Advertisment

காய்ச்சல், தொண்டை வலி - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை

அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்வதாக இருந்த சந்திப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காய்ச்சல், தொண்டை வலி - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டிருப்பதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், நாளை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தினமும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு நேற்று திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

குருவாயூர், சபரி மலை கோவில்களில் வழிபாடு : விதிமுறைகளை வெளியிட்டது கேரளா

இது குறித்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய்சிங் கூறுகையில், முதல்வர் கெஜ்ரிவாலுக்குக் காய்ச்சலும், வறட்டு இருமலும் ஏற்பட்டிருக்கிறது. அதனால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாளை(ஜூன்9) அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்வதாக இருந்த சந்திப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய தலைநகரில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 28,000 ஐத் தாண்டியது, 1,282 புதிய நோய்த் தொற்றுகளுடன் , இறப்பு எண்ணிக்கை 812 ஆக உயர்ந்திருப்பதாக டெல்லி அரசு வெளியிட்ட சுகாதாரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

சுகாதார அறிக்கை படி, டெல்லியில் மொத்தம் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,282 புதிய பாதிப்புகளுடன், 28,936 ஆக வைரஸ் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. ஜூன் 6 ஆம் தேதி மொத்தம் 51 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுடன் மிக நீண்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இந்தியா; எப்போது முடிவுக்கு வரும் எல்லை பிரச்சனை?

மொத்தம் 17,125 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் 10,999 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய தலைநகரில் இன்று வரை மொத்தம் 2,510,915 கோவிட் -19 சோதனைகள் நடத்தப்பட்டன. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 12,213 ஆக இருந்தது. 237 நோயாளிகள் வென்டிலேட்டர்களில் அல்லது ஐ.சி.யுவில் உள்ளனர். கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 169 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment