Advertisment

ஒரே நாளில் 8 கொரோனா தொற்று மரணம்; டெல்லியை கவலை அடைய வைக்கும் ஒமிக்ரான்

கோவிட் தொற்று உள்ளவர்கள் ஆக்சிஜன் அளவைக் கண்காணித்து, அவர்களின் செறிவு 93க்குக் குறைவாக இருந்தால் மருத்துவமனைகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

author-image
WebDesk
New Update
ஒரே நாளில் 8 கொரோனா தொற்று மரணம்; டெல்லியை கவலை அடைய வைக்கும் ஒமிக்ரான்

Mallica Joshi 

Advertisment

Delhi daily Covid cases double : கடந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று மரணங்களைக் காட்டிலும் ஒரே நாளில் அதிகப்படியான மரணங்களை பதிவு செய்துள்ளது டெல்லி. பெரும்பாலான கொரோனா தொற்று மரணங்கள் ஒமிக்ரான் வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூத்த சுகாதாரத்துறை அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, கடந்த 24 மணி நேரத்தில் இறந்த 8 நபர்களில் 7 பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என்றும், அவர்கள் அனைவருக்கும் இணை நோய் இருந்தது என்றும் கூறியுள்ளார். இறந்த நபர்களில் 3 பேர் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு நேர ஊரடங்கு… வழிபாட்டு தலங்களுக்கு தடை… தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

இறந்து போன 8 நபர்களில் 3 பேர் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள். ஆனால் அவர்களிடம் இணை நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. இருவர் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள். வயது மூப்பின் காரணமாக அவர்களுக்கு பிரச்சனைகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 59 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு க்ரோனிக் நோய் இருந்தது. மற்ற அனைவரும் 60 முதல் 75 வயதை சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

காசியாபாத்தில் பதிவான 9வது மரணம் ஒரு குழந்தையின் மரணம். விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

செவ்வாய் கிழமை அன்று 5481 பேருக்கு தொற்று ஏற்பட்டு பாசிடிவ் விகிதம் 8.37% ஆக இருந்த நிலையில் புதன்கிழமை அன்று 10,665 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பாசிடிவ் விகிதம் 11.88% ஆக அதிகரித்தது என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது.

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்ட டெல்லி அரசு தங்களின் 9 அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 1000 படுக்கை வசதிகளை இணைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது என்று சுகாதாரத்துறை துணை செயலாளர் அஜய் பிஸ்த் கூறியுள்ளார்.

த்வாரகாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஏற்கனவே இருக்கும் 1500 படுக்கைகளுடன் கூடுதல் படுக்கைகள் இணைக்கப்படும். லோக் நாயக் மற்றும் ஜி.டி.பி. மருத்துவமனையில் 750 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா இரண்டாம் தொற்றின் போது இந்திரா காஎந்தி மருத்துவமனை கொரோனா தொற்று நோயாளிகளுக்காக இயக்கப்பட்டது.

மாநில சுகாதாரத்துறை அறிவிப்பின் படி 531 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 782 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 168-ல் இருந்து 140 ஆக குறைந்துள்ளது. மேலும் வெண்டிலேட்டர் உதவி தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 14-ல் இருந்து 22-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக 28 பேர் ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தனர். செப்டம்பர் மாதத்தில் அது 5-ஆக குறைந்தது. அக்டோபரில் 4 ஆகவும், நவம்பரில் 7-ஆகவும் டிசம்பரில் 9 ஆகவும் பதிவானது. தற்போது ஜனவரி மாதத்தின் முதல் 4 நாட்களிலேயே 13 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முதல் ஒமிக்ரான் மரணம் பதிவு

அறிகுறிகள் அற்று/ குறைந்த அளவு அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க வேண்டியது தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் சுகாதாரத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது. கடந்த அலையை போன்று இந்த ஆண்டும் சில நபர்கள் 90 அல்லது 80 என்ற ஆக்ஸிஜன் செறிவுடன் வருகின்றனர். அவர்களுக்கு வேறு எந்த தீவிரமான அறிகுறிகளும் இல்லை மற்றும் மூச்சுத்திணறல் இல்லை. மருத்துவமனைகளுக்குச் செல்லும் நேரத்தில், அவர்கள் கடுமையான சுவாசக் கோளாறுக்கு ஆளாகிறார்கள். கோவிட் தொற்று உள்ளவர்கள் ஆக்சிஜன் அளவைக் கண்காணித்து, அவர்களின் செறிவு 93க்குக் குறைவாக இருந்தால் மருத்துவமனைகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Virus Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment