Advertisment

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா? சிஏஏ போராட்டத்தை தூண்டியதாக சிக்கிய தம்பதியிடம் விசாரணை

ஐஎஸ் அமைப்பின் கோரசன் பகுதியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தம்பதியினரை தென்கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள ஜாமியா நகரில் டெல்லி காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தடுத்துவைத்து விசாரித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
islamic state couple arrested, இஸ்லாமிக் ஸ்டேட், ஐஎஸ் அமைப்பு, கோரசன் ஐஎஸ் அமைப்பு, டெல்லி தம்பதியிடம் விசாரணை, சிஏஏ போராட்டத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு, delhi islamic state, isis link couple detained from jamia, சிஏஏ போராட்டம், delhi couple anti-caa protests, delhi couple is links caa protests, delhi jamia caa protests, delhi news, Tamil indian express

islamic state couple arrested, இஸ்லாமிக் ஸ்டேட், ஐஎஸ் அமைப்பு, கோரசன் ஐஎஸ் அமைப்பு, டெல்லி தம்பதியிடம் விசாரணை, சிஏஏ போராட்டத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு, delhi islamic state, isis link couple detained from jamia, சிஏஏ போராட்டம், delhi couple anti-caa protests, delhi couple is links caa protests, delhi jamia caa protests, delhi news, Tamil indian express

கோரசன் பகுதி ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தம்பதியினரை தென்கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள ஜாமியா நகரில் டெல்லி காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தடுத்துவைத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

டெல்லியில் ஜஹான்ஜீப் சமி மற்றும் மனைவி ஹினா பஷீர் பேக் என அடையாளம் காணப்பட்டுள்ள தம்பதியினர் டெல்லியில் குடியுரிமை எதிர்ப்பு போராட்டங்களைத் தூண்டியதாகவும், தற்போதைய சூழ்நிலையை மேலும் அதிகரிக்க முயற்சிப்பதாகவும் டெல்லி துணை போலீஸ் கமிஷனர் (டி.சி.பி) பிரமோத் சிங் குஷ்வாஹா கூறியுள்ளார்.

இது குறித்து “ஜஹான்ஜீப் சமி மற்றும் ஹினா பஷீர் பேக் என அடையாளம் காணப்பட்டுள்ள ட கணவன்-மனைவி இருவரும் இப்பகுதியில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டினார்கள்” என்று டி.சி.பி (சிறப்பு செல்) பிரமோத் குஷ்வாஹா கூறினார்.

இஸ்லாமிய அரசு ஆஃப்கானிஸ்தான் கோரசன் மாகாணத்தை தளமாகக் கொண்ட ஐ.எஸ் அமைப்பு ஆகும்.

உளவுத்துறை மூலம் தகவல்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஜோடி அதிகாலையில் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பல விசாரணை முகமை அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய தலைநகர் டெல்லியின் ஓக்லாவில் உள்ள ஜாமியா நகர் அருகே ஷாஹீன் பாகில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்தது. 2019 டிசம்பர் 15-ம் தேதி இரவு ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த போராட்டம் தொடங்கியது.

பாகிஸ்தான், பங்ளாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து டிசம்பர் 31, 2014 வரை இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் ஆகியோருக்கு சிஏஏஎ குடியுரிமை அளிக்கிறது. இந்த திருத்தச் சட்டம் முஸ்லிம்களை விலக்குகிறது என்று நாடு முழுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் போராட்டங்களுக்கு காரணமானது. தேசிய தலைநகர் டெல்லியில், சீலாம்பூர், ஜாமியா நகர், மத்தியா மஹால், முஸ்தபாபாத், ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. மேலும், இதனைத் தொடர்ந்து, அண்மையில் வடகிழக்கு டெல்லி பகுதிகளில் வன்முறை நடைபெற்றது.

பிப்ரவரி 23 நள்ளிரவில் வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகளில் 53-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மஜ்பூர், கோகுல்புரி, பஜான்புரா, ஜாஃப்ராபாத், சந்த்பாக் மற்றும் குரேஜி காஸ் பகுதிகளில் தடிகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் ஆண்கள் கும்பலாக முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் எரித்தனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோர் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Delhi Isis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment