Advertisment

நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க வேண்டாம் - டெல்லி போலீசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

Delhi violence : ஆம்புலன்ஸ்களை வன்முறையாளர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கெஞ்சாத குறையாக கேட்டநிலையில், அவர்கள் அனுமதித்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
delhi hc, delhi violence, injured at al hind hospital, jaffrabad, mustafabad violence, delhi news, indian express news,

delhi hc, delhi violence, injured at al hind hospital, jaffrabad, mustafabad violence, delhi news, indian express news

Pritam Pal Singh

Advertisment

தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அருகில் உள்ள அல் ஹிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனை, வன்முறை நிகழும் பகுதிக்கு அருகில் உள்ளதால், அங்கிருந்தவர்களை உடனே வெளியேற்றுமாறு டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை, டெல்லியில் மீண்டும் பெரும் வன்முறை மற்றும் போராட்டமாக உருவெடுத்தது. பல வாகனங்கள் தீக்கீரையாக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைகளில் சிக்கி இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியின் வடகிழக்கு பகுதியில் அதிகளவில் வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள அல் இந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, படுகாயமடைந்தவர்களை அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸ்களை வன்முறையாளர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கெஞ்சாத குறையாக கேட்டநிலையில், அவர்கள் அனுமதித்துள்ளனர்.

 

publive-image டில்லி சந்த் பாக் பகுதியில் தீக்கு இரையான வாகனங்கள்..

ஆவணப்பட இயக்குனர் ராகுல் ராய், டாக்டர்கள் அடங்கிய குழு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. டில்லியில் வன்முறை அதிகம் நடக்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதை வலியுறுத்தி வழக்கு தாக்கல் செய்தனர். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் பேரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நீதிபதிகள் எஸ். முரளிதர், மற்றும் நீதிபதி ஏ ஜே பம்பானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆம்புலன்ஸ்களை மறித்த விவகாரம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அல் இந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற உத்தரவிட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

டெல்லி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது, இந்த உத்தரவு வந்தவுடன். அந்த மருத்துவமனையில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளோம். மற்றவர்களையும் மாற்றி வருகிறோம் என்று டெல்லி கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் ராஜ்னீஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் மறு விசாரணை, புதன் மதியம் நடைபெற உள்ளது.இதில் மேலும் பல முக்கிய உத்தரவுகள் வெளியாகும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு வழக்கு : தலைநகர் டெல்லியில் வன்முறையை தூணடும்விதமாக பேசிய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அனுராக் தாகூர், பர்வேஷ் ஷாகிப் சிங், கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவு வரும் வரை காத்திருக்க வேண்டாம். டெல்லி போலீஸ் இந்த விவகாரத்தில் சொந்தமாக செயல்படுங்கள் என்று டில்லி போலீசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

டெல்லி வன்முறை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு (ஆங்கிலத்தில் படிக்க)

Delhi Delhi High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment