வெளியூர் செல்பவரா நீங்கள்? ஐஆர்சிடிசி- ல் டிக்கெட் புக் செய்தால் 10% ஆஃபர்!

பேடிஎம், மோபிகுவிக் போன்ற டிஜிட்டல் வாலெட்கள் மூலம் பணம் செலுத்தும் போது கிடைக்கும்

ரயில் பயணம் செய்பவர்கள்  ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட்களைப் புக் செய்தால் அவர்கள் 10 சதவீதம் வரை ஆஃபர் பெற முடியும்.

ஐஆர்சிடிசி:

இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் நாள்தோறும் 2கோடிக்கும் அதிகமான் பயணிகள் செய்து வருகின்றன. இந்த ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு சேவைக்காக தொடங்கப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் தற்போது புதுபிக்கப்பட்டு பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டிக்கெட் முன்பதிவு தொடங்கி, வெயிட்டிங் லிஸ்ட் நிலை, இருக்கை அல்லது படுக்கை வசதி நிலை, உணவு ஆர்டர்,கால் டாக்ஸி வசதி என பல வசதிகளுடன் புதுபிக்கப்பட்டுள்ள நிலையில்  பயணிகளுக்கு மற்றொரு  மகிழ்ச்சி .

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட்களைப் புக் செய்தால் 10 சதவீதம் ஆஃபர்.  இந்தச் சலுகைகள் எல்லாம் பேடிஎம், மோபிகுவிக் போன்ற டிஜிட்டல் வாலெட்கள் மூலம் பணம் செலுத்தும் போது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோபிகுவிக் வாலெட்டில் விழா காலச் சலுகையாக ரயில் டிக்கெட்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த  இணையதளம் மற்றும் செயலிகளில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது பணம் செலுத்த மோபிகுவிக் செயலியினைத் தேர்வு செய்யும் போது இந்தச் சலுகைகளைப் பெற முடியும்.

இந்தத் தள்ளுபடியானது மோபிகுவிக்கின் சூப்பர்கேஷில் சேர்ந்து விடும். இதனை அடுத்த முறை டிக்கெட் புக் செய்யும் போது அல்லது பிற பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close