Advertisment

டெல்லி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் ஷாஹீன் பாக் அரசியல் ஏன்?

பொதுவாகவே, தற்போதைய அரசாங்கத்தின் தோல்விகளை திறம்பட எடுத்துக்காட்டுகின்ற ஒரு கட்சியாக பாஜக இல்லை. ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள குறைப்பாடுகள்  வாக்காளர்களிடம் எதிரொலிப்பதில்லை என்பதை பாஜக உணர்ந்ததாகத் தெரிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டெல்லி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் ஷாஹீன் பாக் அரசியல் ஏன்?

பிப்ரவரி 8ம் தேதி டெல்லிசட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் ஆக்கிரோஷமான பிரச்சாரம், ஷாஹீன் பாக் போராட்டத்தால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து நெரிசல்களில் சாதாரன மக்களுக்கு ஏற்படும் விரக்தியைப் பயன்படுத்துவதாய் அமைந்திருக்கிறது.

Advertisment

பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவைகளை சமாளிக்க மத்திய அரசு தவறினாலும், டெல்லியில் மோடியின் புகழ் சரியவில்லை. பிரதம மந்திரி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து முதல் ராம் மந்திர் வரை அவரின் தைரியமான நடவடிக்கைகளை ​​வாக்காளர்கள் பாராட்டுகிறார்கள். இருப்பினும், ஒரு மாநில அரசை தேர்ந்தெடுக்கும் போது தேசிய பிரச்சினைகளை விட உள்ளூர் பிரச்சினைகளுக்கு டெல்லி மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

“மோடி ஜி மத்திய அரசில் தலைமை வகுக்கிறார்; கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நாட்டைப் பாதுகாக்க  (அதிக வாக்குகளுடன்) அவரை மீண்டும் தேர்ந்தெடுத்தோம். ஆனால், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிக்காக அவரை இந்த தேர்தலில் தேர்வு செய்வோம்” என்று துக்ளகாபாத்தில் வசிக்கும் அமித் குமார் தே கூறினார்.

தேசத்தைப் பொறுத்தவரை, அது மோடி ஜி. ஆனால் இது மாநிலத் தேர்தல். நாங்கள் பாஜகவுக்கு வாக்களித்தாலும், மோடி ஜி டெல்லி முதல்வராக இருக்க முடியாது, என்று பாஜகவின் தீவிர வாக்காளர் பர்விந்தர் வர்மா ஒப்புக் கொண்டார்.

இந்த காரணங்களால் தான் ஷாஹீன் பாக் சுற்றி அதன் பிரச்சாரத்தை மையப்படுத்தியுள்ளது பாஜக. பொதுவாகவே, தற்போதைய அரசாங்கத்தின் தோல்விகளை திறம்பட எடுத்துக்காட்டுகின்ற ஒரு கட்சியாக பாஜக இல்லை. மேலும், ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள குறைப்பாடுகள்  வாக்காளர்களிடம் எதிரொலிப்பதில்லை என்பதை பாஜக உணர்ந்ததாகத் தெரிகிறது. இதனால் தான் பிரதமர் மோடி முதல் உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை  அவர்களின் தேர்தல் உரைகளில் ஷாஹீன் பாக்கினை குறிப்பிடுகின்றனர் .

Explained : இலங்கை தேசிய கீதத்தை ஏன் தமிழில் ஒலிக்க அனுமதிக்கவில்லை?

தேர்தல் வாக்குகள் தவிர, ஷாஹீன் பாக் மீதான விமர்சனம் பலவற்றைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. டெல்லியில் வசிக்கும் சில மக்கள், ஷாஹீன் பாக்கில் நடக்கும் எதிர்ப்பு தேவையற்றது என்றும் அச்சுறுத்தல் என்றும் கருதுகின்றனர். எனவே, இந்த போராட்டம் ஆம் ஆத்மி கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டதாக பாஜகவின் கூற்றுகளையும் சிலர் நம்புகின்றனர்.

ஷாஹீன் பாக் இல்லாதிருந்தால், அது கெஜ்ரிவாலுக்கு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்று அசாத் என்பவர் தெரிவித்தார். "உங்கள் வீட்டிற்கு முன்னால் தர்ணாவில் உட்கார்ந்து, உங்கள் வீட்டிற்கு வருபவர்களைத் தடுப்பதை நீங்கள் பாராட்டுவீர்களா? என்று போராடும் மக்களை பார்த்து அவர் கேட்கின்றனர்.

50 நாட்களைக் கடந்த இந்த போராட்டம் அவர்களின் வாழ்க்கை, வருமானம் மற்றும் மன அமைதியை மோசமாக பாதித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அசாத் மேலும்  கூறுகையில், அதிகாரிகள் அவர்களைக் கடுமையாகக் கையாள வேண்டும், எங்களுக்கு ஒரு யோகி ஜி (ஆதித்யநாத்) போன்ற முதல்வர் இருக்க வேண்டும். அப்போதுதான் அது கட்டுப்படுத்தப்படும் என்றார்.

மருத்துவர் அமித் குமார், ஷாஹீன் பாக் போராட்டம் டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் தன்மையை மாற்றியுள்ளதாகவும்,  போராட்டத்தில் அமர்ந்திருக்கும் பெண்களுடன் அரசாங்கம் கலந்துரையாடியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ராமர் கோவில் அறக்கட்டளைக்கு தலித் உட்பட 15 அறங்காவலர்கள் - அமித் ஷா

வால்மீகி மந்திர் அருகே இருக்கும் காலனியில் வசிப்பவர்கள் , இந்த தேர்தலை ஆம் ஆத்மிக்கும்/காங்கிரஸுக்கும் நடக்கும் யுத்தமாக பார்க்கின்றனர். மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் இந்த பகுதிகளில் கொஞ்சம் செல்வாக்கு மிகுந்தவராக கருதப்படுகிறார்.

மோடி ஜி எங்களுக்கு என்ன செய்தார்? சஃபாய் கர்மசாரிகளான எங்களுக்கு  கெஜ்ரிவால் நிறைய செய்துள்ளார். அவர் எங்களுக்கு நல்ல பள்ளிகள், கிளினிக்குகள் மற்றும் கழிவுநீர் பாதைகளை கட்டிக் கொடுத்துள்ளார். ஏழைகளை கவனித்து வருகிறார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வர இன்னும் பல விஷயங்கள் உள்ளன, ”என்றார் கிஷன்.

“கெஜ்ரிவால் ஒரு ஆம் ஆத்மி. அவரது மகள் குர்கானில் வேலை செய்கிறாள், பஸ்ஸில் தான் பயணிக்கின்றார் என்று நான் கேள்விப்பட்டேன். அவர் எங்கள் மின் கட்டணங்களை கணிசமாக குறைத்துள்ளார். முதன்முறையாக, ஒருவர் ஏழைகளை கவனித்து வருகிறார், ”என்று மற்றொரு துப்புரவாளரான கிரண் கூறினார்.

ஆனால்,  மஹிந்தர் குமார் என்பவர் கிரணின் கருத்துக்கு  உடன்படவில்லை: “கெஜ்ரிவால் விளக்குமாரை தனது அடையாளமாகப் பயன்படுத்தினார், ஆனால் அவர் போதுமானதாக செய்யவில்லை. எனவே முழு என்.டி.எம்.சி துப்புரவு ஊழியர்களும் காங்கிரஸுடன் நிற்பார்கள் என்று தெரிவித்தார்.

கிரண் மற்றும் மஹிந்தர் குமார் இருவரும் பாஜகவின் "வகுப்புவாத அரசியலை" நிராகரித்தனர். 370 வது பிரிவை ரத்து செய்து ராம் கோயிலுக்கு வழி வகுத்ததற்காக மோடியை நான் மதிக்கிறேன். ஆனால் கட்சி மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது, ”என்று கூறிகின்றனர்.

இரண்டு வீடுகளுக்கு அப்பால் இருக்கும் மாயாதேவி " பாகக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை" என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும்,  விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment