மதுபோதையில் கார் ஓட்டிய பெண்: விசாரித்த கான்ஸ்டபிளுக்கு முத்த மழை

மதுபோதையில் இருந்த அந்தப்பெண்ணை காரிலிருந்து வெளியேற்றி விசாரிக்க முயற்சித்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இழுத்து அணைத்து அப்பெண் முத்தமிட்டார்.

கொல்கத்தாவில் மதுபோதையில் காரை இயக்கிய நடுத்தர வயது பெண் ஒருவர், அங்கிருந்த சாலைத் தடுப்பில் மோதினார். இதெல்லாம் ஒரு விஷயமானு கேக்குறீங்களா? ஆனால், அதுக்கப்புறம் நடந்ததுதான் விஷயமே. மதுபோதையில் இருந்த அந்தப்பெண்ணை காரிலிருந்து வெளியேற்றி விசாரிக்க முயற்சித்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இழுத்து அணைத்து அப்பெண் முத்தமிட்டார். இது அங்கிருந்தவர்களை சங்கடத்திற்கும் அதிர்ச்சிக்கும் உட்படுத்தியது.

இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது, கடந்த புதன்கிழமை நள்ளிரவில் 38 வயது பெண் ஒருவர் கேளிக்கை நிகழ்வுக்கு சென்றுவிட்டு மது போதையுடன் காரை ஓட்டி வந்தார். அப்போது, உப்பு ஏரி அருகே கிழக்கு மெட்ரோபாலிடன் சாலையில் வந்துகொண்டிருந்தபோது சாலை தடுப்பில் மோதினார்.

அப்பெண்ணுடன் காரில் ஒரு ஆணும், பெண்ணும் இருந்தனர். சாலை தடுப்பில் மோதிய பிறகு அங்கிருந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் அப்பெண்ணுக்கு உதவ முன் வந்தார். ஆனால், அவரை அப்பெண் தாக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அப்போது, அங்கு பிதான் நகர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அங்கு வந்து காரிலிருந்து அப்பெண்ணையும், அவரது இரு நண்பர்களையும் வெளியேற்ற முற்பட்டார். ஆனால், அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த போலீஸ் கான்ஸ்டபிளை அப்பெண் இழுத்து அணைத்து தொடர் முத்தமிட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கிருந்த மற்றொரு பெண்ணின் உதவியுடன் மது[போதையில் இருந்த பெண் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த பெண் மற்றும் அவருடைய இரு நண்பர்கள் மீதும் மது அருந்திவிட்டு கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.

×Close
×Close