Advertisment

கடல் மட்டத்தில் இருந்து மிக உயரத்தில் வாழும் “பெரிய புள்ளி சிறுத்தைப் புலி”... கிராம மக்களின் ஈடுபாட்டிற்கு கிடைத்த பரிசு

இந்தோ-மியான்மர் எல்லைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் சாராமதி மலைத் தொடர்களில் முதன்முறையாக க்ளவ்டட் லெப்பர்ட் எனப்படும் பெரிய புள்ளிச் சிறுத்தை புலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிறுத்தைப் புலிகள் பொதுவாக கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரம் குறைவான மழைக்காடுகளில் மட்டுமே வாழும் தன்மை கொண்டவை.

author-image
WebDesk
New Update
elusive clouded leopard sighted in Nagaland mountains

நாகலாந்தின் சாராமதி மலைகளில் சுற்றித்திரியும் க்ளவுடட் சிறுத்தைப்புலி

Elusive clouded leopard in Nagaland: இந்தோ-மியான்மர் எல்லைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் சாராமதி மலைத் தொடர்களில் முதன்முறையாக க்ளவ்டட் லெப்பர்ட் எனப்படும் பெரிய புள்ளிச் சிறுத்தை புலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் The Cat News - Winter 2021 ஆய்வறிக்கையில் இந்த பெரிய புள்ளிச் சிறுத்தைப் புலிகள் இருப்பதை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளனர்.

Advertisment

அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ள இந்த பெரிய புள்ளி சிறுத்தைப் புலி ஐ.யூ,சி.என். சிவப்பு பட்டியலில் இடம் பெற்றிருக்கும் உயிரினமாகும். இந்த ஆய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் யாவும் கிழக்கு நாகாலாந்தில் அமைந்துள்ள கிபிர் மாவட்டத்தில் இருக்கும் தனமிர் கிராமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

publive-image

A group of Assamese macaque (Macaca assamensis) in Nagaland. (Photo Courtesy: WPSI/Thanamir Village)

மரம் ஏறும், மத்திய உடல் அமைப்பைக் கொண்ட, காட்டு பூனை இனங்களில் மிகவும் சிறிய உயிரினமான இந்த சிறுத்தைப் புலிகள் பொதுவாக மிகவும் கடல் மட்டத்தில் இருந்து குறைவான உயரத்தில் அமைந்திருக்கும் பசுமைமாறா மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் என்பதால் இந்த மலைப்பகுதிகளில் பெரிய புள்ளி சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் மிகவும் முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Wildlife Protection Society of India (WPSI) என்ற அமைப்பு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. கிழக்கு நாகலாந்தில் உள்ள கிபிர் மாவட்டத்தில் உள்ள தனாமிர் கிராமத்திற்கு சொந்தமான கம்யூனிட்டி வனப்பகுதியில் கேமராக்களை பொருத்தினர். நாகலாந்தின் மிக உயர்ந்த மலைச்சிகரமான சாராமதியில் இந்த வனப்பகுதி அமைந்துள்ளது. தனாமிர் கிராம மக்களும் இந்த அமைப்பும் இணைந்தே, சாராமதி பகுதியில் உள்ள வன உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் முடிவை மேற்கொண்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா ட்ராப்கள் பொருத்தப்பட்டு சாராமதி வனவிலங்குகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Environment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment