Advertisment

டெல்லி ரகசியம்: கவலையில் காங்கிரஸ் மேலிடம்… பஞ்சாப்பில் 2 தலைவர்கள் சுழன்று சுழன்று பிரச்சாரம்!

பஞ்சாப்பின் கள நிலவரங்கள் காங்கிரஸூக்கு சாதகமாக இல்லாததால், கட்சி தலைமை இரண்டு முக்கிய தலைவர்களை கடந்த 2 நாள்களால் தேர்தல் பரப்புரையில் களமிறக்கியுள்ளது

author-image
WebDesk
New Update
டெல்லி ரகசியம்: கவலையில் காங்கிரஸ் மேலிடம்… பஞ்சாப்பில் 2 தலைவர்கள் சுழன்று சுழன்று பிரச்சாரம்!

உத்தரகாண்ட், கோவாவில் தனி பெரும் கட்சியாக வெற்றிப்பெறுவோம் என காங்கிரஸ் நம்பிக்கையுடன் இருக்கும் நிலையில், பஞ்சாப்பில் சிறிது கலக்கம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் கிடைக்கும் தகவல்கள் காங்கிரஸூக்கு சாதகமாக இல்லாததால், கட்சி தலைமை இரண்டு முக்கிய தலைவர்களை கடந்த 2 நாள்களால் தேர்தல் பரப்புரையில் களமிறக்கியுள்ளது. ஃபதேகர் சாஹிப்பில் ராகுல் உரையாற்றும் அதே வேளையில், பிரியங்கா லூதியானா மற்றும் பதான்கோட்டில் பரப்புரையில் ஈடுபடுகிறார். ஆம் ஆத்மி முன்னோக்கி செல்வதாக உணர்வதால், காங்கிரல் அந்த கட்சியின் மீதும் தேர்தல் பரப்புரையில் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

Advertisment

ஆபீஸ் டைமிங் முக்கியம்

டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்களில் வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆகும். இதில், மதியம் 1 மணியளவில் அரை மணி நேரம் மதிய உணவு இடைவேளிக்கு எடுத்துக்கொள்ளலாம். இந்த விதிமுறை தெற்கு டெல்லியில் உள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT)-க்கும் பொருந்தும்.

ஆனால், மதிய உணவு இடைவெளிக்கு பிறகு, ஆபீஸ் வளாகங்கள் வெறிச்சோடி காணப்படுவதாகவும், அதிகாரிகள் இருக்கையில் இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஒதுக்கப்பட்ட மதிய உணவு இடைவேளி நேரத்தை காட்டிலும் அதிகளவில் எடுப்பதாக தெரிந்தது. இது NCERT நிர்வாகம் சுற்றிரிக்கை சுற்றறிக்கையை வெளியிட நிர்பந்தித்தது. அதிகாரிகளின் இந்த போக்கு மத்திய சிவில் சர்வீஸ் (நடத்தை) விதிகள் 1964க்கு எதிரானது என்பதை நினைவூட்டப்பட்டது.

மீண்டும் பழைய நிலை

இந்தியாவின் முதன்மையான பாதுகாப்புத் துறை கண்காட்சி DefExpo அடுத்த மாதம் காந்திநகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வரை, ஒமிக்ரானால் கண்காட்சி நடைபெறுமா என்கிற கேள்வி இருந்தது. தற்போது, பரவல் குறைந்ததால், இது உலகின் மிகப்பெரிய பாதுகாப்புத் துறை நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.

கடந்தாண்டு, 2ஆம் அலைக்குப் பிறகு உடனடியாக நடத்தப்பட்ட முதல் உலகளாவிய நிகழ்ச்சியாக ஏரோ ஷோ இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Punjab Rahul Gandhi Congress Assembly Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment