Advertisment

விவசாய போராட்ட 'டூல்கிட்' சதி வழக்கு: பெங்களூரைச் சேர்ந்த திஷாரவி கைது

Delhi Police arrested Disha Ravi on farmer protests toolkit case :

author-image
WebDesk
New Update
விவசாய போராட்ட 'டூல்கிட்' சதி வழக்கு: பெங்களூரைச் சேர்ந்த திஷாரவி கைது

இந்திய விவசாயிகள் போராட்டத்தின் போது கிரெட்டா தன்பர்க்வின் ட்வீட்டர் பதிவை பகிரிந்தது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த 21 வயதான காலநிலை மாற்றம் செயற்பாட்டாளர் திஷா ரவியை டெல்லி காவல்துறை கைது செய்தது.

Advertisment

இந்த கைது  நடவடிக்கை தொடர்பாக டெல்லி காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,"போராட்டங்களுக்கு வழிகாட்டி கையேடு ஆவணத்தை  ( டூல்கிட்) உருவாக்கியதிலும், அதை பரப்பியதிலும் முக்கிய சதிகாரராக செயல்பட்டார்.  Poetic Justice Foundation என்ற காலிஸ்தான் ஆதரவு இயக்கத்துடன் இணைந்து இந்திய அரசுக்கு எதிராக அதிருப்தியை பரப்பினர்" என்று தெரிவித்தது.

மேலும், "டெல்லி காவல்துறை சைபர் பிரிவால் (சைபாட்)  கைது செய்யப்பட்ட திஷா ரவி, இந்த டூல்கிட்டின் எடிட்டர்களில் ஒருவர். இந்த 'டூல்கிட்' ஆவணத்தை உருவாக்க வாட்ஸ்அப் குழுமத்தைத் தொடங்கியுள்ளார். ஆவணத்தை வடிவமைக்க ஒத்துழைப்பு வழங்கினார். இந்த செயல்பாட்டில், இந்திய அரசுக்கு எதிராக அதிருப்தியை பரப்ப Poetic Justice Foundation என்ற  அறக்கட்டையுடன் அனைவரும் இனைந்து  பணியாற்றினர் ”என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவியை நேற்று கைது செய்த டெல்லி காவல்துறை, பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி ரிமான்ட் செய்தது.

டெல்லி காவல்துறையின் கூடுதல் செய்தித் தொடர்பாளர்  அனில் மிட்டல் கூறுகையில், “திஷா ரவி 5 நாட்கள் போலீஸ் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். வேளான் சட்ட "டூல்கிட்" சதித்திட்டம் தொடர்பாக சிறப்பு காவல் பிரிவு விசாரித்து வருகிறது. டூல்கிட்" எழுதி, பரப்பியதல்  திஷா முக்கிய பங்கு வகித்தார் என்பது கண்டறியப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

மவுண்ட் கார்மல் கல்லூரியில் பட்டம் பெற்ற திஷா ரவி, காலநிலை மாற்றம் தொடர்பாக 'Fridays for Future India' என்ற விழிப்புணர்வு அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர்.

பருவநிலை காக்க வெள்ளிக் கிழமைகளில் பள்ளிகள்  வேலைநிறுத்தம் என்ற நூதனப் போராட்டம் மூலம்    காலநிலை மாற்றத்திற்கு எதிராக அரசியல்வாதிகளை செயல்பட வைப்பது Fridays for Future இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

 

 

டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கைகக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும், சுற்றுச்சூழல் இயக்கங்களும் சமூக ஊடங்களில் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Farmers Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment