டெல்லியில் திடீரென்று மாறிய வானிலை: புழுதி புயல் தாக்க வாய்ப்பு!

பொதுமக்கள் பாதுகாப்பாக கைப்பேசிகளை பயன்படுத்தவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று (9.6.18) மாலை திடீரென்று மாறிய வானிலை காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் புழுதிப்புயல் தாக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும், 70 முதல் 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் என்றும், புழுதிப்புயலுடன் கூடிய லேசான மழையும் பெய்யும் என்றும் டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு டெல்லியை சுற்றியுள்ள புறநகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. புழுதி புயல் காரணமாக விமானங்களின் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக கைப்பேசிகளை பயன்படுத்தவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close