துறை தொடர்புடைய அனைத்து தகவகளும் இதில் இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில், இன்று திடீரென இந்த இணையதளம் முடக்கப்பட்டது. இணையதளத்தில் சீன மொழியில் எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த எழுத்துக்களின் அர்த்தம் இதுவரை தெரியவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ள சம்பவம் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையதளம் முடக்கப்பட்டது குறித்து விசாரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

இணையதளத்தை மீட்கும் பணியில் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இது தொடர்பாக எந்த பதிலையும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close