Advertisment

8.5% வட்டி செலுத்தத் தொடங்கியது அரசு: உங்க பி.எஃப் பேலன்ஸ் ‘செக்’ செய்தீர்களா?

How to check EFO account balance: ஒவ்வொரு ஈபிஎஃப்ஒ உறுப்பினரும் தங்களது ஈபிஎஃப் கணக்கு நிலையை சரிபார்த்து தெரிந்துகொள்வது அவசியம். ஈபிஎஃப் கணக்கை சரிபார்க்க எளியமையான நான்கு வழிகள்

author-image
WebDesk
New Update
8.5% வட்டி செலுத்தத் தொடங்கியது அரசு: உங்க பி.எஃப் பேலன்ஸ் ‘செக்’ செய்தீர்களா?

EPFO News In Tamil: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ) –ல் உள்ள ஆறு கோடி உறுப்பினர்களுக்கு 2019-20 ஆம் ஆண்டிற்கான 8.5 சதவீத வட்டி விகிதத்தை வரவு வைக்கத் தொடங்கியுள்ளதாக கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது. மேலும் பல்வேறு உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய நிதி அமைப்பு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) வட்டியை வரவு வைத்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஈபிஎஃப்ஒ உறுப்பினரும் தங்களது ஈபிஎஃப் கணக்கு நிலையை சரிபார்த்து தெரிந்துகொள்வது அவசியம்.

Advertisment

அரசு, 8.5 சதவீத வட்டி விகிதத்தை அறிவித்தபோது, ​​அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் சில இது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்பினர். ஆனால், மத்திய நிதி அமைச்சகத்துடன் பல்வேறுகட்ட ஆலோசனைக்கு பிறகே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த  வரவு கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கும் ஒரு ஈபிஎஃப் கணக்கு இருந்தால், உங்கள் கணக்கு இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

  1. ஈபிஎஃப்ஒ வலைத்தளத்தின் மூலம் உங்கள் ஈபிஎஃப் இருப்பை சரிப்பார்க்கும் வழி :

EPFO ​​வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும் (https://www.epfindia.gov.in/) சேவைகளில்’ (Services) கீழ்தோன்றும் மெனுவுக்கு கீழே ‘ஊழியர்களுக்காக’ விருப்பத்தை கிளிக் செய்யவும். அடுத்து கீழே உள்ள ‘சேவைகள்’ பிரிவின் கீழ், ‘உறுப்பினர் பாஸ் புக்’ என்பதைக் கிளிக் செய்க

அடுத்து இணையதளம் அடுத்து வேறொரு பக்கத்திற்கு  திருப்பிவிடும். அங்கு நீங்கள் உள்நுழைய உங்கள் யுஏஎன் (யுனிவர்சல் கணக்கு எண்) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, உங்கள் கணித கேப்ட்சா சரிபார்த்து நிரப்ப வேண்டும்.

இந்த முறை (Method) ஏற்கனவே ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மேலும நீங்கள் புதிதாக ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் பதிவுசெய்தால 6 மணி நேரத்திற்கு பிறகே உங்களது பாஸ்புக் தயாராகும்.

  1. உமாங் ஆப் மூலம் உங்கள் ஈபிஎஃப் இருப்பை சரிபார்ப்பது எப்படி?

கூகிள் பிளே அல்லது ஆப் ஸ்டோர் மூலம் உங்கள் மொபைலில் உமாங் (Umang App) பதிவிறக்கம் செய்துகொள்ளவும். அடுத்து பயன்பாட்டைத் திறந்து ‘EPFO’ என்பதை கிளிக் செய்யவும். இப்போது, ​​‘பணியாளர் மைய சேவைகள்’ (mployee Centric Services) என்பதன் கீழ் ‘பாஸ்புக் காண்க’ (View Passbook’) என்பதைக் கிளிக் செய்க அடுத்து உங்கள் UAN ஐ உள்ளிட்டு Get OTP ஐக் கிளிக் செய்க உங்கள் EPF கணக்கில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP (ஒரு முறை கடவுச்சொல்) அனுப்பப்படும் தேவையான புலத்தில் (Field) OTP ஐ உள்ளீடு செய்து ‘உள்நுழை’ என்பதைத் கிளிக் செய்யவும். இதனைத் தொடர்ந்து உங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஈபிஎஃப் இருப்பைக் சரிபார்க்கலாம்

  1. தவறவிட்ட அழைப்பு (Missed Call)மூலம் உங்கள் ஈபிஎஃப் இருப்பை சரிபார்க்க முடியும்.

உங்கள் மொபைல் எண்ணுடன் உங்கள் ஈபிஎஃப் கணக்கு யுஏஎன் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணில் தவறவிட்ட அழைப்பைக் (Missed call) கொடுங்கள். இதன் மூலம் உங்கள் ஈபிஎஃப் கணக்கின் விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் பெறுவீர்கள்.

  1. எஸ்எம்எஸ் மூலம் உங்கள் ஈபிஎஃப் இருப்பை சரிபார்க்கிறது:

உங்கள் மொமைலில் இருந்து “EPFOHO UAN ENG” என தட்டச்சு (டைப்)செய்து 7738299899 க்கு அனுப்பவும். இங்கே, “ENG” என்ற கடைசி மூன்று எழுத்துக்கள் விருப்பமான மொழியாகும். இதில்  இந்தி, பெங்காலி, மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ் மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு உள்ளூர் மொழிகளில் இந்த சேவை கிடைக்கிறது.

நீங்கள் எந்த உள்நாட்டு இந்திய மொழியிலும் பி.எஃப் செய்தியைப் பெற விரும்பினால், மொழியின் முதல் 3 எழுத்துக்களைத் தட்டச்சு செய்க, அதாவது பெங்காலிக்கு ‘பென்’, மராத்தியுக்கு ‘எம்.ஏ.ஆர்’ மற்றும் பல.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Epfo Epfo Balance Check
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment