Advertisment

கடும் கட்டுப்பாடுகளுடன் மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடக்கம் - மத்திய அரசு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Domestic flight services to resume from Monday flights ticket online

Domestic flight services to resume from Monday flights ticket online

Domestic Flights Resume in India: இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்குகின்றன. உள்நாட்டு விமான சேவைகள் திங்கள்கிழமை முதல் "திருத்தப்பட்ட விதிகளோடு" மீண்டும் தொடங்கப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Advertisment

2020 மே 25 திங்கட்கிழமை முதல் உள்நாட்டு சிவில் விமானப் பணிகள்திருத்தப்பட்ட விதிமுறைகள் அடிப்படையில் மீண்டும் தொடங்கப்படும். அனைத்து விமான நிலையங்களும் விமான நிறுவனங்களும் மே 25 முதல் நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் இயக்கத்திற்கான எஸ்ஓபிகளும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் தனித்தனியாக வழங்கப்படுகின்றன" என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ட்வீட் செய்துள்ளார்.

20, 2020

மார்ச் 25 ஆம் தேதி தொடங்கிய லாக் டவுன் முதல் அனைத்து உள்நாட்டு பயணிகள் விமான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சரக்கு விமானங்கள், மருத்துவ உதவிக்கான விமானங்கள் மற்றும் விமான ஒழுங்குமுறை டிஜிசிஏ ஒப்புதல்பெற்ற சிறப்பு விமானங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டன.

பள்ளி தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு : ரிஸ்க் எடுக்க விரும்பாத கேரளா!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பின் போது மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் கவலை தெரிவித்திருந்த போதிலும் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தவிர, சில மாநில அரசுகள் கோவிட் -19 ஆல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து மக்களை தங்கள் எல்லைகளுக்குள் நுழைய அனுமதிப்பதில் அச்சமடைந்துள்ளன.

விமானங்கள் இயக்க பல புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையங்களில் கட்டாய சமூக விலகல், குறைந்தபட்ச தொடர்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு நடைமுறைகள் விதத்தில் திருத்தங்கள், மாஸ்க்குகளின் பயன்பாடு மற்றும் பயணிகள், ஊழியர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை இதில் அடங்கும். விமான நிலையங்களில் நீண்ட வரிசைகள் மற்றும் காத்திருப்பு நேரங்கள் அதிகரிக்கும் பலவிதமான புதிய சுகாதார சோதனைகளும் நிறுவப்படலாம்.

இந்த மாத தொடக்கத்தில், நாடு முழுவதும் உள்ள விமான நிலைய மேலாளர்களுக்கும் இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) அனுப்பிய தகவலில், அனைத்து விமான நிலையங்களையும் விமான நடவடிக்கைகளை கையாள தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டது.

முடிவுக்கு வருமா இந்த நீண்ட பயணம் ? புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு புகைப்படத் தொகுப்பு

நிலையான இயக்க நடைமுறைகளின் தொகுப்பை வெளியிட்டு, AAI இன் செயல்பாட்டு இயக்குநரகம் கூறுகையில், "லாக் டவுன் காலம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதும், விமான நிலையங்கள் வரையறுக்கப்பட்ட உள்நாட்டு / சர்வதேச திட்டமிடப்பட்ட விமானங்களை பல்வேறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு 30 சதவீத பயணிகளுடன் தேவையான தனி நபர் இடைவெளி கடைபிடிக்கப்பட்டு சேவைகள் தொடங்கப்படும். முதல் கட்டமாக Tier-l மற்றும் Tier-II நகரங்களுக்கு மட்டும் விமானம் இயக்கப்படலாம்.

எந்தவொரு விமானத்தையும் எடுக்கும்போது விமானிகள் தங்கள் தொலைபேசிகளில் நிறுவுவதற்கு ஆரோக்யா சேது பயன்பாட்டை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு கவனித்து வருகிறது. "விமான அமைச்சகத்தில் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், தொலைபேசியில் ஆப் இல்லாத பயணிகள் தங்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று ஒரு அதிகாரி தெரிவித்திருப்பதாக பி.டி.ஐ மேற்கோளிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment