Advertisment

சிறுபான்மையின மாணவர்கள் உதவித் தொகையில் ரூ.75 கோடி மெகா மோசடி: உ.பி- ல் 22 இடங்களில் இ.டி சோதனை

சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் ரூ.75 கோடி மோசடி செய்ததாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

author-image
WebDesk
New Update
சிறுபான்மையின மாணவர்கள் உதவித் தொகையில் ரூ.75 கோடி மெகா மோசடி:  உ.பி- ல் 22 இடங்களில் இ.டி சோதனை

எஸ்.சி/எஸ்.டி, சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் ரூ.75 கோடி மோசடி செய்ததாக சில கல்வி நிறுவனங்கள் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் 22 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Advertisment

இந்த நிறுவனங்கள் ரூ.75 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை மோசடியாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் 7 வயதுடைய குழந்தைகளின் வங்கிக் கணக்கிலும் மோசடியாக பணம் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் எஸ்.சி/எஸ்.டி, சிறுபான்மையின மாணவர்கள் மற்றம் மாற்றுத் திறனானி மாணவர்களுக்கு பல்வேறு வகை கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன. மேலும் சிலது சிறுபான்மையின மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை நிதியைப் பெறுவதற்கு இந்தக் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் 7 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியதாக இ.டி விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்வேறு நபர்களின் ஆவணங்களை மோசடியாகப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் சுமார் 3,000 வங்கி கணக்குகளை திறந்துள்ளன. பெரும்பாலான வங்கி கணக்குகள் கிராம வாசிகளின் பெயரில் உள்ளன. அவர்களுக்கு இந்த வங்கிக் கணக்குகள் பற்றி எதுவும் தெரியவில்லை. மேலும் இன்று வரை எந்த உதவித்தொகையையும் அவர்கள் பெறவில்லை என்றும் இ.டி தெரிவித்துள்ளது.

முகவர்கள் மூலம் மோசடி

இ.டி விசாரணையில் ரவி பிரகாஷ் குப்தா உட்பட பல்வேறு ஏஜெண்டுகளின் செயல்பாடும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, மொஹமத், சாஹில் அஜீஸ், அமித் குமார் மௌரியா, தன்வீர் அகமது, ஜிதேந்திர சிங் உள்பட ஃபினோ (FINO) பேமென்ட் வங்கியின் பல முகவர்கள் உதவியுடன் முழு மோசடியும் நடைபெற்றது கண்டறியப்பட்டது.

FINO பேமென்ட் வங்கியில் எளிதாக வங்கி கணக்கு திறக்கும் நடைமுறையை தவறாகப் பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளது. லக்னோ மற்றும் மும்பையில் உள்ள FINO வங்கி கிளையில் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் முகவர்களின் உதவியுடன் மின்னணு பணப் பரிமாற்றங்கள் மற்றும் பணம் பெறுதலைச் செய்துள்ளனர். அதன்பிறகு, கல்வி நிதியை நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றின் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய நபர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதி முறைகளின் படி, கல்வி உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நிறுவனங்கள் விதிகளை மீறி FINO வங்கியின் முகவர்கள் மூலம் பணம் பெற்றுள்ளனர். சோதனையின் போது ஏராளமான சிம் கார்டுகள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஸ்டாம்ப், சீல் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கல்வி நிறுவனங்களில் சோதனை

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் குற்றச்சாட்டில் முதன்மை பங்கு வகித்தது தெரியவந்துள்ளது. சோதனையின் போது சந்தேகத்திற்குரிய நபர்கள், அவர்களது குடும்பத்தினர், அவர்கள் தொடர்புடையவர்களின் பெயர்களில் பணமோசடி செய்தது தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டு ஆதாரங்கள் மற்றும் பதிவுகள் பி.எம்.எல்.ஏ, 2002 இன் தொடர்புடைய விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 36.51 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம், 956 டாலர் பணம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன என்று இ.டி கூறியது.

பல்வேறு கல்வி நிறுவனங்களில் சோதனை செய்யப்பட்டதாக இ.டி கூறியுள்ளது. லக்னோ மாவட்டம் மம்பூரில் உள்ள எஸ். எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் வளாகத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஹைகியா பார்மசி கல்லூரி, லக்னோ; ஹைஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் பார்மசி/சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பார்மசி, லக்னோ; லக்னோ மேலாண்மை மற்றும் கல்வி நிறுவனம், லக்னோ; டாக்டர் ஓம் பிரகாஷ் குப்தா மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஃபரூகாபாத்; டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் அறக்கட்டளை மற்றும் ஜிவிகா பார்மசி கல்லூரி, ஹர்டோய்; RP இன்டர் காலேஜ், பட்டாய், ஹர்டோய்; ஞானவதி இண்டர் காலேஜ், தேர்வா, மதோகஞ்ச், ஹர்தோய் மற்றும் ஜகதீஷ் பிரசாத் வர்மா உச்சதர் மத்யமிக் வித்யாலயா, கௌஷ்கஞ்ச், கச்சௌனா, ஹர்தோய்.

ஹைகியா குழுமக் கல்லூரிகள் I.H ஜாஃப்ரி ஆல் நிர்வகிக்கப்படுகிறது. சிவம் குப்தாவின் OP குப்தா இன்ஸ்டிடியூட், பிரவீன் குமார் சவுஹானின் SS நிறுவனம் மற்றும் ராம் குப்தாவின் ஜிவிகா கல்லூரி ஆகியவைகளில் சோதனை செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment