Advertisment

இந்தியாவில் சில வாரம் ஊரடங்கு தேவை: அமெரிக்க மருத்துவ ஆலோசகர்

ஆனால் நீங்கள் 6 மாத காலத்திற்கு ஊரடங்கு போட வேண்டியதில்லை. இந்த தொற்றை குறைக்க நீங்கள் இடைக்காலமாக ஊடரங்கினை பிறப்பிக்கலாம்.

author-image
WebDesk
New Update
Dr Anthony S Fauci on India’s Covid Crisis

Karishma Mehrotra

Advertisment

Dr Anthony S Fauci on India’s Covid Crisis : எந்த நாடும் முழு ஊரடங்கை விரும்புவதில்லை. ஆனால் அடுத்த சில வாரங்களுக்கு முழுமையான ஊரடங்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொற்றின் தாக்கத்தை குறைக்கும் என்று மருத்துவர் அந்தோனி எஸ். ஃபௌசி கூறியுள்ளார். உலகில் கொரோனா வைரஸ் தொடர்பாக பேசும் மிகவும் நம்பிக்கை வாய்ந்த குரலாக உள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, உடனடியாக, நீண்ட காலத்திற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது இந்த நம்பிக்கையற்ற கடினமான சூழலில் இருந்து வெளியேற உதவும் என்றார்.

பைடன் நிர்வாகத்தின் தலைமை மருத்துவ ஆலோசகர், 7 அமெரிக்க அதிபர்களுடன் பணியாற்றியுள்ள ஃபௌசி, மேரிலாண்டில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

இந்தியாவின் சூழலை பார்க்கும் போது, நீங்கள் இந்தியா அரசங்காத்தால் நியமிக்கப்பட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

இந்தியா கொரோனா காலத்தை எவ்வாறு கையாண்டது என்பது குறித்து விமர்சனம் எதையும் நான் முன்வைக்கவில்லை. ஏன் என்றால் அது அரசியலில் திருப்பங்களை ஏற்படுத்தும். நான் பொதுமக்கள் சுகாதாரம் குறித்து பேசும் நபர். அரசியல்வாதி அல்ல.

இந்தியா மிகவும் நம்பிக்கையற்ற சூழலில் உள்ளது. சி.என்.என். செய்தியின் ஒரு வீடியோவை பார்த்தேன். அது ஒரு நம்பிக்கையற்ற சூழலாகவே எனக்கு தெரிகிறது. இது போன்ற சூழலில் நீங்கள் இருக்கும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும்.

இந்தியா ஒரு நெருக்கடி குழுவை ஒன்றிணைத்து, விஷயங்களைச் சந்தித்து நடவடிக்கைகளை தொடங்குமா என்று எனக்குத் தெரியாது. தெருவில் உள்ள சிலர் தங்கள் தாய்மார்கள், தந்தையர், சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் ஆக்ஸிஜனை தேடுகிறார்கள். உண்மையில் எந்த அமைப்பும், எந்த மத்திய அமைப்பும் தங்களுக்காக இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

முதலில் அடுத்து என்ன செய்ய வேண்டும், இரண்டு வார காலத்திற்கு என்ன செய்ய வேண்டும், இந்த சூழலில் இருந்து தப்பிக்க நீண்ட காலத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்டங்கள் இதில் உள்ளது.

உதாரணமாக தடுப்பூசி. நிச்சயமாக தேவையான ஒன்று. ஆனால் அது தற்போது நிலவி வரும் பற்றாக்குறைகளை களையுமா? இல்லை. இன்று தடுப்பூசி போட்டுக் கொள்வது சில வாரங்கள் கழித்து நோய் தொற்று பரவாமல் இருப்பதை மட்டுமே உறுதி செய்யும். தற்போது மக்களை பாதுகாப்பது தான் முதன்மையானது. ஒரு அவசர குழு ஒன்றை உருவாக்கி திட்டம் மேற்கொண்டு எப்படி ஆக்ஸிஜன் முதல் இதர மருந்துகளை பெறுவது என்று யோசிக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பு நாடுகளை அணுக வேண்டும்.

மேலும் படிக்க : காற்றில் பறந்த நெறிமுறைகள்; கொரோனா மையங்களில் நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் உறவினர்கள்!

ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர்கள், மருந்துகள் போன்ற உதவிகளை அமெரிகக செய்வதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற நாடுகளையும் இந்தியாவிற்கு உதவ அழைத்துள்ளோம் ஏன் என்றால் கடந்த காலங்களில் இந்தியா மற்ற நாடுகளுக்கு இக்கட்டான சூழலில் உதவி உள்ளது. தற்போது இந்தியாவிற்கு தேவையான உடனடி உதவிகளை செய்யும் நேரம் இது. அடுத்தது இடைப்பட்ட நடவடிக்கை. சீனா என்ன செய்தது என்பதை நினைத்துக் கொள்ளுங்கல். ஒரு சில நாட்களில் மிகப்பெரிய அளவுகளில் கொரோனா அவசர சிகிச்சை மையங்களை உருவாக்கியது. அனைவரையும் அது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பலரும் மருத்துவமனை மற்றும் சிகிச்சைகளை தேடுகின்றனர் என்று தெரிந்துகொண்டேன். மருத்துவமனைகள் முதல் விசயம்.

இரண்டாவது பல்வேறு அரசு அமைப்புகளின் ஒத்துழைப்பு. ராணுவம் எங்கே? அதனால் உதவ முடியுமா? எங்கள் நாட்டில் தேசிய பாதுகாப்பு பணியாளர்களை நாங்கள் தடுப்பூசி விநியோகத்தில் ஈடுபடுத்தினோம். இவை இரண்டையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உடனடியாக மருத்துவமனைகளில் மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும். போர் காலங்களில் இது போன்ற மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. தற்போது அந்த வைரஸ் தான் எதிரி. இதனை நாம் போர்காலமாக கருத வேண்டும். மூன்றாவதாக எதிர்வரும் நீண்ட நாட்களுக்கானது. தடுப்பூசி. இந்தியா போன்ற நாட்டில் 2% பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளனர். இதனை துரிதப்படுத்த வேண்டும்.

இது போன்ற ஏதாவது ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி நினைக்கும் போது, இரண்டாவது அலை தீவிரம் குறித்து ஆச்சரியப்பட்டீர்களா? இதற்கு அவர்கள் தயாராக இருந்திருக்க வேண்டுமா? தவிர்க்கப்பட்டிருக்கலாமா?

நான் இந்திய அரசாங்கம் இதில் எப்படி செயல்பட்டது என்பது குறித்து நான் விமர்சிக்க விரும்பவில்லை.

விமர்சிக்காமல், பொதுவாக, உலகம் முழுவதும், ஆரம்ப அறிகுறிகள் இருந்தனவா?

இது அறிகுறிகள் அல்ல. இந்த வைரஸின் திறன் என்ன என்பதை காட்டுகிறது. இதனை இப்படியே விட்டுவிட்டால் அது மீண்டும் வெடிக்கும் என்கிறஹ்டு. அமெரிக்காவில் இது நடந்தது. நான் ஒரு அமெரிக்கராக உங்களிடம் பேசுகிறேன். உணமையில் அமெரிக்கா பணக்கார நாடு மேலும் கொரோனாவால் மோசமான பாதிப்பை அடைந்த நாடு. நாங்கள் சிறந்த முறையில் தயார் நிலையில் இருந்தோம் என்று நினைத்தோம் ஆனால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டோம். நீங்கள் பணக்காரரா என்பதையெல்லாம் வைரஸ் பார்ப்பதில்லை. அல்லது நீங்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளீர்கள் அல்லது வளர்ச்சி அடைந்துள்ளீர்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை. இதன் செயல்திறனை நீங்கள் புறக்கணித்தால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். ஒருவேளை அங்கீகரிக்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன், அந்த வெற்றி மிகவும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) இந்திய வகைகளின் மரபணு வரிசைப்படுத்தலுக்கு உதவுமாறு கேட்டுள்ளதா? சி.டி.சி மாதிரிகளைப் பெற்றுள்ளதா?

இந்த வைரஸ் மாதிரிகளுக்கு எதிராக பாதுகாப்பினை உருவாக்குகிறதா தடுப்பூசிகள் என்பதை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சில அறிக்கைகள் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று கூறியது. ஆனால் சில அறிவிப்புகள் அவ்வளவு உறுதியாக கூற முடியாது என்று அறிவித்தன. எனவே இந்தியாவுக்கு வெளியே மாதிரிகள் மற்றும் பொருட்களை பெற்று சிடி சிக்கு மற்றும் இங்கிலாந்தின் வெல்கம் டிரஸ்ட்டுக்கு அனுப்ப வேண்டும். உதவி செய்ய பல்வேறு குழுக்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. தடுப்பூசி மூலம் தூண்டப்படும் ஆன்டிபாடிகளுக்கு எதிராக வைரஸின் உணர்திறன் இருந்தால், வரிசைமுறை மற்றும் கண்காணிப்பு மற்றும் தீர்மானத்தை செய்வதன் மூலம் அவர்கள் உதவ முடியும்.

50/50 என்று தடுப்பூசிகள் திறந்த சந்தையில் வைக்கப்பட்டுள்ளன. இதன் விலை குறித்து ஆங்காங்கே விமர்சனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து உங்களின் பார்வை என்ன? மக்களின் நலன் குறித்து என்ன செய்வது சிறப்பாக அமையும்? தடுப்பூசி உற்பத்தையை எப்படி அதிகரிப்பது?

நீங்கள் பொருட்களைப் பெற வேண்டும். உலகில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் நீங்கள் ஒப்பந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இப்போது தடுப்பூசிகளை பல நிறுவனங்கள் கொண்டுள்ளன.ஒரு உறுதிப்பாட்டைப் பெற நீங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியா என்றால் என்ன, 1.4 பில்லியன் மக்கள்? நீங்கள் பெற வேண்டிய நிறைய தடுப்பூசிகள் உங்களிடம் உள்ளன, நான் பல வேறுபட்ட நிறுவனங்களுக்குச் சென்று ஒப்பந்த ஏற்பாடுகளைப் பெற முயற்சிப்பேன், இதன் மூலம் உங்களால் முடிந்தவரை விரைவாக தடுப்பூசிகளைப் பெற முடியும்.

சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து தடுப்பூசிகளை பெறுவது. தடுப்பூசிகள் அளவை அதிகமாக வைத்துக் கொள்வது இது தான் இப்போது செய்ய வேண்டுமா?

ஆம். மக்கள் தொகையில் 2% பேர் மட்டுமே தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். அது தான் நான் கேள்விப்பட்டேன். உண்மையான நிலை என்னவென்று தெரியவில்லை. அப்படியானால், இந்தியாவில் உள்ள மக்களைப் பாதுகாக்க நீங்கள் விரும்பினால், நீங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டும். தடுப்பூசிகளைப் பெறுவதற்கான ஒப்பந்த ஏற்பாட்டைச் செய்ய உங்களால் முடிந்தவரை பல நிறுவனங்களைப் பெறுவதில் உறுதியாக இருப்பேன். உலகிலேயே அதிக அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. இதுதான் விஷயம் - தடுப்பூசிகளை தயாரிக்க உங்கள் சொந்த திறன்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.

அமெரிக்காவில் கொரோனா சூழலை கையாண்ட விதம் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் எப்படி கையாளுவது? அமெரிக்க மாடலில் சில விசயங்கள் வேலை செய்யும். உங்கள் பார்வையில் இருக்கும் சவால்கள் என்ன?

தற்போது நீங்கள் உங்கள் நாட்டில் ஊரடங்கினை நீட்டிக்கலாம். இது மிகவும் முக்கியமானது என்று நினைக்கின்றேன். உடனடி நடவடிக்கைகள், இடைநிலை நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால நடவடிக்கைகளுக்கு என்ன தேவையோ அதனை நாம் செய்ய வேண்டும். ஆக்ஸிஜன் சப்ளை, மருந்துகள் மற்றும் பி.பி.இ. கிட்களை பெறுவது போன்றே இதுவும் உடனடியாக செய்யப்பட வேண்டிய ஒன்று.

கடந்த ஆண்டு சீனா இப்படி நாட்டை முடக்கியது. ஆனால் நீங்கள் 6 மாத காலத்திற்கு ஊரடங்கு போட வேண்டியதில்லை. இந்த தொற்றை குறைக்க நீங்கள் இடைக்காலமாக ஊடரங்கினை பிறப்பிக்கலாம். ஆறு மாதங்களுக்கு நீங்கள் அதைச் செய்யும்போது அது ஒரு பிரச்சனையாகும். ஆனால் நீங்கள் ஒரு சில வாரங்களுக்கு இதைச் செய்தால் பரவலில் இது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

நீங்கள் நம்பிக்கையின் மற்றும் அமைதியான குரலாக அறியப்படுகிறீர்கள். இங்குள்ள துன்பப்படுபவர்களுக்கு, ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

இந்தியாவுடன் உலக நாடுகள் அனைத்தும் துணை நிற்கும். இந்தியாவின் இந்த துன்பத்தை பார்த்து நாங்கள் வேதனை அடைகின்றோம். அதனால் தான் உலகநாடுகள் இந்தியாவிற்காக உதவ விரும்புகிறது. இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இதனை எதிர்க்கொள்ளுங்கள். அனைவரும் ஒன்றாக இருக்கின்றோம். செனெட் சபையில் நான் கூறியது போன்று இது ஒரு நாள் முடிவுக்கு வரும். நாம் இயல்பு வாழ்க்கையை வாழ்வோம். ஒருவருக்கு ஒருவர் உதவுங்கள். கவனித்து கொள்ளுங்கல். நாம் மீண்டு வருவோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment