Advertisment

திஷா ரவி வழக்கு: முன்னாள் நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

திஷா ரவி கைது குறித்து முன்னாள் நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் சிபிஐ தலைவர் நாகேஸ்வரரா உள்ளிட்ட ஒரு குழுவினர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Disha Ravi, Disha ravi tool kit case, disha ravi arrest, delhi police, திஷா ரவி, திஷா ரவி வழக்கு, விவசாயிகள் போராட்டம், farmers protest, Toolkit case, Great Thunberg, டூல் கிட் வழக்கு, கிரேட்டா தன்பெர்க், former judges write letter to president

திஷா ரவி கைது குறித்து முன்னாள் நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் சிபிஐ தலைவர் நாகேஸ்வரரா உள்ளிட்ட ஒரு குழுவினர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், “அவருடைய அப்பாவித்தனத்தை நிரூபிக்க அவரது வயது முன்னிலைப்படுத்தப்படுவது ஆச்சரியமாக உள்ளது. இதில் வயது முக்கியமில்லை என்றும் இது இயல்பாகவே தேச விரோத செயல்களின் தொடர் என்பது முக்கியமானது என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.

Advertisment

இந்த கடிதத்தில், உயர் நீதிமன்றத்தின் 3 முன்னாள் தலைமை நீதிபதிகள், 17 முன்னாள் நீதிபதிகள், 18 முன்னாள் டி.ஜி.பி.க்கள், முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர், மத்திய விஜிலென்ஸ் கமிஷனின் முன்னாள் உறுப்பினர், உள்துறை அமைச்சகம் மற்றும் ஐபி உடன் பணிபுரிந்த இரண்டு முன்னாள் சிறப்பு செயலாளர்கள் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பின் முன்னாள் சிறப்பு தலைமை இயக்குனர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

“சில அறிவுஜீவிகள் திஷாவைக் கைதுசெய்த சம்பவம் அடிப்படை பேச்சு சுதந்திரத்திர உரிமையை மீறுவதாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். டெல்லி காவல்துறை அவர்களின் சட்ட ரீதியான கடமையை மட்டுமே நிறைவேற்றுகிறார்கள்” என்று அவர்கள் கூறினர்.

“டெல்லி காவல்துறையினர் தங்கள் விசாரணையை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் எந்தவொரு விருப்பும், வற்புறுத்தலும் இன்றி செய்ய முடிகிறது என்பதையும், தங்களை பயன்படுத்த அனுமதித்த அந்த வன்முறை சக்திகள் அனைத்தையும் பதிவு செய்யவும் இந்த குழு மத்திய அரசை வலியுறுத்தியது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பிரிவினைவாத சக்திகள், அராஜகத்தை பரப்பவும், தங்கள் சுயநல நோக்கங்களுக்காக சேவை செய்ய தேச விரோத சக்திகளுக்கு அறிவுஜீவி முகமூடியை வழங்கவும் முயற்சிக்கின்றன.” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பிப்ரவரி 18 தேதியிடப்பட்ட இந்த கடிதத்தில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி வி.எஸ்.கோக்ஜே, டெல்லி மற்றும் பாட்னா உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பெர்மோத் கோஹ்லி மற்றும் முன்னாள் குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி எஸ்.எம். சோனி மற்றும் பல மாநிலங்களின் முன்னாள் டிஜிபிக்கள் மற்றும் முன்னாள் சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் உள்பட மொத்தம் 47 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

டெல்லி உயர் நீதிமன்றம் திஷா ரவிக்கு எதிராக ஏதேனும் ஆதாரம் உள்ளதா அல்லது அவர்கள் ஏதேனும் அனுமானங்களையும் யூகங்களையும் வரைய வேண்டுமா என்று போலீசாரிடம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.

"டூல்கிட் ஆவணங்களைத் தயாரித்த குழுவில் உறுப்பினராக இருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அது பல்வேறு ஊடக நிறுவனங்கள், நிறுவப்பட்ட உண்மைச் சரிபார்ப்பவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற குழுக்கள் சர்வதேச மன்றம் மற்றும் டெல்லியின் புறநகரில் போராட்டம் நடத்தும் சில விவசாயிகள் குழுக்களைப் பயன்படுத்தி சமூக விரோத மற்றும் தேச விரோத செயல்களைத் தூண்டுகிறது. 1984 ம் ஆண்டு பிரபலமில்லாத ஒரு அறிக்கையைப் போலவே இந்தியாவில் வன்முறையைத் தூண்டும் முயற்சி நடந்துள்ளது - ஒரு பெரிய மரம் விழுந்தால் பூமி நடுங்குகிறது, அதனால் அழிவு ஏற்படும்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment