Advertisment

இந்தியாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - மெலனியா; புகைப்படங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதல் பெண்மணி மெலனியா டிரம்புடன் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளனர். நமஸ்தே டிரம்ப் நிகச்சி மற்றும் தாஜ்மஹால் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus outbreak US announces 2.9 million dollars

Coronavirus outbreak US announces 2.9 million dollars

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதல் பெண்மணி மெலனியா டிரம்புடன் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளனர். அவர்கள் திங்கள்கிழமை அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினர்.

Advertisment

publive-image

அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

publive-image

டிரம்ப் திங்கள்கிழமை தாஜ்மஹாலை பார்வையிட்டார். செவ்வாய்க்கிழ்மை டெல்லியின் ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

publive-image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் திங்கள்கிழமை சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர்.

publive-image

சபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப், மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஆசிரமத்தில் உள்ள காந்தி பயன்படுத்திய ராட்டையை சுழற்றினார்.

publive-image

அகமதாபாத்தின் மோடேரா ஸ்டேடியத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.

publive-image

மோடேரா மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் அகமதாபாத் மேயர் பிஜால் படேல், குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

publive-image

நமஸ்தே டிரம்ப்” நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது, அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக இருக்கும்” என்றார்.

publive-image

"உங்கள் நாட்டில் கடுமையான வறுமை அடுத்த 10 ஆண்டுகளில் அகற்றப்படும். இந்தியாவும் அமெரிக்காவும் இயல்பான மற்றும் நீடித்த நட்பைக் கொண்டுள்ளன. வற்புறுத்தலால் உயரும் தேசத்துக்கும், மக்களை விடுவிப்பதன் மூலம் உயரும் நாடுக்கும் வித்தியாசம் உள்ளது, அது இந்தியா ”என்று டிரம்ப் கூறினார்.

publive-image

பிரதமர் மோடி ஒரு சாதாரணமான டீ விற்பவராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் என்றும் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரிந்தார் என்றும் டிரம்ப் கூறினார். மேலும், இந்தியர்கள் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு என்று கூறினார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் ஜாவேத் ராஜா)

publive-image

டிரம்ப், முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரைக் கொண்ட ஒரு மாபெரும் விளம்பரப் பலகை, டிரம்ப் -மெலனியா தம்பதியை ‘காதல் நகரம் ஆக்ராவுக்கு இந்தியாவின் சிறந்த நண்பரை வரவேற்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் ஜாவேத் ராஜா)

publive-image

மோடேரா மைதானத்தில் பிரதமர் மோடி தனது உரையை முடித்தபோது, கூட்டத்தை நோக்கி ‘இந்தியா-அமெரிக்க நட்பை நீண்ட காலம் வாழ்க’ என்று முழக்கமிடச் செய்தார். (ஜாவேத் ராஜாவின் எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

publive-image

அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு ஆக்ரா சென்று தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.

Narendra Modi Donald Trump Taj Mahal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment